10/05/2016

வடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக்கில் இன நல்லுறவில் விரிசல்களைஅது உருவாக்கும்

Afficher l'image d'origine

 (வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பது பற்றிய பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாகாணகளின் வரலாறு பற்றிய மேலதிக புரிதல்களுக்காக ஒரு சில வரலாற்று குறிப்புக்களை சிறு சிறு பகுதிகளாக தரவுள்ளேன்.(எம்.ஆர்.ஸ்டாலின்))

வடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-இரண்டு

வடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக்கில்  இன நல்லுறவில்  விரிசல்களைஅது உருவாக்கும்

பாரம்பரிய தமிழ்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டு வளர்தெடுக்கப்பட்ட மரபுவழித்தாயகம் எனும் கோட்பாடு கிழக்கு மாகாணத்தில் பலநூற்றாண்டு காலமாக இருந்துவந்த இனநல்லுறவையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து இனங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து அழிவுகளை மட்டுமே தந்துவிட்டு சென்றிருக்கிறது.

கடந்த   யுத்த  காலத்தில் கிழக்கில் குறிப்பாக தமிழ் - முஸ்லிம் உறவுகள் மிக மோசமான முறையில் சீரழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மரபுவழித்தாயகம் எனும் கோட்பாடு தோல்வியைத் தழுவிய பின்ர் மூவினங்களுக்குமான கிழக்குமாகாணசபை நிர்வாகம்  உருவாக்கப்பட்டதின் ஊடாக 30 வருடகாலமாக இருந்துவந்த இனமுறுகல் நிலைமைகளை சீர்செய்வதில்  வெற்றிகாணப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகள் முதலாவது மாகாணசபையை நடத்தியதாகும், அதேவேளை தமிழரசுகட்சி இந்த மாகாணசபையை புறக்கணித்து நின்றபோது கிழக்கு மாகாண சபை திறம்பட இயங்கியது.

எனவே பல்லினங்கள் வாழும் கிழக்கு மாகாண மண்ணுக்கு ஒரு இனத்தின் பெயரிலான மரபுவழிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள் பொருத்தமற்றது என்பதை கடந்தகால அனுபவங்கள் காட்டிநிற்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து எழும்புகின்ற  வடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் யதார்த்த சூழலை புறக்கணித்து கிழக்கை வடக்குடன் இணைக்க கோருகின்றது.

இந்த கோரிக்கை மீண்டும் வலு பெற்றால் கிழக்கில் உருவாகிவரும் இன நல்லுறவில் மீண்டும் விரிசல்களைஅது உருவாக்கும்.

1 commentaires :

Unknown said...

Amalgamation of north and east is a dangerous venom for the racial harmoney in the region unless and untill Tamils equally recognize Muslims as an integral part in sharing powers not less than that would Tamils receive in solution to ethnic conflicts.

Muslims are not ready to blindly support the merger since they have learnt lessons from Tamils as being subject to massacres, abduction,bomb blast,genocide and all possible menaces.

Post a Comment