10/13/2016

முன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறைக்கு சென்று பார்வையிட்டார்.

Afficher l'image d'origineமட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி  சந்திரகாந்தனை தனியாக சந்தித்து உரையாடிய பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள்,உத்தியோகஸ்தர்கள் போன்றோர்களுடன் நின்று படங்களும் எடுத்துக்கொண்டார்.

0 commentaires :

Post a Comment