11/08/2016

ரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்

Résultat d’images pour india note cash500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்றிரவு 12 மணி முதல் செல்லாது இனிமேல் அந்த நோட்டுகள் வெறும் காகிதங்கள் தான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும். ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை வங்கிகளில் காட்டி பழைய நோட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையும் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நினைத்து வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ள இந்திய மத்திய அரசு, புதிய வடிவத்தில் ரூ. 2,000, ரூ. 500 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. -

0 commentaires :

Post a Comment