அண்மையில் வாகரை மாங்கேணி சமுர்த்தி வங்கி மண்டூர் சமுர்த்தி வங்கி மாவடிமும்மாரி சமுர்த்தி வங்கி ஆகிய வங்கிகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக முழுமையாக விபரம் தெரிவித்தும் அம்மோசடிகள் மூடிமறைக்க சமுர்த்தி பணிப்பாளர் நடவடிக்கை எடுத்து வருவது எங்களின் கவனத்தில் கொண்டுவரப்பட்டது அத்துடன் இச்செயற்பட்டிற்கு கொழும்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் ஆதரவு வழங்குவதுபோல தெரிகின்றது

ஒக்டோபர் முதல் வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடமை நிமித்தம் வருகைதந்த வடகிழக்கு குறுநிதிய பணிப்பாளர் திரு வஹாப்தீன் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளரும் தற்போது வடகிழக்கு நுண்நிதிய இணைப்பாளரான திரு.அலியார் அவர்களும் மண்டூர் வங்கியினை பார்வையிட்டும் சென்றுள்ளனர்.
ஒரு மோசடி நடந்த வங்கிக்கு வருகைதந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை பலவித சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது
இதற்கு மேலதிகமாக எமது செய்தியின் பயனாக மாங்கேணி வங்கியில் மோசடி செய்த பணத்தின் ஒருபகுதி ரூபா.1045000/= வங்கிக்கு மீளவும் செலுத்தப்பட்டுள்ளது
இதனை மோசடியுடன் தொடர்புபட்ட உதவி முகாமையாளர் திரு சந்திரகுமார் அவர்களின் சகோதரனும் பிரபல ஓட்டமாவடி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் வாகரைப்பிரதேசத்தின் பிரதான செயற்பாட்டாளரினால் வங்கியில் நேரடியாக செலுத்தப்பட்டது
இப்பாரிய மோசடி தொடர்பாக மாவட்டத்தில் தாபன மற்றும் நிதிப்பிரமாணங்களை நெறிமுறைகள் தவறாமல் கடைப்பிடிக்கும் மாவட்ட நிருவாகம் மென்போக்கை கடைப்பிடிப்பதன் மர்மம் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் பல சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
08.11.2016 திகதியன்று மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்குக்கான கூட்டத்தில் மாவட்டப் பணிப்பாளரினால் உத்தியோகத்தரின் மோசடி தொடர்பாக பட்டியல் ஒன்றை வாசித்துக்காட்டி மிகவும் கடும் தொனியில் அச்சுறுத்தி கருத்து தெரிவித்தார் ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித நடவடிக்கையும் அவரால் மேற்கொள்ள முடியவில்லை.
தற்போது கணக்காய்வாளர் நாயகத்திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடுக்கும் மோசடிகளுக்கு சமுர்த்தி பணிப்பாளரின் பதில்தான் ஏன் இதுவரை அவர்களின் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தரினால் இம்மோசடிகள் கண்டுபிடுக்கப்படவில்லை.
இதுவரை கணக்காய்வாளர் நாயகத்திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மோசடிகளை பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளக கணக்காய்வு அதிகாரிகளினால் இனங்காணப்படவில்லை இதற்கு பணிப்பாளரின் பதில்தான் என்ன?
தற்போது வாழைச்சேனை பிரதேசத்தில் மிகவும் பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அத்துடன் மோசடியுடன் தொடர்புள்ளவர் தலைமறைவாக உள்ளமை எமது கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது அணணளவாக 500000/= வரும் என கணக்கார்வு செய்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சமுர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் நேரடியாக விற்பனை செய்து பணமாக்கப்பட்டதை உரிய ஆதாரங்களுடன் கணக்காய்வாளர் நாயகத்திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படித்தியுள்ளனர் குறிப்பாக புதுக்குடியிருப்பு கிண்ணையடி பேத்தாழை போன்ற இடங்களில் உள்ள பயனாளிகளிற்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் விற்பனை செய்து பணமாக்கப்பட்டுள்ளது.
மேற்படி மோசடிகள் மூடி மறைப்பதன் காரணந்தான் என்ன?
இவர்களுக்கு புதிதாக தாபனக்கோவை நிதிப்பிரமாணங்கள் எதுவும் உள்ளனவா?
நீதி எப்போது மக்களுக்கு கிடைக்கும்?
போன்ற பல கேள்விகள் மாவட்டத்தின் திர்வாக மையத்தின் மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் மோசடியுடன் தொடர்பள்ளவர்கள் மாவட்ட பணிப்பாளரின் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது இரகசியமான உண்மை.
ஊழலுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மோசடியுடன் தொடர்புள்ளவர்களின் முழுவிவரமும் வெளியிடப்படும்
நன்றி *வடு நியூஸ்

0 commentaires :
Post a comment