11/04/2016

தமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் நிதிகளை திருப்பியனுப்ப தொடங்கியுள்ளது

 வருடாவருடம் நிதிகளை திருப்பியனுப்புவதில் வடமாகாண சபை பிரபலமானது. தமிழரசு கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் வட மாகாண சபை போல இப்போது கிழக்கு மாகாண சபையும் நிதிகளை திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளது. கிழக்கு மாகாண கல்வியமைச்சர் மாகாண கல்வி பணிப்பாளராக இருந்தவர். வடமாகாண முதலமைச்சர் பிரபல கல்விமான் இவர்களெல்லாம் படித்த முட்டாள்கள் அன்றி வேறென்ன?  கிழக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சி காலத்தில் ஒருபோது பணம் திரும்பியதுமில்லை. மேலதிக நிதியை கூட பெற்று கிழக்கை அபிவிருத்தி செய்தார் அன்றைய முதல்வர் சந்திரகாந்தன் அவர்கள். அவர் படிக்காத மேதை.ஆனால் அவரை சிறையில் அடைத்துவிட்டு மாகாண சபைகளை கேலி கூத்தாக்கி கொண்டிருக்கின்றது தமிழரசு கட்சி.  


மத்திய அரசாங்க வருமானத்தில் இந்த வருடம் கல்விக்காக 6 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியிலிருந்து கிழக்கு மாகணத்திலுள்ள கல்வி அபிவிருத்திக்காக 5400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் 2000 மில்லியன் ரூபாய் மாத்திரம்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள 3400 மில்லியன் ரூபாய் நிதி மீண்டும் மத்திய அரசுக்குத் திரும்பிச் செல்லும் நிலமைதான் ஏற்பட்டுள்ளது.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணதகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு அருகில், “பாடசாலை நல்ல பாடசாலை” எனும் திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன் கிழமை (02) வித்தியாலய பதில் அதிபர். க.பொன்னம்பலம், தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும் இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செலவு செய்யப்படாத நிதி மீண்டும் திறைசேரிக்குத் திரும்பி விடும். அவ்வாறு திரும்பி விட்டாலும் அடுத்த வருடம் அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி அமைச்சு, திட்டமிடல் பகுதி, மாகாண கல்விப் பணியகம், பாடசாலைகள் சேவைகள் திணைக்களம், போன்ற பல நிருவாகக் கட்டமைப்பில் எங்கேயோ ஓர் இடத்தில் தவறு நடந்த காரணத்தினால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது எமக்கு ஒரு துரதிஷ்டமாகும். இதற்கு கிழக்கு மாகாண சபை உண்மையில் பெறுப்புக் கூறித்தான் ஆகவேண்டும் என தெரிவித்தார்.

இந்த கருணாகரனும் இதே  தமிழரசு கட்சியுடன் சேர்ந்து பதவி பெற்று  கிழக்கு மாகாண சபையில்தான்   குப்பை கொட்டுகின்றார் என்பதுதான் வேடிக்கையானது.

0 commentaires :

Post a Comment