உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/11/2016

தோல்வியுற்ற முதலமைச்சர் சி.வி’

  வட மாகாணசபை, ஒரு குழப்பகரமான நிறுவனமாக காணப்படுமாயின், அதன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை வரலாற்றில், மிகவும் தோல்வியுற்ற நிலையில் காணப்படும் ஒரேயொரு முதலமைச்சர் என்றால், அது சி.வி.யே ஆவார் என்றும் குறிப்பிட்டது. 
 இது தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தொடர்ந்து கூறியதாவது, 
“சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள முதலமைச்சர், இலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது அவரது இயலாமையையே வெளிப்படுத்தியுள்ளது. 
இலங்கையல் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அதுவும், இலங்கையில் இனவாதத்தை ஏற்படுத்த அவர் எடுத்த முயற்சியாகும்” என்றும், பிமல் ரத்நாயக்க எம்.பி, மேலும் கூறினார்.     

0 commentaires :

Post a Comment