11/17/2016

கிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை மக்கள் அனுபவிக்கின்றனர். மட்/ முன்னாள் துணைமுதல்வர் ஆ.ஜோர்ஜ் பிள்ளை

Afficher l'image d'origine தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச அதிகாரமான மாகாணசபையினையும் மாற்று சமுகத்திற்கு விட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை சுமந்திரனுக்கு யார் கொடுத்தது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தரும் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் துணைமுதல்வருமான ஆ.ஜோர்ஜ் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.


கொழும்பில் 2008ல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் த...லைவர் அமரர் கு.நந்தகோபனின் 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் தலைமையில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
  

37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் அதிகபடியான 11 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏனைய கட்சியினரை கூட்டுச்சேர்த்துக் கொண்டு ஆட்சியமைக்கக் கூடிய சூழல் காணப்பட்டது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனும் அதற்காக முன்வந்த நிலையில் வெறும் 07 ஆசனங்களை கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியினை விட்டுக் கொடுக்கத் தயார் என 2012ம் ஆண்டு பத்திரிகை அறிக்கை விட்டு முதலமைச்சரை விட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை சுமந்திரனுக்கு கொடுத்தது யார்? அவ்வாறு முதலமைச்சரை விட்டுக் கொடுத்ததன் விளைவு தமிழர்களின் பூர்வீக காணி அபகரிப்பு உட்பட்ட கிழக்கு மாகாணத்தில் நிதி,நிருவாகத்தில் சமத்துவம் இல்லாத பங்கீடு தலைதூக்கியுள்ளது.
 

கிழக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுக்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கின்றது? விவசாய அமைச்சர் விவசாய கண்காட்சி நடத்துவதிலும் கல்வி அமைச்சர் நிதிகளை திருப்பி அனுப்புவதிலுமே அக்கறை காட்டுகின்றனர். மக்களுக்கு ஏதாவது செய்துள்ளனரா என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது.
 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பி எந்த தமிழனும், தமிழ் அதிகாரிகளும் பயணிக்கத் தயாரில்லை. தனித் தமிழ் பேசும் மக்கள் வாழும் இடமெல்லாம் சகோதர மொழி பேசும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் போதாக்குநைக்கு கீழ் நிலை உத்தியோகஸ்தர்கள் கூட ஏனைய மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நோயாளிகள் சென்றால் எந்த மொழியில் தமது வருத்தத்தினை தெரியப்படுத்துவதென்று தெரியவில்லை. இதுதான் தமிழீழம், அல்லது சமஸ்டி பெற்றுத்தரும் இலட்சணமா?என கேள்வியெழுப்பினார்.

0 commentaires :

Post a Comment