உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/12/2016

மலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்கை தமிழர்கள் - தோழர் அணுரகுமார திஸாநாயக்க


Afficher l'image d'origineஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த போது அவர்களுக்கு தேவையான பொளாதார மற்றும் உற்பத்திகளை மேற்கொண்டார்கள். அதற்கு தேவையான வேலையாட்களை இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் , இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக இந்தியர்களை வேலைக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள் பல மாதங்களாக மலையகத்தை நோக்கி நடந்து வந்த போது வழி நெடுகிலும் அநேகர் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்கள். எவ்வளவு தொகையினர் வந்தார்கள். எவ்வளவு தொகையினர் வழி நெடுகிலும் இறந்தார்கள். எவ்வளவு பேர் மலையகத்துக்கு வந்து சேர்ந்தார்கள் என சரியான கணக்கு வழக்குகள் இல்லாமல் போயின. வந்து சேர்ந்தோரை விட வழியில் மாண்டோர் அநேகம்.

1873லிருந்து அதாவது 180 க்கு அதிகமான வருடங்களாக இந்த மக்கள் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்கை வகித்துள்ளனர். அவர்கள் இலங்கை பொருளாதரத்தை உயர்த்த பட்ட பங்கு கணக்கு பார்க்கவே முடியாத அளவு மிக அதிகமானது.

நாம் இவர்களை எமது நாட்டு குடியுரிமையுள்ளோர் என கருத்தில் எடுத்து செயல்பட்டுள்ளோமா? ஏனைய இனங்களுக்கு உள்ள அளவாவது தகுதியை பெற்றுக் கொடுக்க நாம் தவறியுள்ளோம். யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பாக பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார். அதேபோல மலைக மக்களின் இந்நிலை குறித்தும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். 180 வருடங்கள் அந்த மக்கள் படும் துன்பங்களுக்கு எமது ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

மலையக மக்களின் வாக்குகளை பெற்றீர்கள். மலையக தலைவர்களது ஆதரவை பெற்று ஆட்சியை நடத்தினீர்கள். மலையக மக்களின் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் அந்த மக்களிடம் சாந்தா பண பிச்சை எடுத்து பதவிக்கு வந்து , அவர்களும் தனது மக்களுக்கு செய்தது எதுவுமே இல்லை. மலையக மக்களால் தேர்வானவர்களும் , அவர்களை சுற்றியிருந்தவர்களும் தத்தமது சுக போகங்களுக்காக மட்டுமே தமது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டர்களே தவிர , அந்த அப்பாவி மக்கள் ஒரு அடி முன் நகர எந்தவொரு முன்னெடுப்பையும் செய்ததில்லை. அதே நேரத்தில் அந்த மலையக மக்கள் ஒரு படி முன்னேறுவதை தடுப்பதில் , அந்த மலையக தலைவர்களே முட்டுக் கட்டையாக இருந்தார்கள். அவர்கள் முன்னேறினால் தமது அரசியல் தடைப்பட்டு போகும் என்பதால். மலையக தலைவர்கள் , தமது மக்களின் வேதனைகளை தமது அரசியல் வியாபாரத்துக்கு வாக்குகளாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதுதான் சரித்திரம். இதனால் அந்த மலையக மக்கள் கீழ் மட்ட மக்கள் கூட்டமாகியுள்ளார்கள்.

மலையகத்தில் வாழும் 9 லட்சத்தில் , சிங்களவர் மற்றும் இஸ்லாமியர் தவிர்த்து 8லட்சத்து 39 ஆயிரம் இந்திய வம்சா வழியினர் வாழ்கிறார்கள். இந்திய தோட்ட தொழிலாளர்கள் என்கிறார்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் இலங்கை தமிழர்கள். மலையக தலைவர்கள் ஏன் இன்னும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் என ஏன் அழைக்கிறார்கள் என எனக்கு விளங்கவில்லை?
(UNP லக்ஸ்மன் கிரியல்ல இடைமறிக்கிறார்) நான் ஒவ்வொரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் நிலம் இலவசமாக கொடுக்க வேண்டுமென நான் பாராளுமன்றத்தில் ஒரு பத்திரத்தை கொடுத்துள்ளேன். அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அணுர தொடர்கிறார் : அது என்னிடம் இருக்கிறது. இந்த மலையக மக்கள் இந்தியாவுக்கு யுத்த காலத்தில் போனார்கள். இந்தியாவில் , இவர்களை இலங்கை தமிழர் என்கிறார்கள். இலங்கையில் , இந்திய தமிழர்கள் என்கிறார்கள். 3 - 4 தலைமுறையினராக வாழும் இவர்களுக்கு இலங்கை குடியுரிமை இருக்கிறது. வாக்குரிமை இருக்கிறது. அனைவரும் போல இவர்களை இலங்கை தமிழர் என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக தலைவர்களுக்கு வாக்குகளுக்கு இந்திய தமிழர் என சொல்லிக் கொள்வதில் பயன் இருக்கலாம். ஆனால் இலங்கை தமிழராக இவர்களை நாம் அடையாளப்படுத்தல் வேண்டும்.

இலங்கையில் வாழும் மக்களில் பாடசாலை செல்லாதோர் தொகை 4.2. ஆனால் மலையகத்தில் 7.2. முறையான குடி நீர் மற்றும் மலசல கூட வசதிகள் இல்லை. 27 சதவீத மலசல கூட வசதி இல்லா மக்கள் வாழ்கிறார்கள். தமது ஊதியத்தில் 42 சதவீத பணத்தை தமது உணவுக்காக செலவிடுகிறார்கள். பொதுவாக இலங்கையில் ஏனையோர் 37 சதவீதத்தைதான் உணவுக்காக செலவழிக்கிறார்கள். அவர்களது குறுகிய வரவில் பாதி பணம் உணவு தேவைகளுக்கு மலையக மக்கள் செலவு செய்கிறார்கள். லைட் - குடிநீர் - உடை மற்றும் தேவைகளுக்கு மீதி பாதி செலவு செய்ய வேண்டியுள்ளது. அவர்களது உணவு கூட ஏழ்மையான உணவுகள்தான். அதனால் அவர்கள் கெஸ்டிரைட்டிஸ் நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள். அதேபோல மது மற்றும் புகை பிடித்தலுக்கு 7 சதவீதத்தை செலவு செய்கிறார்கள். இலங்கையரின் சராசரியை விட 5 மடங்கு அதிகமானது இது. கல்வியில் 2.7 சதவீதத்தினரே சாதாரண தரத்திலிருந்து , உயர் தரத்துக்கு தேர்வாகிறார்கள். கணணி அறிவு கூட போதியளவு இல்லை. அதாவது கல்வி பகிர்வில் குறைவு இருக்கிறது. குழந்தை இறப்பு 12 வீதம். போசாக்கின்மை 5.6 வீதம். இவை அரச கணிப்பீடுகள். உண்மை இதை விட மேலாகவே இருக்கும். இந்த மக்களின் நிலை கண்டு நீங்கள் வெட்கப்பட வேண்டுமல்லவா? இப்போது ஐதேகவுக்கே அதிக வாக்குகளை அளித்துள்ளார்கள். எனவே அவர்களுக்காக நீங்கள் சில விடயங்களை முன் வந்து நிறைவேற்ற கடமைபட்டுள்ளீர்கள். வீட்டு பிரச்சனை மிக முக்கயமானது. 73சதவீதத்தினர் லைன் வீடுகளில்தான் வாழ்கிறார்கள். நீங்கள் போய் பாருங்கள். இவற்றில் அதகிமானவை தற்காலீக குடிசைகள். அந்த வீடுகள் வீடுகளே இல்லை. துணி - தகடு - உடைந்து விழும் சுவர்கள் இது ஒரு அவல வாழ்வு. மனிதர்கள் மிருகங்கள் போல வாழ்கிறார்கள். அம்பேவெல மாட்டு தொழுவங்களை போய் பாருங்கள். அதை விட மிக மோசமான லையன் வீடுகளில் இம்மக்கள் வாழ்கிறார்கள். இதுவே யதார்த்தம். இதை நீங்கள் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. 2லட்சத்து 493 வீடுகள் தேவைக்கு , கடந்த 23 வருடங்களில் நீங்கள் கட்டிய வீடுகள் 25 ஆயிரத்து 2 வீடுகள் மட்டுமே! வாழ வழி செய்யாத அரசு ஒரு அரசா?

மன்னாரிலிருந்து மலையகம் வரை சாவடித்து சாவடித்து கொண்டு வந்த இந்திய மக்களை நீங்கள் சாவதற்கு வழியாகியுள்ளீர்கள்? சாப்பிட இல்லை - வாழ வழியில்லை - எதிர்கால நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் சாவதை தவிர வேறு என்ன செய்வது? நீங்கள் மலையகத்துக்கு ஒதுக்கியது பிச்சை காசு. இவர்களுக்காக விசேடமான ஒரு பகுதியை தேர்வு செய்து கரிசனை காட்ட வேண்டும். இங்கிருந்து வரும் ஒரு அமைச்சருக்கு அவர்களது பிரச்சனையை தீர்க்க சொல்வதல்ல செய்ய வேண்டியது அது தேசிய காரியம். அதை தேசம் ஏற்று செய்ய வேண்டும். இந்த பகுதியின் பிரச்சனையை தனியொரு பிரச்சனையாக கருதி செயல்பட வேண்டும். 10 வருட திடமொன்றின் கீழ் அவை திட்டமிட்டு நடைமுறைபடுத்தல் வேண்டும். அது எந்த அரசு - எந்த கட்சி வருகிறதோ இல்லையோ அது தடைபடாமல் செயல்படுத்தும் திட்டமாக வரைவு பட வேண்டும். இல்லா விட்டால் இந்த மக்கள் காலா காலத்துக்கும் தலை தூக்க மாட்டார்கள். அங்கிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி வருவோருக்கு தேவையானதை மட்டும் செய்ய இடமளிக்காது தரித்திர தன்மையிலிருந்த அந்த மக்கள் மீண்டு வாழ ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.

0 commentaires :

Post a Comment