உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/13/2016

சமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால் ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்போம்

இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் சமஷ்டியாகவோ, ஒற்றையாட்சியாகவோ இருக்க வேண்டிய  தேவையில்லை. பிரிக்கப்படாத ஒரே நாட்டுக்குள் ஒரு தீர்வு என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.  

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கல்லடி துளசி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'சமஷ்டியைக் கைவிட்டு விட்டோம் என்று சிலர் கூறுகின்றார்கள். ஒற்றையாட்சிக்குள் கூடுதலான அதிகாரம் பெறப்போகின்றோம் என்று மேலும் சிலர் கூறுகின்றார்கள். அவ்வாறு அல்ல நாங்கள் என்பதுடன், நிதானமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதை எமது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துவோம்' என்றார்.
'எமது நாட்டில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், மிகமிக உளப்பூர்வமாக எவ்வாறு விடுதலையைப் பெற முடியும் என்பது தொடர்பிலும்; எங்களுடைய விடயங்கள் தொடர்பில் எதிரிகளை எவ்வாறு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவருதல், நீடித்து நிலைக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக முழுமையான அரசியல் தந்திரம் மற்றும்; அரசியல் உளவியல் என்கின்ற விடயங்களை வைத்துக்கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்' என்றார்.


0 commentaires :

Post a Comment