12/10/2016

பியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி வரவு செலவு திட்டம்

Résultat d’images pour bier  Afficher l'image d'origine பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம் வழங்கப்பட்டமையால் ஒரு பில்லியன் ரூபாய், அரச வருமானம் இல்லாமல் போயுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்ற வரவு-செலவுத்திட்டம் (பாதீடு) இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பியரை இறக்குமதி செய்யும் போது, அதற்கென இறக்குமதி வரி அறவிடப்படவேண்டும். எனினும், அந்நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்கியமையால் பாரிய அரச நிதி இழக்கப்பட்டுள்ளது.

வரி நிவாரணம் வழங்கிய நிலையில் பியரை அந்த நிறுவனம் விற்பனை செய்தமையால், நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது. பியர் இறக்குமதி செய்வதற்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டபோதும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டன. பொருட்களுடன் வந்த கொள்கலனுக்கு வரி அறவிடப்பட்டது இது நியாயமா? பியர் நிறுவனத்துக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அரசாங்கம் போதியளவான நிவாரணத்தை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

0 commentaires :

Post a Comment