உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/17/2017

எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாமாங்கத்தில் விபுலானந்தர்

தமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், நிச்சயமாக விடையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.Résultat de recherche d'images pour "விபுலானந்தர்"
சைவசமயத்தில் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் அதனை கற்பிக்கும் பேராசியர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், எமது நாட்டில் வாழும் ஏனைய தமிழ் மாணவர்களுக்காக பாடப்புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களில் மட்டுமே சுவாமி விபுலானந்தர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஆரம்பகாலத்திலேயே,இலங்கையில்தமிழ்,இசை,சமயம்,விஞ்ஞானம்,அறிவியல்,பல மொழிகளென பல்துறைகளிலும் ஆளுமை பெற்ற ஒரு தமிழ் மகான் வாழ்ந்துள்ளார் என்பது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் விடயமாகும். அப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமை,திறமை மற்றும் அரும்பணிகள் பற்றி ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த அவசர உலகில் நாமாக ஆசைபட்டாலும்கூட விபுலானந்தர் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து வாசிக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனை நன்கு புரிந்து கொண்டவர்களாக, காலத்துக்கு ஏற்ற வகையில் விபுலானந்தரை மக்களிடம் கொண்டு செல்லும் அணுகுமுறையை 'அரங்கம்' நிறுவனத்தார் முன்னெடுத்துள்ளனர்.

இவ்வருடம் விபுலானந்தரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடாவைச் சேர்ந்த பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ரகுலன் சீவகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திலும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம் வெளிவரவுள்ளது. இது, நிச்சயமாக பார்ப்போர் மனதில் விபுலானந்தரின் ஆளுமையையும் புகழையும் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை எம்மிடையே ஏற்படுத்தியுள்ளது. 'அரங்கம்' இலண்டனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இதன் ஸ்தாபகர்களான துக்ஷ்யந்தன் சீவகன் மற்றும் ரகுலன் சீவகன் ஆகியோர் இலங்கை மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் இலை மறை காயாகவுள்ள பல விடயங்களை ஆவணப்படங்களாக தயாரித்து புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றனர்..

அதில் போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், கணவன் அல்லது தந்தையை இழந்து குடும்பத்தை தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள், முன்னாள் போராளிகள், லண்டன் கோயிலொன்றால் மட்டக்களப்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் பற்றிய அரங்கத்தின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் பாராட்டை தட்டிக்கொண்டவையாகும்.

விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ள 'அரங்கம்' நிறுவனத்தின் உறுப்பினரான திருமதி. பரமேஸ்வரி சீவகன் மற்றும் அதன் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் ஆகிய இருவரையும் தினகரன் ஆசிரியர் பீடத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

ஆவணப்படம் தயாரிக்க எத்தனையோ தலைப்புக்கள் இருக்கும்போது ஏன் இந்த விபுலானந்தர்? என்ற கேள்வி எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தோன்றியது. அக்கேள்விக்கான பதிலை பாபு வசந்தகுமார் சுவாரஸ்யமாக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
நான் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவன். இப்பாடசாலை சுவாமி விபுலானந்தரால்ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆங்கிலப் பாடசாலையாகும். தமிழ் பேசும் ஏழைப் பிள்ளைகளுக்காக சுவாமிகள் இப்பாடசாலையை உருவாக்கியிருந்தார். நான் பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்தேன். இதனால் சுவாமிகளின் வழிகாட்டலில் வளர்க்கப்பட்டேன்.அதனாலோ என்னவோ அவர் மீது அளவு கடந்த பக்தியும் மரியாதையும் எனக்குள் ஏற்பட்டது. பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் எனது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் விபுலானந்தரின் நூற்றாண்டு சபை ஆகியவற்றில் நான் உறுப்பினராக செயற்படுகிறேன். நான் புலம் பெயர்ந்து கனடா சென்றபோதும்கூட அங்கே இயங்கும் சுவாமி விபுலானந்தா கலை மன்றத்தில் உறுப்பினர் ஆனேன்.
இந்த மன்றம் மூலம் தமிழ் பிள்ளைகளுக்கு விபுலானந்தர் பற்றிய பேச்சுப் போட்டி மற்றும் இசைப் போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம். விபுலானந்தரின் தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு மெட்டு அமைத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இவ்வாறு எனது பணிகளை நான் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ஒரு தடவை பிபிசி தமிழோசையில் ஒலிப்பெட்டகம் நிகழ்வில் ஒலிபரப்பாளர் சீவகன் பூபாலரத்தினம் விபுலானந்தரின் பெருமைகளைக் கூறுவதை கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதனையடுத்து நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோதே ஒலி ஆவணத்தை ஒளி ஆவணமாக கொண்டு வரும் சிந்தனை என்னக்குள் தோன்றியது. என்றார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏழாம் நாள் திருவிழாவன்று நல்லையா உடையார் குடும்பத்தினரின் உபயத்துடன் இந்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஆவணப்படத்தை தொகுத்து வழங்கும் திருமதி. பரமேஸ்வரி சீவகன், விபுலானந்த அடிகளாரின் ஆளுமை பற்றிய ஒரு சில வார்த்தைகளை தினகரன் வாசகர்களுக்காக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
விபுலானந்தரை வெறுமனே ஒரு துறவியாக மட்டும் பார்க்க இயாலாது. அவர் பல்வகை ஆளுமைகளை உடைய மகான். தமிழ். ஆங்கிலம்,வடமொழியென 09வகை மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். சிவானந்தா பாடசாலை உள்ளிட்ட பல தேசியப் பாடசாலைகளை இவர் ஏழை மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். சாதி,மதம் பாராது அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவர் செயற்பட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த் துறை பேராசிரியராகச் செயற்பட்டுள்ளார்.
மொழிகளைப்போன்றே இசை, நாடகத்துறைகளிலும் இவர் பல ஆய்வுகளை செய்துள்ளார். இத்தகைய அறிஞரைப் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து வைத்திராதது கவலைக்குரிய விடயமாகும். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு இலகுவாக கொண்டு சேர்க்கும் முயற்சியிலேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றும் விளக்கமளித்தார்.
இந்த ஆவணப்படம் லண்டன்,கனடா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்களைக் கொண்டுள்ள இந்த ஆவணப்படத்தில் விபுலானந்தரின் வரலாறு விளக்கப்படுகிறது. விபுலானந்தரை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள் உருவாக்கக் காட்சி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்கள் இந்த ஆவணத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்திய ஒலிப்பதிவுக் கலைஞர்களின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இலங்கையிலும் விபுலானந்தரின் தமிழ் மற்றும் இசையை கற்று வரும் மாணவர்கள், அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், விபுலானந்தரை குருவாக கொண்டவர்களென அனைவரதும் உரையாடல்களும் கருத்துக்களும் இந்த ஆவணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விபுலானந்தர் இந்தியாவில் யாழ்நூலை அரங்கேற்றிய சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவாமிகளைப் பற்றிய நான்கு தலைமுறையினரின் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணம் வெளிவருகிறது.
சுவாமிகளின் 'யாழ் இசை' நூல் மிகவும் அற்புதமானதொரு படைப்பாகும். அக்காலத்தில் அவர் தமிழிசையில் விஞ்ஞானத்தைப் புகுத்தியதன் விளைவாகவே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மற்றும் குழலின் மகிமையை வெளிப்படுத்தும் இந்த நூலை சாதாரணமாக வாசித்து புரிந்துகொள்வதென்பது கடினமான விடயம். அதனை இலகுபடுத்தும் முயற்சியிலும் தற்போது பாபு வசந்தகுமார் களமிறங்கியுள்ளார். அதேபோன்று அக்காலத்தில் எழுந்த ஆங்கிலம் மற்றும் வடமொழி நாடகங்களுக்கு தமிழ் சிறிதும் சளைத்தது அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் விபுலானந்தரால் இயற்றப்பட்ட 'மதங்க சூடாமணி' எனும் நூல் அவரது உச்சக்கட்ட ஆளுமையின் வெளிப்பாடு என்றும் திருமதி.பரமேஸ்வரி சீவகன் எம்மிடம் எடுத்தியம்பினார்.
காலம் மாறிவிட்டது. எழுத்துக்களைவிடவும் ஔிக்காட்சிகள் மனதில் நீங்கா இடம் பிடிக்கக்கூடியவை. ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கும் விபுலானந்தரின் வரலாற்றை இலகுவாகப் புரிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே சுவாமிகளின் ஆளுமையை ஆவணமாக தொகுக்கத் தீர்மானித்தோம் என்றும் பாபு வசந்தகுமார் தெரிவித்தார்.
பல சிரமங்களுக்கு மத்தியிலும் இம்முயற்சியை விடாமல் முன்னெடுத்துச் சென்ற பெருமை பாபு வசந்தகுமாரையே சாரும். இது அவரது ஆரம்பம்.
இதில் குறை நிறைகள் இருக்கலாம். விவாத மேடைக்குச் செல்வதாயினும் கூட இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணங்களாக வெளிவரவேண்டும் என்பதே எமது ஆசை என்றும் திருமதி பரமேஸ்வரி சீவகன் கூறினார்.
விபுலானந்தர் தமிழ் வளர்க்க தன்னை அர்ப்பணித்தார். இன்று மீண்டும் எமது சந்ததியினரிடையே தமிழ் மறக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் பழமையை புதிய வடிவில் மக்களிடையே கொண்டு சேர்க்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
நவீனயுகத்தில் தமிழுக்கும் மறைந்த சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கும் முன்னுரிமையளித்து மறைந்து கிடந்த வரலாற்றுக்கு உயிர் ஊட்டி அதனை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்க பாபு வசந்தகுமார் எடுத்துள்ள இந்த முயற்சியை அரும்பணி என்று கூறுவதிலும் பார்க்க அறப்பணி என்று கூறுவதே மிகப் பொருத்தமாகும். அவரது பணிகள் மேலும் தொடர வேண்டுமென்பதே எமது அவா.


நன்றி *லக்ஷ்மி பரசுராமன், தினகரன் வாரமஞ்சரி
»»  (மேலும்)

7/16/2017

அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவர் எம்.சி.சுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டு நினைவேந்தல்: செப்ரெம்பர் 27/2017

mc6இலங்கையில் நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில், அதிலும் குறிப்பாக தமிழர் பிரதேசமான வடமாகாணம் என்பது மிகவும் கறைபடிந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் எம்மோடும், எமக்கு அருகிலும், ஒரே மொழியை பேசுபவர்களாகவும், ஒரே மதத்தை, பண்பாட்டை கலாசாரத்தை பின்பற்றுபவர்களாகவும் இருந்த ஒரு பிரிவினரை தீண்டப்படாதவர்களாகவும், இழிசனர் என்பவர்களாகவும் அடையாளப்படுத்தி பல்வேறு சமூக ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு காலம் இருந்தது. (தற்போதும் அவை வெவ்வேறு வடிவங்களில் பின்பற்றப்படுவதென்பது வேறுவிடயம்) இவ்வாறான  சமூக ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த காலகட்டத்தில் பலமுற்போக்கு சக்திகள் இணைந்து தீண்டாமைக்கு எதிராக அமைப்பு ரீதியான போராட்டங்களை மேற்கொண்ட வரலாறும் இருக்கிறது.
‘அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை’ ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜென இயக்கம்’ என இவ்விரண்டு அமைப்புகளும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த வரலாற்றை நாம் சுமந்துகொண்டே செல்கின்றோம். இந்த இரண்டு அமைப்புகளும் தமது போராட்டத்தினூடாக பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளை தகர்த்தும் இருக்கிறார்கள். அந்தவகையில் ‘அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக செயல்பட்ட மறைந்த சமூக விடுதலைப் போராளியான எம்.சி.சுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டை நினைவேந்தும் வகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்வதோடு, அவருடைய உருவ சிலையை நிறுவுவதற்கும் அ.இ.சி.தமிழர் மகாசபை தீர்மானித்திருக்கின்றது. அவரை அறிந்தவர்கள், அவருடன் செயல்பட்டவர்கள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனைகொண்ட முற்போக்கு சக்திகள், என அனைவரும் இவ்விழாவை சிறப்பிக்க ஒத்துழைப்பதோடு அவரது உருவ சிலையை நிறுவுவதற்கான ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தலைவர்: பெர்னாண்டோ ஜோசப்
அந்தோனி
தொ.பே: 00 94 (0) 21 222 4863

செயலாளர்: கி.கமலேஸ்வரன்

பொருளாளர்: குணசிங்கம்

ஐரோப்பிய தொடர்பிற்கு: தேவதாசன் 00 33 (0) 6 52 85 79 45

மகாசபை வங்கி கணக்கு Haton national bank .இல: 24102003165
 
»»  (மேலும்)

7/07/2017

யாழ்ப்பாண மையவாத சிந்தனைகளோடு சங்கமிக்காமல் கிழக்கின் பல்லின மக்களின் வாழ்வோடு பயணித்த தலைவர் தங்கத்துரை -20ஆண்டு நினைவலைகள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய‌ அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக‌ வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னராகத் திருகோணமலையில் இடம்பெற்ற வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மொழித் தினப் போட்டியில் வவுனியா மாவட்டத்தில் இருந்து பங்குபற்றி இருந்தேன்.L’image contient peut-être : 1 personne, intérieur

அப்போதுதான் நான் முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். கோணேஸ்வரர் கோயில், கன்னியாய் வெந்நீர் ஊற்றுப் போன்றவற்றினை அப்போதுதான் முதலிலே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் சென்றதாக ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வந்து ஒரு வாரத்தினுள் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற படுகொலைகளினை உதயன் பத்திரிகையில் வாசிக்கும் போது நான் அண்மையில் சென்றிருந்த ஒரு பாடசாலையிலே இந்த கிரனைட் தாக்குதல் இடம்பெற்றிருந்தது என்ற‌ செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் அதே சம்பவத்தில் உயிரிழந்த பொறியியலாளர் திரு ரட்ணராஜா அவர்களின் சகோதரி நான் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்ற இணைந்தார். அப்போது அவர் இந்தச் சம்பவத்தினைப் பற்றி ஒரு முறை என்னிடம் கூறியமை ஞாபகமாக இருக்கிறது. சமூகத்துக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றியவர்கள் ஒரே மேடையிலே கொல்லப்பட்ட சம்பவமாக 1997 யூலை மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் அமைந்தது.
அண்மையில் வடக்குக் கிழக்கில் சுயநிர்ணயம் பற்றிய ஆய்வு ஒன்றின் நிமித்தம் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் (யாழ்ப்பாணம்) வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவற்றினை இணையத்திலே வாசித்துக் கொண்டிருந்த போது தங்கத்துரையின் படுகொலை, அவரது அரசியற் பார்வை, அவர் போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய கிராமிய அபிவிருத்தி சார்ந்த‌ பணிகள், மூவின சமூகத்தவரும் வாழும் திருகோணமலை மாவட்டக் கிராமங்களிலே அவர் இனவேற்றுமை பாராது மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ராஜன் ஹூலினால் தங்கத்துரையின் படுகொலையினை அடுத்து ஆங்கிலத்திலே எழுதப்பட்ட “Murder in Trincomalee and the Tamil Predicament” என்ற‌ கட்டுரை எனது கண்ணிலே பட்டது. கிழக்கின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியும் அங்குள்ள வேறுபட்ட‌ சமூகத்தவர்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் கரிசனை மிக்க ஒருவராக அந்தக் கட்டுரை தங்கத்துரையினை பார்க்கிறது.

2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடித்தொகை அறிக்கையின் படி கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் 39.2% ஆனோர் தமிழர்களாகவும், 36.9% ஆனோர் முஸ்லிம்களாகவும், 23.2% ஆனோர் சிங்களவர்களாகவும் உள்ளனர். இந்தியத் தமிழர்கள், பறங்கியர் முறையே 0.26%, 0.30% ஆக உள்ளனர். இவர்களை விட மலே மற்றும் வேடுவர் போன்ற வேறு சில இனத்தவரும் மிகச்சிறிய அளவிலே கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்றனர். கிழக்கிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் அரசியற் பலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து குன்றத் தொடங்கியிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவும், குறிப்பாக ஆயுதப் போராட்டக் காலத்திலிருந்து, இந்தப் பிராந்தியத்திலே மிகவும் விரிசல் கண்டு போயிருக்கிறது.

கிழக்கின் சிங்களச் சனத்தொகை அதிகரித்தமைக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மிகவும் பிரதானமான‌ காரணமாக அமைந்தன. நாட்டின் ஒரு பகுதியில் தீவிரமான நிலப் பற்றாக்குறை நிலவிய சூழலிலே, நிலவளம் கூடியளவு பயன்படுத்தப்படாத ஏனைய‌ பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினை ஒரு தீய செயற்பாடு என எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்திட முடியாது. ஆனால், அக்குடியேற்றத் திட்டங்கள் இனவெறி நோக்கிலே,  நாட்டில் எண்ணிக்கையில் குறைந்த இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பதற்றங்களையும், பயங்களையும் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட போது அபாயகரமானவையாக மாறின. கிழக்கிலே இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் நோக்கங்கள், விளைவுகள் பற்றியும் பலர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றிலே செல்வதுரை மனோகரன் (1987, 1994), ஜீ.எச். பீரிஸ் (1991), பற்றிக் பீபிள்ஸ் (1990) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் கவனமாக வாசிக்கப்பட வேண்டியவை. இந்த ஆய்வாளர்களின் கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதும், அவர்கள் முன்வைக்கும் வேறுபட்ட வாதங்களைத் தொகுத்தும், தொடர்புகளை ஏற்படுத்தியும், விமர்சனபூர்வமாகவும் வாசிக்கும் போது குடியேற்றத் திட்டங்களைப் பற்றிய‌ ஆழமானதும் பரந்துபட்டதுமான‌ புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினை விட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைகளும், ராஜன் ஹூலினால் எழுதப்பட்ட The Arrogance of Power என்ற நூலும் இந்த விடயம் தொடர்பான விளக்கங்களை வழங்கும் முக்கியத்துவம் மிக்க பதிவுகளாக இருக்கின்றன‌. ராஜன் ஹூலும் அவர் சார்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அரசின் குடியேற்றத் திட்டங்களுக்கு பின்னணியாக இருந்த சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலினை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதேவேளை, குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும், போர்க்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் இராணுவத்தினராலும் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், இழப்புக்களையும் அக்கறையுடனும், அனுதாபத்துடனும் விபரிப்பனவாக அமைகின்றன. குடியேற்றத் திட்டங்களின் அரசியல் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல.


மாறாகக் கிழக்கிலங்கையில் சுயநிர்ணயம் பற்றிச் சிந்திக்கையிலே அங்கு தற்போது அவதானிக்கப்படும் இனப் பன்மைத்துவத்தினை நாம் எவ்வாறு நோக்கலாம் என்பதனைச் சிந்திப்பதற்கான ஒரு அழைப்பாக நான் இந்தப் பதிவினை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் 20ஆம் ஆண்டு நினைவுதினத்தினை ஒட்டி எழுதுகிறேன்.

சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியவாதம், கிழக்கு மாகாணம்
வடக்குக் கிழக்கிலே சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அந்தப் பிரதேசம் தமிழர்களின் மரபு வழித் தாயகம் என்ற அடிப்படையிலே எழுச்சி பெற்றது. இந்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் இருப்பினும், இது தான் உரிமை கோரும் நிலப்பரப்பில் வாழும் எல்லா சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் சமூகத்திலே இருக்கும் பால், சாதிய, வர்க்க, சமய ரீதியிலான முரண்களைப் பேசுவதற்கு ஆதரவாக‌ இருப்பவர்கள் கூட தமிழ் சமூகத்துக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான முரண்களைப் பற்றிப் பேசுவதற்கு சற்றுத் தயங்குவதனை நாம் காண்கிறோம். ஏனைய சமூகத்தினர் ஏனைய தேசங்களுக்குரியவர்கள், எனவே அவர்கள் அக முரண்பாடுகள் பற்றிய தேசியவாத உரையாடலினுள் வர மாட்டார்கள் என்பது இவ்வாறான நிலைப்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு அரசோ அல்லது அரசக் கட்டமைப்போ உருவாகுமானால் அது தனது எல்லைக்குட்பட்டு வாழும் சமூகங்கள் யாவற்றினது நலன்களையும், எல்லோருக்குமான நீதியினையும், சமத்துவத்தினையும் முன்னிறுத்த வேண்டும். இங்கு அகம் புறம் என்ற வேறுபாடுகளை வளர்ப்பது பிரச்சினைக்குரியதும், குரோதங்களைக் கூர்மைப்படுத்தவுமே வழி செய்யும். வடக்குக் கிழக்கிலே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்கு இந்தப் பிராந்தியத்திலே தனிநபர் உரிமைகளே இருக்கின்றன போன்ற எழுக தமிழிலே முன்வைக்கப்படும் வாதங்கள் இன நல்லிணக்கத்துக்கும், பல்லினங்களின் நலன்களையும் உள்ளடக்கிய‌ சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் வலு சேர்க்கமாட்டா என்பதனை இந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்ட விரும்புகிறார்.

தனது சனத்தொகையிலே 98.8%ஆன தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கொண்டு சிக்கல் மிகுந்த வரலாற்றினையும், சனத்தொகைப் பரம்பலினையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி எடுத்த எடுப்பிலே கருத்துக்களை முன்வைப்பது அபாயமானது.தமிழ்த் தேசியவாதத்தின் யாழ். மையவாதத் தன்மையினைத் தங்கத்துரை அடிக்கடி கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் என்பதனை ராஜன் ஹூலின் கட்டுரையின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கிலங்கையின் வரலாறு கூட, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலானது. இது பற்றி எழுதும் வரலாற்றாசிரியரான‌ ட்கமர் ஹெல்மன்-ராஜநாயகம் (1994) மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகள் ஒருபோதும் யாழ்ப்பாண இராசதானியின் கீழ் இருக்கவில்லை என்பதனையும், மட்டக்களப்பு ஒரு காலத்தில் ருகுணு இராசதானியுடனும், மற்றொரு காலத்தில் கண்டிய இரசாதானியுடன் அரசியல் ரீதியில் தொடர்புபட்டிருந்தது என்றும் கூறுகிறார்.

கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் வடக்குக் கிழக்கு இணைப்பினை வலியுறுத்தும் ஒரு போக்குக் காணப்படும் அதேவேளை, தாம் வடக்குடன் இணைகையில் மேலும் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வு கிழக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது (2012ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இணைந்த வடக்குக் கிழக்கின் சனத்தொகை பின்வருமாறு அமையும்: இலங்கைத் தமிழர் – 61.07%, முஸ்லிம்கள் – 23.20%, சிங்களவர்கள் – 15%, இந்தியத் தமிழர் – 0.45%, பறங்கியர் – 0.19%). இந்த நிலைமை கடந்த வருடத்திலே அரசியலமைப்புத் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்தறியும் பணிகள் இடம்பெற்ற போது வெகுவாக அவதானிக்கப்பட்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களிலே, வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக இருப்பதற்கு மாற்றாக‌, நிலத் தொடர்ச்சியற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்றினை அமைப்பது பற்றிய கருத்துக்களும் வெளியிடப்பட்டன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புத் தொடர்பில் இன முரண்பாடுகளைக் கருத்திலே கொண்டு மிகவும் விரிவான முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தது. அவற்றிலே அம்பாறை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு மாகாணத்தின் உருவாக்கம் (இந்த மாகாணத்தின் நிருவாகத்தின் கீழ் விரும்பின் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களைக் கொண்டு வருதல்), அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் உட்புறமாக அமைந்திருக்கும் சிங்களப் பிராந்தியங்களை ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களுடன் இணைத்தல் போன்றன அடங்கும். கண்டி ஃபோரத்தினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்கள் கிழக்கு மாகாணம் தற்போதுள்ளவாறு ஒரு தனி மாகாணமாக இருக்க வேண்டும் எனவும், அதுவே இனங்களுக்கு இடையில் நீண்ட காலத்தில் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தினையும், ஒற்றுமையினையும் வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றன. இந்தக் கோரிக்கைகளிலே சிலவற்றின் பின்னால் அண்மைக் காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகளும், ஏனையவற்றுக்குப் பின்னால் எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் இனவொற்றுமையும் பன்மைத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுவதனை நாம் காணலாம்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் இருந்து கலாசார ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், சனத்தொகை ரீதியிலும் முற்றிலும் வேறுபட்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அந்தப் பிராந்தியத்தின் மக்கள் தமக்குள்ளே உரையாடல்களை மேற்கொள்வதே ஜனநாயகபூர்வமானதும், அவர்களின் சுயநிர்ணய உரிமையினை வலுப்படுத்துவதாகவும் அமையும். இதுவே இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன ரீதியிலான பதற்றங்களும், நிலம் நீர் வளங்கள் மீதான இனத்துவ ரீதியிலான‌ போட்டிகளும் தணிவதற்கு வழியினை ஏற்படுத்தும். வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதுவும், அவர்கள் இழந்துபோன நில நீர் வளங்கள் மீளவும் அவர்களிற்கு அதே வடிவிலோ அல்லது அதற்கு இணையான வேறு வடிவிலோ கிடைக்க வேண்டியதும் இங்கு முக்கியமானது.


தனது அரசியலின் ஆரம்பக் காலங்களிலே கிழக்கிலே மேற்கொள்ளப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்த படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, பிற்பட்ட காலத்திலே இன ஒற்றுமையினை வளர்த்தெடுக்கும் வகையில், திருகோணமலையின் கிராமங்களிலே தனது சேவைகளை இன, மத, கலாசார ரீதியிலான வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கிறார் என்பதனை இவரின் மறைவுக்குப் பின்னர் ராஜன் ஹூல் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நலன்களுக்கும் தங்கத்துரை முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதனை ராஜன் ஹூலின் பதிவில் இருந்து நாம் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்தவாறே, தூய்மைப்படுத்திய தேசியவாத அரசியலினைக் கேள்விக்குட்படுத்தி, பன்மைத்துவத்தினை மதிக்கும் அரசியலிலே ஈடுபட்ட தங்கத்துரையிடம் இருந்து இன்றைய அரசியற் தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், நாமும் கற்றுக்கொள்ளுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.

வடக்கிலும், கிழக்கிலும் தனித் தனியாகவோ, இணைந்தோ சுயநிர்ணயத்துக்கான அரசியல், சமூக முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகையில், அரசியற் தீர்வின் வடிவம் அதன் உள்ளடக்கம் பற்றிப் பேசப்படும் இன்றைய சூழலிலே, தங்கத்துரையின் அரசியல், சமூகப் பணிகள் பற்றியும், திருகோணமலையின் கிராமங்களிலே உட்கட்டுமாண அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றியும், தமிழ்த் தேசிய ரீதியிலான‌ அரசியல் உரிமைப் போராட்டத்துக்கும் கிழக்கின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைவெளிகள் பற்றி அவர் முன்வைக்கும் அவதானங்கள் பற்றியும் ராஜன் ஹூலினால் 1997இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையினை மீளவாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் கட்டுரையின் முக்கியமான பகுதிகளை இந்தப் பதிவின் எஞ்சிய பகுதியில் தமிழிற்கு மொழி பெயர்த்திருக்கிறேன். தற்காலத் தமிழ்ச் சமூகத்திலே அதிகம் பேசப்படாத இந்த அரசியற் தலைவரினையும், அவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அவரது இருபதாவது சிரார்த்த தினத்திலே நினைவுகூரும் ஒரு முயற்சியாகவும் நான் இந்தப் பதிவினையும் மொழிபெயர்ப்பினையும் நோக்குகிறேன்.
ராஜன் ஹூல் (1997): திருகோணமலையில் நிகழ்ந்த படுகொலையும் தமிழ் மக்களின் இக்கட்டான நிலைமையும்
[…]
திரு. தங்கத்துரை பிரதிநிதித்துவம் செய்த திருகோணமலை மாவட்டம் தமிழ்ச் சமூகத்தின் உள் நிலவும் பிரிவுகளினை வெளிப்படுத்தும் ஒரு இடமாகவும் அமைகிறது. திருகோணமலை நகரம் உட்கட்டுமாண வசதிகளினையும், நல்ல பாடசாலைகளையும் கொண்டிருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க அளவிலான நடுத்தர வர்க்கம் ஒன்று வாழ்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், காணிகளின் பெறுமதியும் இங்கு உயர்வாக‌ இருக்கிறது. அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்ட, நகருக்கு வெளியில் இருக்கும் பகுதிகளினைச் சேர்ந்த‌ பாட்டாளி வர்க்க அகதிகள் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் நிவாரணத்திலே தங்கியிருக்கும் மக்களும், நம்பிக்கை இழந்து, கைவிடப்பட்ட நிலையில் வாழும் சிறுவர்களும், உடைந்து கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் இந்தத் தரப்பினரில் அடங்குகிறார்கள். திருகோணமலையின் கைவிடப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இந்த மக்கள் முல்லைத்தீவில் இருந்து, மடு மற்றும் தென்னிந்தியா வரை சிதறுண்டு போயுள்ளார்கள்.
தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாகத் தமது அடையாளத்துடனும், கலாசாரத்துடனும் வாழ வேண்டுமாயின் கிராமிய வாழ்வு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீளமைக்கப்படல் வேண்டும் என்பதிலே தங்கத்துரை தெளிவாக இருந்தார். அகதிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சிதைந்து போகிறது என்பதனை உணர்ந்த தங்கத்துரை திருகோணமலை மாவட்டத்தின் மீள்கட்டுமாணத்தில் கிராமங்களுக்கு பிரத்தியேகமான இடம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். இந்த விடயத்தில் அரசாங்கம் போதியளவு ஒத்துழைப்பு நல்கியதாகவும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் நியாயத்தன்மை அற்றனவாக இருந்ததாகவும் அவர் கருதினார். நீண்டகாலத்தில் இந்தப் பிராந்தியத்தின் அரசியல் பற்றிய கேள்விகள் இந்த நிலத்தில் வாழும் மக்களின் பலத்திலேயே தங்கியிருப்பதனை அவர் உணர்ந்திருந்தார். இந்த வகையிலே ஒவ்வொரு கிராமத்திலும் போதியளவு வசதிகள் கொண்ட ஒரு பாடசாலை, ஒரு வைத்தியசாலை, வீதி, நீர் போன்ற அடிப்படை உட்கட்டுமாணப் பணிகள் இருக்கவேண்டும் என அவர் உணர்ந்தார். இதுவே அகதியாக்கப்பட்ட மக்கள் தமது கிராமங்களுக்கு மீளத்திரும்புவதற்கு வழியினை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று அவர் நம்பினார். இந்த வகையில் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட நேர்முகமான மாற்றங்கள் அவருக்கு உற்சாகத்தினைக் கொடுத்தன.
தங்கத்துரை நகரப் பகுதியினைப் புறக்கணிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், இந்த விமர்சனம் நியாயமற்றது என்று அவர் கருதினார். நகர்ப்புறத்தினைச் சேர்ந்தோர் தமிழ் மக்களின் பிரச்சினையின் ஆழம் தொடர்பிலும், கிராமப்புறங்களிலே இருந்த பிரச்சினைகள் தொடர்பிலும் உணர்வுபூர்வமற்றவர்களாக இருந்ததாகவே அவர் உணர்ந்தார்.
கிழக்கிலே தமிழ் மக்களின் நலன்களும் எதிர்காலமும் அந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியிருக்கிறது என அவர் திடமாக நம்பினார். கிண்ணியாவினைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ மஜீட்டினை ஒரு நெருங்கிய நண்பராகவே தங்கத்துரை கருதினார். 1988இல் மஜீட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை அவரைக் கவலையும், ஏமாற்றமும் அடையச் செய்தது. மீள்கட்டுமாணப் பணிகளினை மற்றவர்களுடன் இணைந்து சுமூகமான முறையில் முன்னெடுத்தமையும், சக‌ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பான தனிப்பட்ட உறவுகளைப் பேணியமையும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தங்கத்துரையினது வெற்றிகரமான செயற்பாடுகளுக்குப் பங்களித்தன‌.
கிராமிய வாழ்வுடன் ஒன்றிப் போன ஒரு மனிதனாகத் தங்கத்துரை விளங்கினார். அவருடன் கலந்துரையாடுவது, கலந்துரையாடுவோருக்கு அறிவூட்டும் வகையிலே அமைந்தது. சாதாரண கிராமப்புற மக்களினை அரச அலுவர்கள் எவ்வளவு தூரம் உண்மையாகவும், அக்கறையுடனும் நடாத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் தங்கத்துரை அவர்களை மதிப்பிட்டார். ஈச்சிலம்பத்தை போன்ற பின் தங்கிய தமிழ்க் கிராமங்களை முன்னேற்றுவதற்காக உழைத்த சிங்கள ஊழியர்களை அவர் மனதாரப் பாராட்டினார். அதேநேரம் தம்மிடம் இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையாற்றத் தவறிய தமிழ் அலுவலர்கள் குறித்து அவர் தீவிரமாக விமர்சித்தார். கோமரன்கடவலப் பகுதியிலே நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சிங்களக் கிராமத்துக்கு ஒரு வீதியினை அமைத்துக்கொடுத்தமையினை, மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக 1981ஆம் ஆண்டு இருந்தபோது தான் செய்த பெருமைக்குரிய விடயமாகத் தங்கத்துரை கருதினார்.
இவ்வாறான ஒரு வித்தியாசமான முறையில் தங்கத்துரை செயற்பட்டமைக்கு எவ்வாறான காரணிகள் அவரை ஊக்குவித்திருந்திருக்கக் கூடும் என்பதனை விளங்கிக்கொள்ளுவதற்கு அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்வின் தீவிரமான பக்கங்களை நாம் பார்க்க வேண்டும். அல்லைக் குளத்தின் கரையிலே, மூதூர் (கொட்டியாரம்) பிரதேசத்தின் மிகவும் பழமை வாய்ந்த‌ உட்கிராமமான கிளிவெட்டியினைச் சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய தந்தையார் கிராமியப் பதிவாளராக இருந்தார். சட்டத்தரணியாகி, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைவதற்கு முன்னர் அவர் நீர்ப்பாசன திணைக்களத்திலே பணியாற்றினார். 1950இல் அல்லைக் குடியேற்றத்திட்டத்தின் மூலமாக தங்கத்துரையின் கிராமத்திலே சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போது, இன ரீதியிலான பதற்றங்கள் அங்கு தீவிரம் அடைந்தன. ஆனால், தங்கத்துரையின் மனதிலே இனவாதத்துக்கு இடம் இருக்கவில்லை. தனது வாழ்வாதாரத்துக்காக நிலத்தினைப் பண்படுத்திக் கடினமாக உழைக்கும் ஒரு தமிழ் விவசாயியினை அவர் எவ்வாறு பாராட்டினாரோ அதேபோலவே வருந்தி உழைக்கும் ஒரு சிங்கள விவசாயியினையும் அவர் பாராட்டினார். தெஹிவத்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களுடனும் தங்கத்துரைக்கு நெருக்கமான உறவுகள் இருந்தன. தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்கள மக்கள் தயிர் போன்ற பொருட்களை வாங்குவதற்காக கிளிவெட்டிக்கு வருவார்கள். அந்த மக்களின் குடும்ப நிகழ்வுகளுக்கான பதிவாளராக தங்கத்துரையின் தந்தையார் விளங்கினார். 1996ஆம் ஆண்டு குமாரபுரத்திலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, படுகொலையினை நிகழ்த்தியவர்களையும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இலங்கை இராணுவத்தின் கேர்ணலினையும் பற்றி முக்கியமான தகவல்களைத் தங்கத்துரைக்கு வழங்கியவர்கள் தெஹிவத்தையினைச் சேர்ந்த சிங்களவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அரச ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்கள் குறித்து கரிசனையினை வெளியிட்டு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே சுறுசுறுப்பாக தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலே தங்கத்துரை பணியாற்றியமை இயல்பான ஒரு விடயமே. அரசின் குடியேற்றத்திட்டங்கள் காரணமாக  உள்ளூர் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு நிலைமயினை உணர்ந்தார்கள். தங்கத்துரையின் சொந்த ஊரான கிளிவெட்டியும் பிரச்சினையின் மையங்களில் ஒன்றாக இருந்தது. 70களிலே தங்கத்துரையும் யோகேஸ்வரனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே இருந்த தீவிரத்தன்மை மிக்க இளைஞர்களாகப் பார்க்கப்பட்டனர். சனத்தொகையின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை முறியடிக்கும் நோக்கில், தங்கத்துரையின் குடும்பத்தினர், குறிப்பாக அவரும், அவரது சகோதரர் குமாரத்துரையும் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் அங்கு தமிழ்க் குடியிருப்புக்களை ஏற்படுத்தும் முயற்சிகளிலே ஈடுபட்டனர். மிகவும் கடினமான சூழ்நிலையினை அவர்கள் இந்தக் காலப் பகுதியில் எதிர்கொண்டதுடன், தங்கத்துரை 70களிலே கைதுசெய்யப்படும் நிலைமையினையும் எதிர்கொண்டார்.
1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் நிலைமை மிகவும் மோசமாகியது. நாட்டில் பொதுவாகவே அரச அடக்குமுறை மேலும் தீவிரமான‌ நிலையில், 1984 ஜனவரியில் தங்கத்துரையின் சகோதரர் குமாரத்துரை கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் பதியப்படாத நிலையிலும் அவர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், தங்கத்துரை தொடர்ந்தும் திருகோணமலையிலே இருந்தார். 1985 மே மாதத்திலே இந்தப் பகுதியிலே இனப் பதற்றநிலை மேலும் தீவிரமடைந்து, இலங்கைப் படையினருக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இனரீதியிலான தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி இரவு பொலிஸாரின் ஒரு குழுவினர் கிளிவெட்டியின் தெற்குக் கரைக் கிராமம் ஒன்றில் நுழைந்து பெண்கள் உள்ளடங்கலாக அங்கிருந்த 36 தமிழ்ப் பொதுமக்களினைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்தப் பொதுமக்கள் யாவரும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். மறுநாட் காலை கிராமத்தினுள் நுழைந்த இராணுவத்தினர் கிராமத்தினை விட்டு வெளியேறிச் செல்லாதிருந்த வயோதிபர்கள் உள்ளடங்கலாக 8 பேரினைச் சுட்டுக் கொலை செய்தனர். திருகோணமலையில் அப்போதிருந்த லண்டன் ரைம்ஸின் செய்திச் சேகரிப்பாளரிடம் இந்தச் சம்பவம் குறித்து தங்கத்துரை பேசியதனை அடுத்து இந்தச் சம்பவம் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகியது (இதே காலப் பகுதியில் தெஹிவத்தையில் 18 சிங்களப் பொதுமக்கள் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தோரின் தாக்குதல்களில் பலியாகினர்). இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கத்துரை வதந்திகளைப் பரப்பினார் என அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியினால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையினை எதிர்கொண்ட போது நாட்டை விட்டுத் தப்பியோடி அவர் இந்தியாவிலே தஞ்சம் அடைந்தார். 1986இல் குமாரத்துரை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது அவரது கிராமமே இல்லாது போயிருந்தது. அவர் டென்மார்க்கிலே தஞ்சம் புகுந்தார்.
இவ்வாறான துன்பமான‌ அனுபவங்கள் பலவற்றினைச் சந்திக்க நேர்ந்த போதிலும், சட்டரீதியாக வரைவிலக்கணம் செய்யப்படும் உரிமைகளே எமக்கு முக்கியமானவை என்ற கருத்தினை முன்னிறுத்திச் செயற்பட்ட யாழ்ப்பாணத்தின் மத்திய தர வர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட‌ தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியவாதத்தினை தங்கத்துரை கேள்விக்குட்படுத்தியே இருந்தார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் அமைச்சர்கள் தமது பிரதேசங்களுக்கு வரும் போது அந்த வருகையினைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரப்பட்டனர். சில சமயங்களில் தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திலே தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கினாலும் அமைச்சரவைப் பதவிகளைப் பெறுவதற்கு அது தயங்கியது. வடக்கினைப் பொறுத்த வரையில் இந்த அணுகுமுறை பரவாயில்லை. ஆனால், பல சமூகங்கள் வாழ்ந்துகொண்டிருந்த கிழக்கிலே இந்த அணுகுமுறை தமிழ்ச் சமூகம் மேலும் பின் தங்கிச் செல்லும் நிலையினை ஏற்படுத்தியது. ஏனைய இனத்தவர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று முன்னேறிச் சென்ற‌ வேளையில் தமிழர்கள் கைவிடப்பட்ட நிலையில் கசப்புணர்வு மிக்கவர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். 1970களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, நல்ல விடயங்களைச் செய்வதற்காக‌ அமைச்சர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவிப்பது ஓர் அர்த்தமற்ற செயன்முறை எனத் தங்கத்துரை தனது கட்சியிடம் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் ‘உரிமைகளை’ விளங்கக் கூடியவர்கள்; ஆனால், அவர்களுக்கு வீதிகள், குளங்கள், கால்வாய்கள், பாலங்கள் போன்றன எல்லாம் விளங்கமாட்டாது என அவர் ஒருமுறை என்னிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மேலும், சிங்களவர்களுடன் வாழ்ந்தவர் என்ற வகையில் தங்கத்துரைக்கு சிங்களவர்களை மனிதர்கள் என்ற ரீதியிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவருடைய தொகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான சிங்களவர்கள் வாழ்ந்தனர். அவர் பதவியில் இல்லாத காலங்களிலும் கூட அவரின் சேவைகளைப் பெறுவதற்காக அவருடைய முன்னைய கந்தளாய்த் தொகுதியினைச் சேர்ந்த‌ சிங்கள மக்கள் அவரினை நாடியமையினை நான் கண்டிருக்கிறேன். தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு தமிழ்த் தேசியவாதம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு நண்பர்களைப் பெற்றுத் தரமாட்டாது என்பதனையும் தங்கத்துரை அறிந்திருந்தார். நீர்கொழும்பில் இருந்து வந்திருந்த இடம்பெயர்ந்த மீனவர்கள் ஒருமுறை தன்னிடம் குறிப்பிட்ட சில உருக்கமான விடயங்களை அவர் என்னிடம் பகிர்ந்தார்: “ஐயா, எங்களுடைய தாய் மொழி தமிழ்; ஆனால், றோமன் கத்தோலிக்கத் திருச்சபை நாம் தமிழிலே வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. இப்பொழுது உங்களுடைய மக்களும், உங்களுடைய அலுவலர்களும் கூட எங்களை நிராகரிக்கிறார்கள். எங்களுடைய பிள்ளைகளுக்கு உங்களுடைய பள்ளிக்கூடங்களிலே படிப்பதற்கு இடம் கொடுங்கள்.”
சிங்களவருடன் வாழவே முடியாது என்ற‌ முடிவுக்கு தங்கத்துரை ஒரு போதும் வரவில்லை. ஆனால், பொதுவாக‌ சிங்கள இராணுவத்தினரையும், சிங்களப் பொலிஸாரினையும் மட்டுமே கண்டிருந்த மக்கள் வாழ்ந்த‌ வடக்கிலே இதற்கு மாறான கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தின‌. இலங்கை அரசு என ஒருமைப்படுத்தப்பட்ட நிலையிலே வடக்கிலே பார்க்கப்பட்ட அமைப்பின் வெடிப்புக்களின் ஊடாக தங்கத்துரை தனது பார்வையினைச் செலுத்தினார். அங்கு அவர் மனிதத் தன்மையினையும் கண்டுகொண்டார்.
தென்னிலங்கையிலும் சில பிரச்சினைகள் இருந்தன என்பதனை தங்கத்துரை அறிந்திருந்தார். வேதனையினைத் தரும் ஒரு கிளர்ச்சிவாதமும், இனப் பிரச்சினை தொடர்பாக‌ சிங்கள மக்களின் மனப்போகிலே மாற்றங்கள் ஏற்பட்டமையினையும் அவர் கவனித்தார். அரசு ஒருபோதும் அசையமாட்டாது என்ற வாதமும் அவரைப் பொறுத்த வரையிலே பலவீனமுற்ற ஒன்றாக இருந்தது. இந்த அனுபவங்களை எல்லாம் பெற்றிருந்த தங்கத்துரை கொழும்பில் இருந்தபடி தீவிரத் தன்மை மிக்க அரசியல் பேசுவதனைக் காட்டிலும், அகதியாக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வு முக்கியமானது எனக் கருதினார். இந்த நோக்கத்துக்காக அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். அவருடைய செயற்பாடுகள் யாவும் எளிமை மிக்கனவாகவும் அமைதியான முறையில் பற்றுறுதியினை வெளிப்படுத்துவனவாகவும் இருந்தன.
தமிழ்த் தலைவர்களின் மத்தியில் தங்கத்துரைக்கு இருந்த சில விசேடமான குணாதிசயங்களையும், அவரின் தனித்துவத்தினையும் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நாம் சென்று கொண்டிருக்கும் மரணப் பாதையில் இருந்து சமூகத்தினை மீட்டெடுக்க அவர் தனக்கே உரிய வகையில் பாடுபட்டிருக்கிறார்.
தங்கத்துரை போன்றோரின் கொலைக்குக் காரணமான அரசியல் […], அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் ஓர் அரசியலே. இந்த வகையில் அழிக்கப்பட்டவர்களிடம் இருந்தும், அரசியல் ரீதியாக மௌனமாக்கப்பட்டவர்களிடம் இருந்தும் நாம் கற்பதற்கு நிறையவே இருக்கின்றன. அதன் மூலமாகவே எமது சமூகம் உயிர்ப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இவ்வாறான ஒரு அரசியலே பிறழ்வான மனங்களுக்கும், வெறுமையான மனங்களுக்கும் ஒரு தடுப்பாக அமையும். எங்களுடைய நன்மைக்காகவேனும், நாம் இந்தக் கொலைகளிற்கு எதிராக எமது கோபத்தினை இப்போதாவது வெளிக்காட்டுவோமா?
[…]
மகேந்திரன் திருவரங்கன்(நன்றி *மாற்றம் )
»»  (மேலும்)

7/03/2017

மக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கு பெருகி வரும் ஆதரவு அலை.

சுமார் இரண்டு வருடமாக மக்களை சந்திக்க முடியாதிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கு பெருகி வரும் ஆதரவு அலை.-

Kulanthaivel Navaneethan Résultat de recherche d'images pour "pilayan tmvp"


கிழக்கு மாகாண சபை கலைக்கப்படவுள்ள நிலையில் கிழக்கின் தமிழர் நிலையை மேம்படுத்த பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
அந்த வகையில் நானும் ஒரு முக்கியமான விடயத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.


கிழக்கில் தமிழர்களின் ஓரளவான செல்வாக்கையுடைய சிறிய கட்சிகளும் தனி நபர்களும் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்பதே அந்த விடயம்.
குறிப்பாக பிள்ளையான் எனப்படும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
இன்னும் பலர் கருணா அம்மானையும் இணைக்க வேண்டும் எனச் சொன்னாலும் அவர் தேர்தலில் போட்டியிட விரும்புவாரா அல்லது அவரது புதிய கட்சி தேர்தலில் இறங்குமா என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.
அத்தோடு கிழக்கில் பிள்ளையானுக்கு உள்ள ஆதரவுத்தளம் அவருக்கு இல்லை.


எனவே கருணா அம்மானை கூட்டமைப்பில் இணைப்பது பற்றி நான் கரிசனை கொள்ளவில்லை.
அதே நேரம் மட்டக்களப்பில் உள்ள மக்கள் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகவே எனது கருத்தை வெளிப்படுத்துகிறேன்.
நான் மற்றையவர்களைப் போல ஒரு மூலையில் இருந்து முகநூலை மட்டும் பார்த்து முகநூலில் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவன் அல்ல.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டக்களப்பின் ஒவ்வொரு பகுதிக் கிராமங்களுக்கும் சென்று வருபவன்.
அந்த வகையில் மட்டக்களப்பின் கிராமப் பகுதிகளில் மக்கள் விரும்பும் அரசியல்வாதிகளாக ஒரு சிலரே உள்ளனர்.
அதில் பிள்ளையானை முதலாவதாக மக்கள் விரும்புகின்றனர்.
கூட்டமைப்பிலுள்ள ஜனாவுக்கு கிராமங்களில் அதிகமான செல்வாக்கு உண்டு.
சில பகுதிகளில் துரைரட்ணத்திற்கும் உண்டு.
கடந்த காலங்களில் கூட்டமைப்புக்காக தேர்தல் நேரங்களில் கடுமையாக உழைத்த எனக்கு இந்த விபரங்கள் அதிர்ச்சியாகவே இருந்தன.
காரணம் மேலே குறிப்பிடப்பட்ட கூட்டமைப்பை சேர்ந்த இருவரையும் சேர்த்து மூவருக்கும் எதிராகவே கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரம் செயற்பட்டேன்.
அந்த நேரத்தில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன்,அமல் ஆகியோரை முன்னிலைப்படுத்தியே எனக்கு அறிமுகமான மக்களிடம் வாக்களிக்க கூறியிருந்தேன்.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான தமிழ் உறுப்பினர்களைப் பெறக்கூடிய மாவட்டம் மட்டக்களப்பு.
மட்டக்களப்பில் பிரிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கே காரணமாக அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவே கூறப்படுகிறது.
அவர்கள் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கேட்பதற்கு தயாராகிவிட்டனர்.
அத்தோடு மட்டக்களப்பில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனாந்தமூர்த்தி ஆகியோரை மட்டக்களப்பில் நிறுத்தி தமிழர்களின் கணிசமான வாக்குகளைச் சிதைக்க ஏற்பாடாகியுள்ளது.
அதேநேரம் பிளையானையும் இணைத்து ஐக்கிய தேசியக் கட்சியடன் தேர்தலில் நிறுத்தும் முயற்சியும் உள்ளதாக அறியமுடிகிறது.
அது சாத்தியமானால் கணிசமான தமிழ் வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் கூடுதலான முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகுவார்கள்.
மீண்டும் சாமர்த்தியமாக முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்று கிழக்கில் தமிழர் இருப்பை சிதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தமிழர் தரப்பு கடந்தகால கதைகளையும் பொயான பொறுப்புக் கூறல் என்ற விடயத்தையும் கூறி பிள்ளையானையும் இணைத்து தேர்தலில் நிற்பதை தவிர்த்தால் கிழக்கு மக்களின் நிலை மேலும் மோசமடைவதை யாராலும் தடுக்க முடியாது.


பிள்ளையான் மீது எத்தனை குற்றச்சாட்டுக்களச் சுமத்தினாலும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள்,மாவீரர் குடும்பங்கள் என கணிசமானவர்களை கரிசனையோடு அரவணைத்த பெருமை பிளையானுக்கு உண்டு.
கிழக்கில் கணிசமான அபிவிருத்திகளைச் செய்த பெருமையும் பிளையானுக்கே உண்டு.
கிழக்கில் அதிக தமிழ் மக்களுக்கு அரச வேலைகளைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் பிள்ளையானுக்குரியதுதான்
.

மட்டக்களப்பின் அடையாளத்தை வெளிப்படுத்த அவரால் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை காழ்ப்புணர்வின் காரணமாக கைவிட்டவர்கள்தான் எமது அரசியல்வாதிகள்.
அந்த நூலகத்தை முடிவடையச் செய்யவாவது பிள்ளையான் தமிழர் அரசியலுக்கு அவசியம்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிழக்கு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பொய்யான காரணங்களைத் தவிர்த்து கிழக்கு மாகாண தேர்தலுக்காக மட்டுமேனும் பிள்ளையானை இணைத்து தேர்தலில் களமிறங்க முன்வரவேண்டும்.
வடக்கு முதல்வர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கைவிட்டதுபோல கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
அவ்வாறு மதிப்பளிக்காது தன்னிச்சையாகச் செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்குமாயின் அது கிழக்கு தமிழ் மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே இருக்கும்.
கிழக்கில் தொடர்ந்தும் கூடமைப்பின் வெற்றிக்காக பாடுபடும் இளைஞர்கள் கூட்மைப்பை புறமொதுக்கும் நிலை உருவாகும்.
கிழக்கில் கூட கூட்டமைப்பின் ஆதரவுத்தளம் கேள்விக்குறியாகும்.
எனவே அன்பான கிழக்கு இளைஞர்களே..
கிழக்கின் புத்திஜீவிகளே...
பொதுமக்களே...
கிழக்கு மாகாணத்தில் தமிழரின் இருப்பை தக்க வைக்கவும், நலிவுற்ற எமது கிழக்கு மக்களின் வாழ்வை ஓரளவாவது மீட்டெடுக்கவும் வேற்றுமைகளையும் பழைய கசப்பான அனுபவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைக்க கிடைத்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம்.

நன்றி -முகநூல்
»»  (மேலும்)

6/27/2017

47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

  படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை
புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.

  எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வு  கொட்டகலை யில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.சுமார் முப்பது வருடகாலமாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இந்த சந்திப்பு தொடரானது யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்டு வருகின்றது.

  47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

  முதல் நாள் அரங்கு 29.07.2017
  நேரம் காலை 9- பகல் 12
  மீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்
  மலையகம் -ஆய்வு 
  அளிக்கை கிழக்கு -ஆய்வு 
  அளிக்கை வடக்கு -ஆய்வு 
  அளிக்கை சிங்கள நாட்டாரியல்

  பகல் 01- மாலை 04.00
  சி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம் 
  நாவல் /சிறுகதை/கவிதை
  மலையகம்
  வடக்கு
  தென்னிலங்கை

  மாலை 4.30 
  அரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்


  இரண்டாம் நாள் - 30.07.2017
  நேரம் காலை 9- பகல் 12 
  திருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்
  மலையகம்
  மட்டக்களப்பு
  தென்கிழக்கு
  வடக்கு
  சிங்கள அரங்கியல்

  பகல் 01- மாலை 03.00
  கே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்

  மாலை 03.30- 5.30
  நடேசய்யர் அரங்கு - அரசியல்

  மாலை 6.00 
  ஆவணப்படம்

  ஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

  இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.

  புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களைஒன்றுகூட்டும்ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 

  இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.

   அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய  சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.
  ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.

»»  (மேலும்)

6/26/2017

மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்

பப்லுவுக்கு நிற்கக்கூட நேரமில்லை. ரமலான் மாதம், ஈகைத் திருநாள், எத்தனை வேலைகள்? கான்பூரில் இருக்கும் மசூதியின் துப்புரவுப் பணியில் பப்லு ஈடுபட்டிருக்கிறார்.மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்
சுமார் நூறு ஆண்டுகளாக இந்த மசூதியின் பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியில் பப்லுவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். பப்லு மூன்றாவது தலைமுறையாக பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.
முதலில் பப்லுவின் தாத்தா, பிறகு பப்லுவின் தாய், இப்போது பப்லு என மூன்று தலைமுறையாக ஒரு இந்துக் குடும்பம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு மசூதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளது வியப்பூட்டும் தகவல்.என் தாத்தா மஹாவீர், பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கான்பூருக்கு வந்துவிட்டார்."
"தற்போது கான்பூர் பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் மணிக்கூண்டு இருந்தது. என் தாத்தா ஐந்து நாட்கள் பட்டினியாக இருந்து வேலை தேடினார், வேலையும் கிடைக்கவில்லை, பசியும் அடங்கவில்லை" என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் பப்லு.
"அப்போது இந்த மசூதியின் பொறுப்பாளரான மெளல்வி ஃபக்ருதினை சந்தித்தார் தாத்தா. மெளல்வி ஐயா, என் தாத்தாவை மசூதிக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்தார். இங்கேயே தங்கிவிட்ட எனது தாத்தாவுக்கு துப்புரவு பணி கொடுக்கப்பட்டது" என்கிறார் பப்லு.ஈத் பண்டிகைக்கு முன்னர் மசூதி முழுவதையும் சுத்தம் செய்து, நமாஸுக்கு வருபவர்களுக்காக தயார் செய்துவைப்பார் தாத்தா" என்று நினைவலைகளை தொடர்கிறார் பப்லு.
மஹாவீருக்கு இருக்க இடமும், செய்ய ஒரு வேலையும் கிடைத்தது, பிறகு அவருக்கு திருமணமும் நடந்து, நான்கு குழந்தைகளும் பிறந்தது. அவரது குடிசையானது காலப்போக்கில் ஒரு கட்டடமாக உயர்ந்துவிட்டது.
தந்தையின் பணியை தொடரும் மகன்
அன்று மஹாவீரால் தொடங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியை அவரது 45 வயது பேரன் பப்லு தற்போது தொடர்கிறார்.
ஈகைத் திருநாள் வருவதையொட்டி, 15 நாட்களுக்கு முன்னரே துப்புரவுப் பணிகளை பப்லு தொடங்கிவிடுகிறார். பண்டிகையன்று சிறப்புத் தொழுகைக்காக அனைவரும் வருவார்கள் அல்லவா?
எல்லா இடங்களிலும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கான்பூரின் மத்தியில் பேஜாஜ்பர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மசூதியில் உயரமான பச்சை பசேலென்ற மரங்கள் நெடிதுயர்ந்து நிற்கின்றன. மாமரம், புளியமரம், வேம்பு, எலுமிச்சை, பலா என பலவகையான 600 மரங்கள் இங்கு உள்ளன.
"இங்கு இருக்கும் மரங்கள் எல்லாம் என் தாத்தாவால் விதைக்கப்பட்டது, இப்போதும் பலனளிக்கிறது" என்று பெருமையுடன் சொல்கிறார் பப்லு.
1984 ஆம் ஆண்டு மஹாவீர் இறந்துபோனதும், பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணி பப்லுவின் தாயார் தெளலத் தேவியின் கைக்கு வந்த்து.
தெளலத் தேவி 30 ஆண்டுகள் மசூதியை பராமரித்தார்.
"வயதான பிறகு முன்புபோல் வேலை செய்யமுடியவில்லை, நான் வேலை செய்து ஐந்து ஆண்டுகளாயிற்று," என்று சொல்கிறார் தெளலத் தேவி.
இப்போது பொறுப்பு பப்லுவின் கைக்கு வந்துவிட்டது. இங்கேயே பிறந்து வளர்ந்த பப்லுவுக்கு மசூதி வளாகத்தில் உள்ள மூலை-முடுக்குகள் எல்லாம் அத்துப்படி.
"எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முழு மனதுடன் பொறுப்பாக நிறைவேற்றுகிறேன். ஆனால், பிற இந்துக்களைப் போலவே நானும் ஒரு சாதாரண இந்துதான். இந்துப் பண்டிகைகளை மற்றவர்களைப் போலவே நானும் கொண்டாடுவேன். எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை" என்கிறார் பப்லு.
»»  (மேலும்)

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தேசிய கொள்கைக்கு முரணானது

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தேசிய கொள்கைக்கு முரணானது  சர்ச்சைக்குரிய கல்குடா மது உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வkalguda mendis factoryழங்கப்பட்டமை தேசிய போதைப்பொருள் ஒழிப்புக் கொள்கைக்கு முரணானது போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் தெரிவித்த இந்த கருத்தை சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று தமது பிரதான தலைப்பாக வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலணியின் ஊடாக ஆக்கபூர்வமான பல நடவிக்கைகள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளரை மேற்கோள் காட்டி பத்திரியை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கல்குடா மது உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.

டபிள்யூ எம் மென்டிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தித் தொழிற்சாலைக்காக கல்குடாவில் 17 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பிலும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தோம்.

மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கமைய அதன் தலைவராக மத்திய வங்கி முறிகள் மோசடி குறித்து குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸ் செயற்படுகின்றார்.

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை இயங்குவதற்கு இடமளிமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வழங்கிய கடிதமொன்று தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி சபையில் கருத்து வெளியிட்டார்.
»»  (மேலும்)

6/24/2017

, சுவிஸில் சூரிச் "28ஆவது வீரமக்கள் தினம்"..!!

Image may contain: 2 peopleசுவிஸ் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஏற்பாட்டில் எதிர்வரும் 09.07.2017 ஞாயிறன்று மதியம் 02.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் "28ஆவது வீரமக்கள் தினம்" அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம்.
மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
**** அன்றையதினம் (09.07.2017) காலை 08.30க்கு இதே மண்டபத்தில், (சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில்) தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது.
**இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்று காலை 08.00 மணிக்கு நேரடியாகவே அங்கு வருகை தந்து, தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம்.**
அன்று (09.07.2017) பிற்பகல் 02.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
(தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் "வீரமக்கள் தினம்" வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.)
"விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்"
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) சுவிஸ்.
*** தொடர்புகளுக்கு...
077.9485214 // 077.9591010 // 076.5838410 // 078.9167111 // 077.9677803
09.07.2017 இல், சுவிஸில் சூரிச் Unter Affoltern மண்டபத்தில், “புளொட்” அமைப்பின், “28ஆவது வீரமக்கள் தினம்”..!!
»»  (மேலும்)

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வித சமரசமுமின்றி அகற்றப்படவேண்டியதே!-


kalguda alcojolஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி விடுத்துள்ள அறிக்கை
                            --------------------


மட்டக்களப்பு மாவட்டத்தின்   கல்குடா பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார்  20 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான தொழிற்சாலை எவ்வித சமரசமுமின்றி அகற்றப்பட வேண்டியதொன்றாகும். 
இந்த தொழிற்சாலையையானது டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தின்   தலைமைப் பதவியை வகிப்பவர் அர்ஜூன் அலோசியஸ் என்பவராவார்.
இவர் மத்திய வங்கி ஆளுநராக நியமனமாகி ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே நிதி முறிகள் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனாவார். அந்த வகையில் பெரும் பண முதலைகளின் பலத்துடனும் அரசியல் அதிகார பீடங்களின் முழு ஆதரவுடனுமே இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாகவே இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு விசேட வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளுக்கான மானியத்தை குறைத்துவிட்டு சாராய உற்பத்திக்கு மானியம் வழங்குவதுதான் நல்லாட்சியா?  என்று கேட்ககூடிய ஒரு பிரதிநிதி நம்மிடையே இல்லாமை மட்டக்களப்பு மக்கள் விட்ட தேர்தல்கால தவறுகளில் ஒன்று.
மது ஒரு மனிதனது வாழ்வில் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இங்கே பட்டியலிட தேவையில்லை. குடி குடியை கெடுக்கும் என்கின்ற முதுமொழிக்குள் அவையனைத்தும் அடங்கும்.
இதன் காரணமாகத்தான்  பல்லின சமூக மட்டங்களில்  இந்த மதுபான தொழிற்சாலை தொடர்பாக பலவித  எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.  சமூக ஆர்வலர்கள் பலரும் இதுகுறித்து தமது கண்டனங்களை ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களில் யாரும் தமது பிரதேசத்தில் ஒரு மதுபான தொழிற்சாலை உருவாகுவதை விரும்பப்போவதில்லை.

பல கிராமிய அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள்,வேலைகேட்டு போராடிவரும் பட்டதாரிகள் சங்கத்தினர் போன்றோரும் பல்வேறு  இந்த தொழிற்சாலை உருவாக்கத்துக்கு எதிராக கண்டனப்பேரணிகளை நடத்தியுள்ளனர். அதேபோன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரும் மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளனர்.
கிழக்குமாகாண முன்னாள் முதல்வரும் மாகாண சபை உறுப்பினருமான திரு. சந்திரகாந்தன் தடுப்புக்காவலில் இருக்கும் வேளையிலும் வீடியோ பதிவு ஒன்றினுடாக இந்த மதுபான தொழிற்சாலை  நிறுவப்படக்கூடாது என்பதற்கான தமது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ந்த மதுபான தொழிற்சாலைக்கு  ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும்,அமைச்சர்களும்   பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுவருகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.  (விதிவிலக்காக   பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.யோகேஸ்வரன், திரு. வியாழேந்திரன் போன்றோர் தமது கடுமையான எதிர்ப்புக்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்)

இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலையை தடுக்குமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் 63வது அமர்வில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்தோடு தமது கண்துடைப்பு நாடகத்தை முடித்துவிட்டனர் தமிழரசுக்கட்சி-முஸ்லிம்காங்கிரஸ் சந்தர்ப்பவாதிகள். மறுபுறம்  இந்த மதுபான உற்பத்திசாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பான வழக்கு ஒன்றும் பதிவாகி விசாரணை இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தனை எதிர்ப்புகளுக்கும்,எமது சமூகம் எதிர்கொள்ளபோகின்ற அவலங்களுக்கும்   மத்தியில்  இந்த மதுபான தொழிற்சாலை நிறுவுவதை ஆதரிக்கும் இரகசிய கூட்டம் ஒன்று  28 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. புத்திஜீவிகள் அமைப்பு என்னும் பெயரில் இடம்பெற்ற இந்த கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளும் ஐக்கியதேசிய கட்சி போன்றவற்றின் முக்கியஸ்தர்களே முன்னின்று நடத்தியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் இந்த தொழிற்சாலைக்கு ஆதரவான கருத்துக்களை அவர்கள் திட்டமிட்டவாறு  பரப்பி வருகின்றனர். மதுபான தொழிற்சாலை உருவானால் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும், மூலப்பொருட்கள் விநியோகத்தினால் அரிசி சோளம் போன்றவற்றின் விற்பனை பெருகும், தொழிற்சாலையை ஒட்டி தேநீர் கடைகள் போன்ற தெருவியாபாரங்கள் வளர்ச்சியடையும், என்னும் நியாயப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. முன்னாள் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போன்றோர் இத்தகைய பரப்புரைகளை  முன்னின்று செய்து வருகின்றனர். இத்தகைய நியாயப்படுத்தல்கள் கண்களை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமமானதாகும்.
இந்த அற்பமான நியாயங்களுக்காக எமது எதிர்கால சமூகம் குடித்து அழியப்போவதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு  விடுவோம் என்கின்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான இறுமாப்பே இந்த தொழிற்சாலைக்காக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படைகளில் ஒன்றாகும்.மேற்கத்திய நாடுகளிலேதான் அதிகளவான மதுபான சாலைகள் உள்ளதாகவும் அங்கெல்லாம் அவர்கள் குடித்து குட்டிசுவராக போகவில்லையே என்றும் கூட போலியான  நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால் மேற்கத்தேய நாடுகளில் உள்ளதை போல விபச்சார விடுதிகளையும் கசினோ கிளப்புகளையும் நமது நாடுகளில் திறந்துவிடலாமா? இல்லையென்றால் என்ன காரணம்?  உதாரணங்களை எங்கிருந்தும் எடுத்து வீசலாம் ஆனால் அவற்றின் பொருத்தப்பாடு முக்கியமானது.

இரத்தக்கண்ணீர் படத்தில் பகுத்தறிவாளன் எம்.ஆர்.ராதா  "கேடு கெட்ட இந்தியர்களுக்கு கலியாணம் பண்ணுவதே ஏனென்று தெரியா"தென்பார். அதுபோல மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏன் குடிப்பது எப்படி குடிப்பதென்றெல்லாம் நன்கே தெரியும்?  கல்வியறிவு,மனித உரிமை, தனிநபர் சுதந்திரம், அயலவரை மதித்தல் என்பவை பற்றி மேற்குலகம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளுக்கும் அதைக்குறித்து எம்மவர்கள் கொண்டிருக்கும் பார்வைகளையும் ஒப்பிட  முடியுமா?
 ரணில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துவிட்டதால் கேவலம்  இந்த மதுபான தொழிற்சாலையை கைநீட்டி வரவேற்கும்  இழிநிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வந்துள்ளனர். பிழையான பாதையில் சென்றால் சரியான இடத்தை எப்படி அடைய முடியும்? ஐக்கிய தேசிய கட்சியின் "மக்களை பலிகொடுத்தேனும் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும்" அரசியலில் இதுவே நடக்கும்.

"முஸ்லிம்கள் மதுபான தொழிற்சாலையில் வேலைசெய்வதை பாவமாக கருதுவார்கள் எனவே தமிழர்களுக்குத்தான் வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்" அதனால்தான் அதனை முஸ்லீம் கட்சிகள் எதிர்க்கின்றன. எனவே இதை நாம் ஆதரிக்க வேண்டும் என்கின்ற புழுத்துப்போன நியாயங்களையெல்லாம் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இதைவிட அரசியல் வங்குரோத்துத்தனம் இப்பூவுலகில் வேறெங்கே குடிகொண்டிருக்க முடியும்? இனவாதத்தை மட்டுமே அரசியல் மூலதனமாக கொண்டியங்கும் தமிழரசு கட்சி இதை விட என்ன பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும்? ஒரு மனிதனது இன  உணர்வினை அவனையே அடிமைகொள்ள பயன்படுத்தும் இந்த கெட்டித்தனங்களை கற்றுக்கொள்ள சர்வதேச அரசியல் கட்சிகள் இலங்கைக்கு வரவேண்டும்.

மது அருந்துவது நமது கலாசாரம் என்றும்  பைரவருக்கு படைக்காத கள்ளுண்டா? ஒளவையார் அடிக்காத கள்ளுண்டா,? என்று கேட்டு அதுவே நமது கலாச்சாரமாகும்?அதுவே தமிழர் பண்பாடாகும்  எனவே பிரதமர் ரணிலின் ஆசியுடன்  கல்குடா தொகுதியில்   அமைக்கப்பட்டுவருகின்ற மதுபான தொழிற்சாலையை ஆதரிப்பது தமிழ் தேசிய கடமைகளில் ஒன்றாகும் என்று அரியேந்திரன் தரவளிகள் முழங்காத குறை மட்டுமே இன்னுமுண்டு.
இத்தகைய மேலோட்டமான பூசி மெழுகல்களை பல இளம் சமூகத்தினர் நம்பும் வாய்ப்புக்களும் உண்டு. அரசியல் விழிப்புணர்வோ,சமூகம் பற்றிய உளப்பூர்வமான பார்வைகளோ சூழலியல் பற்றிய விஞ்ஞான பூர்வமான புரிதல்களோ இன்றி யுத்தத்துக்குள் இடுக்கு பிடிக்குள் தப்பி பிழைத்து கிடக்கும் எமது இளம் சமூகத்தை இத்தகைய செய்திகள் மிக இலகுவாக வசப்படுத்திவிடும் ஆபத்துக்கள் உண்டு.
எனவே இந்த அதிகார வர்க்கம் சார்பான நியாயங்கள் எல்லாம் எப்போதும் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்தவையாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

*ஒருசிலருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கின்ற அதேவேளை ஆயிரமாயிரம் மக்கள் அன்றாட ஜீவனோபாய தொழில்களை இழப்பர்.
தொழிற்சாலை உருவானால் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கின்ற செய்திக்கு பின்னால் மறைந்திருக்கும் செய்திகள் என்ன ?

எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை இந்த தொழிற்சாலை பாதிக்கப்போகின்றது? என்பதையெல்லாம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த தொழிற்சாலை இயங்க தொடங்கினால் அங்கு நாளாந்தம் உற்பத்தியாகும்  மதுபானத்துக்காக தினமும் பல்லாயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படப்போகின்றது. இதனால் காலப்போக்கில் கல்குடா தொகுதியிலுள்ள நீர்நிலைகள் வற்றிவிடும் அபாயங்கள் உண்டு. இதனால் விவசாய நிலங்கள் பாரிய வரட்சியை எதிர்கொள்ளபோவது உறுதியாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு கூட அது இட்டுசெல்லலாம்.
நாளாந்தம் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுகளை கொட்டுவதற்காக இந்த நிறுவனம் அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்லப்போவதில்லை. அவை எமது சுற்று சூழலில்தான் அருகிலுள்ள ஆறுகளிலோ குளங்களிலோ கடலிலோதான் கொட்டப்பட போகின்றன. இவற்றால் நீர்வாழ் உயிரினங்கள் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். நீர்ப்பறவைகள், நீர்த்தாவரங்கள் போன்றவை இந்த கழிவுகளில் கலந்திருக்கும் நச்சுத்தன்மைகளால்  படிப்படியாக அழிந்து போகும் ஆபத்துக்களும் உண்டு.
இதன்காரணமாக மீன்பிடியையும் விவசாயத்தையும் நம்பி வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்கள்   தமது அன்றாட தொழிலை இழக்க நேரிடும் மக்கள் வீதிக்கு வந்து பிச்சையெடுக்கும் நிலையே உருவாகும்.

*இந்த எதனோல் என்கின்ற வேதிப்பொருளை தயாரிக்கும் போது வெளிப்படுகிற கரியமிலவாயு காற்றில் கலப்பதால் மிகப்பெரிய ஆபத்துக்கள் உண்டு.

சுற்றுப்புறத்தில் வாழுகின்ற   மக்களுக்கு கண்,மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் பீடிக்கும், கண்ணெரிவில்  தொடங்கி பார்வைக்குறைபாடுகள் இளம்வயதினரைக்கூட பாதிக்கும். அதுமட்டுமன்றி சூழலில் உள்ள  வாயுமண்டலத்தை  கடுமையான முறையில் இந்த கரியமிலவாயு வெப்பமாக்குவதனால் வறட்சியும்,வெப்பமும் தலைதூக்கும்.

*அரிசி சோளம் போன்றவற்றை விவசாயிகள் அதிக விலைகளுக்கு விற்கமுடியும் என்பது இரண்டாவது பொய்யாகும்.

யுத்தத்துக்கு முன்னர் மட்/கல்லடியில் இயங்கி வந்த  இந்த மதுபான தொழிற்சாலைக்கூட அதன் உருவாக்க காலத்தில் மட்டக்களப்பு விவசாயிகளை நோக்கி இத்தகைய பொய்களையே பரப்பியது. ஆனால் காலப்போக்கில் அது எதனால் தயாரிப்புக்காக ஒரு கிலோ அரிசியைகூட விவசாயிகளிடமிருந்து வாங்கவில்லை. மாறாக உள்நாட்டு உற்பத்தி செலவுக்கும் குறைவாக வெளிநாட்டில் இருந்து எதனோல் எனப்படும் வேதிமத்தை இறக்குமதி செய்தது. அதனை இங்கு கொண்டுவந்து நீருடன்கலந்து மதுபானத்தை பாட்டில்களில் அடைத்து விநியோகம் செய்யும் ஒரு தொழிற்சாலையாகவே செயல்பட்டது.
மாறாக இன்று விளம்பரப்படுத்த படுவதுபோல அரிசினையும் சோளத்தையும் அதிக விலைக்கு விவசாயிகளிடமிருந்து இந்த நிறுவனம் வாங்குவதாயின் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பினை வழங்கியிருக்கலாமே? அங்கும் மட்டக்களப்பைப்போலவே நிறைய விவசாயிகள் பயன் பெறுவார்களே? அங்கும்கூட வேலையற்ற இளம் சமுதாயம் வேலைவாய்ப்பினை பெறக்கூடுமே? தனது சொந்த மாவட்ட மக்களைவிடவா மட்டக்களப்பை    அவர் நேசிக்கின்றார்? என்று கேட்க தெரியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை அவர்கள் நன்றே அறிந்திருக்கின்றார்கள்.

அரிசியும் சோளமும் மட்டுமல்ல உலக அளவில் எதனோல் தயாரிப்புக்காக கூடிய அளவில் பயல்படுத்தப்படும் மூலப்பொருட்களில் கரும்பும் ஒன்றாகும். எனவே கரும்பு தோட்டங்களுக்கு பெயர்போன அம்பாறை மாவட்டம் இந்த எத்தனால் தயாரிப்புக்கு சிறந்த இடமாகுமே? அங்குதான் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஐக்கிய தேசிய கட்சியில் தேசிய அமைப்பாளர் கெளரவ.தாயகமகே உள்ளார். அவர் கூட பல தொழில் நிறுவனங்களை (காமன்சு) அங்கே வைத்திருக்கின்றார். இதுபோன்ற தொழிற்சாலையை என் அம்பாறையை மையப்படுத்தி உருவாக்க வழிகோரவில்லை?
மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதுதான் நோக்கமென்றால் வாழைச்சேனை  காகித தொழிற்சாலையை, மண்டூர் ஒட்டு தொழிற்சாலையை,பல்வேறு செங்கற்தொழிற்சாலைகளை,ஏன் மீள திறக்க யாரும் முன்வருவதில்லை?

இவற்றையெல்லாம் கடந்து வறுமையிலும் மதுப்பாவனையிலும் முன்னணியில் உள்ள ஒரு மாவட்டமான மட்டக்களப்புக்கு "மதுவற்ற நாடு" என்னும் வேலைத்திட்டத்துடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியின் நல்லாட்சி தந்த பரிசுதான் இந்த மதுபான தொழிற்சாலை என கொண்டு நாம் வாழாதிருப்போம் என நம்பியிருப்பார்கள் போலும்.
இன்னுமொரு கேள்வி இங்கே எழுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தொழில்சாலையை ஆதரிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாயின் இதனை ஏன் வடமாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அவர்கள் வழங்கியிருக்க கூடாது? வடக்கில் மதுபான உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்கி அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர ஏன் தமிழரசுக் கட்சி தயங்குகின்றது? அங்கே இருக்கின்ற தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரிக்கும் என்கின்ற அச்சம் அந்த மக்களை பேசாமடந்தைகளாக  கிடந்துழல அனுமதிக்கப்போவதில்லை. அவர்களின் எதிர்ப்புக்களை அரசியல்மயப்படுத்த அவர்களிடம் மாற்று அரசியல் கட்சிகளுண்டு.

அன்பார்ந்த பொதுமக்களே இப்போது புரிகின்றதா? ஏன் மட்டக்களப்பு இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்காக தெரிவு செய்ய பட்டதென்று? நமக்குத்தான் முதுகெலும்புள்ள ஒரு அரசியல் தலைமையில்லை, வழிகாட்டல் இல்லை. இத்தகைய கொடுமைகளை எதிர்க்க நாதியில்லை என்று ஆளும் வர்க்கங்கள் கணக்கு போடுகின்றன என்பதைத்தவிர வேறென்ன?
எனவேதான் அரசியல் குரலற்றவர்களாக உள்ள எமது மக்களின் முதுகிலே சவாரி செய்ய எத்தனிக்கும் மக்கள் விரோத சக்திகளை அடையாளம் காணுவோம்.  ஆளும் வர்க்கத்தின் இந்த சுரண்டல்கள் அனைத்துக்கும் எதிராக அணிதிரள்வோம். புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி இளம் சமூகத்தினர் அணிதிரளுவோம் என கோருகின்றோம். எமக்கான பாதைகளை நாமே செதுக்கிடுவோம் என அழைக்கின்றோம்.
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை  எவ்வித சமரசமுமின்றி அகற்றப்படும் வரை போராடுவோம்.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

மட்டக்களப்பு

யூன் /2017
»»  (மேலும்)

சுவிஸ் நாட்டில் தியாகிகள் தினம்


Displaying 0000.png
25.06.2017,அன்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டில்  தியாகிகள் தினம் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது தோழர்கள் நண்பர்கள் பொதுமக்கள் அனைவரையும் இவ்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு  தோழமையுடன்  அழைக்கின்றோம் ...நன்றி  

பத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்
தமிழர் சமூக ஜனநாயக கட்சி-சுவிஸ்

»»  (மேலும்)

6/21/2017

சிறையிலிருந்து நிதி ஒதுக்கீடு

அண்மையில் கொங்கிறீட் போடும் போது சரிந்து வீழ்ந்த ஆரையம்பதி ஸ்ரீ வம்மிக்கேணி மாரியம்மன் ஆலயத்திற்கு சிறையிலிருந்து முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் நிதி ஒதுக்கியுள்ளார்
.Image may contain: 4 people, people smiling
எதிர்வரும் மாதம் வருடாந்த திருச்சடங்கு நடைபெறவுள்ள ஸ்ரீ வம்மிக்கேணி மாரியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீர் அனர்த்தம் ஏற்பட்டு கொங்கிறீட் சரிந்து வீழ்ந்ததி...ல் 17 பேர் காயமடைந்ததுடன் பல இலட்சக்கணக்கான நிதி இழப்பு ஏற்பட்டிருந்தமையினை சுட்டிக் காட்டியதனை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தாலும் ஆலயப்புணரமைப்புக்காக ரூபா.50,000.00 நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அத்துடன் ஆரையம்பதி வடபத்திரகாளியம்மன் ஆலயம், கண்ணகிபுரம் ஸ்ரீ நாராயணர் ஆலயம், வட்டவான் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம், வாழைச்சேனை மாவடி மாரியம்மன் ஆலயம் போன்ற ஆலயங்களிற்கும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

ஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை

இலங்கையில் நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த கடும் போக்கு அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Résultat de recherche d'images pour "ஞானசார தேரோ"
வழக்கு விசாரணைகளுக்கு மீண்டும் சமூகமளிக்க தவறிய நிலையில் கடந்த வியாழக்கிழமை இவரை கைது செய்வதற்கான இரு பிடி ஆணைகளை கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அன்று புதன்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்த அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
»»  (மேலும்)

6/20/2017

உரையாடல் ஒன்றே சகவாழ்வை உறுதிசெய்யும்.

Image may contain: one or more people
»»  (மேலும்)

தியாகிகள் தினச் சிந்தனை

30 ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கானமக்களையும் போராளிகளையும் எம் தோழர்களையும் இழந்து நாம் பெற்றதென்ன?sugu sritharan
இந்த கேள்வியை நாம் சாதாரணமாக கடந்துசெல்கிறோம்.இந்த உயிரிழப்பு தியாகம் சர்வசாதாரணமானதா?ஆனால் இவை பற்றியபிரக்ஞை எதுவுமற்றுத்தான் இன்று காரியங்கள் நிகழ்கின்றன.
யுத்தம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு எல்லாம் மறக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்மக்கள் இந்தநாட்டில் சகசமூகங்களுடன் சமத்துவமாக வாழ்வேண்டும் சகலவிதமான சமூக அநீதிகளும் தகர்க்கப்படவேண்டும் என்பதே போராட்டத்தின் சாரம்சம்சமாக இருந்தது. ஆனால் போராட்டம் யுத்தத்திற்கு பிந்திய சூழலில் 7ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தியாகங்கள் கருத்திற்கு எடுப்பட்டிருக்கின்றனவா? அநியாய இழப்புக்களின் கனதி உணரப்பட்டிருக்கிறதா?? போராடியவர்கள் இழப்புகளை சந்தித்ததவர்கள் குறைந்தபட்ச கண்ணியமான வாழ்வை பெற்றிருக்கிறார்களா???
போராட்டத்தில் பங்குபற்றிய பெண்களின் நிலை என்ன ?  சமூகஅநீதிகள் தொடர்பான விழிப்புணர்வு எதுவும் சமூகதத்தில ;நிலவுகிறதா? சமூகங்களிடையே நல்லெண்ணத்திற்கான காத்திரமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சமூக பாதுகாப்புநிலை என்ன மாதிரி இருக்கிறது.  தமிழர்களுக்கும் சகசமூகங்களுக்கும் அதிகாரப்பகிர்வு தொடர்பாகஒருபடிதன்னும் முன்னோக்க சென்றிருக்கிறோமா?
நிலத்துக்காகவும் காணாமல் ஆக்கபட்ட தமது உறவுகளுக்காகவும் சிறையிலிருப்பவர்களின் விடுதலைக்காகவும்  வேலை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவும் மக்கள் இளைஞர்- பெண்கள் நூறு நாட்கள் கடந்துபோராடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம ;அதற்கான ஜனநாயகசூழல் நிலவுகிறது. 
பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்படுவது
இராணுவபிரசன்னம் குறைக்கப்படுவது அதிகாரப்பகிர்ந்தளிப்பு
சமூகபொதுளாதார அபிவிருத்தி -சமூகபாதுகாப்பு
வீதியல் இறங்கிபோராடும் மக்களின் கோரிக்ககைளுக்கு முன்னுரிமை இவை தமிழர்தலைமைத்துவத்தின் பிரதானகடமையாக இருக்கவேண்டாமா? ஆனால் என்னநிகழ்கிறது. கன்னை பிரித்து“குடுமிபிடிச்சண்டை”
இவ்வளவுபேரழிவும் தியாகமும் நிகழ்ந்த சமூகத்தில் யுத்தத்தின் பின்னமைந்த வடமாகாணசபையின் நிகழ்ச்சிநிரல் 3 வருடம் கழித்து ஊழல் துஸ்பிரயோகத்தை சுமந்துநிற்பது சமூகஅககறைகொண்டோருக்கு விசனத்தையும் வெறுப்பையும் கவலையையும் ஏறப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
நம்பிதெரிவு செய்த மக்கள் வஞ்சிக்கப்டடிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.   கிழக்கு, வடக்குமாகாணசபைகள் சர்வதேச கரிசனைக்குரியவை அவர்களின் பார்வையில் கோமாளிக் கூத்து- கையாலாகாதகளமாக வடமாகாண சபை  மாறியிருக்கிறது.  தியாகங்களால் பெறுமதிசேர்க்கப்பட்ட தமிழர் விடயங்கள் “நலங்கெடபுழுதியில்” எறியப்பட்டது போன்ற அவலநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.பல்லாயிரம் மக்களும் போராளிகளும் பொதுமக்களும் தியாகம் செய்து உருவான பலாபலன்கள் பாதுகாக்கப்படுவதும் பேரழிவைச் சந்தித்த இந்தசமூகத்திற்கு பயனுடையதாக மாற்றுவதுமே நாம் மறைந்தவர்களுக்குச் செய்யும் உணமையானஅஞ்சலியாக இருக்கும.;
சிந்தித்துபாருங்கள!; எழிலார்ந்த கனவுகளுடன் உயிர்த்தியாகம் செய்தவர்களை நாம் மீண்டும் மீண்டும் கொல்லவில்லையா என்று.
இவ்வளவு பெரியதியாகங்கள் நடந்தமண்ணில் நாங்கள் ஒன்றும் பெரியவிம்பங்கள்அல்ல.  முகம் தெரியாமல் பல்லாயிரம் பேர் மரணித்த மண்ணில் கன்னைபிரித்து போலிகடவுளர்-  கதாநாயக விம்பங்களை உருவாக்குவது சற்று எரிச்சலாக இருக்கிறது.  இந்தபோலிகதாநாயக வழிபாடுஅல்ல. அதில் புழகாகிதம் அல்ல. துன்புறும் மக்களுக்கு அர்ப்பணிப்பதே இன்று பிரதானபணி. எமதுமக்களும் கண்மூடித்தனமான வழிபாடுகளைத் தவிர்த்து பகுத்தறிவின் பாற்பட்டு செயற்படவேண்டும்.  குறுகிய அற்ப தனிப்பட்ட ஆட்களின ;அரசியல் நலன்களுக்காக பெருவாரியானமக்களின் நலன்கள் அடகுவைக்கப்படும் அவலம் வேண்டாம்.வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்களுக்காக ஆக்கபூர்வமாகச் செயற்படமுனைவோம்.
இந்த 27 வதுதியாகிகள் தினத்தில் எமதுவேண்டுதல் இதுவே

சுகு-ஸ்ரீதரன்
தமிழர் சமூக ஜனநாயககட்சி
»»  (மேலும்)

6/19/2017

வவுனியாவில் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்


வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.சத்தியத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில் சத்தியமே வெல்லும் , விசாரணைக்குழுவின் தீர்ப்பபை முதல்வர் உதாசீனம் செய்வதா? , என பல்வேறு வாசகங்களை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அவ்விடத்திற்கு சமுகமளித்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் பதட்ட நிலை ஏற்ப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
இதன் போது வடமாகாண சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்கள் இனவாத பேச்சுக்களை பேசியதால் சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது. பொலிஸாரின் தலையிட்டினால் சுமுகமான நிலைக்கு வந்தது.
தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்ட இடத்தினை விட்டு சென்றதுடன் முதலமைச்சரின் ஆதரவாளர்களும் போராட்ட இடத்தினை விட்டு சென்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

“நன்றி அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

»»  (மேலும்)

ஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகமா?


ஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகமா? வடக்கு மாகாணசபையின் இழுபறி நிலை நீடிப்பு Image may contain: 1 person                                  
மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர்


ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழரின் பிரச்சனை பேசப்படுவதுடன் இலங்கையில் நடந்த போர்க்குற்றம், காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வேளையில் மக்களை திசைதிருப்பி குழப்பகரமான சூழலை ஏற்படுத்தும் நாடகமா? வடமாகாணசபையின் இழுபறி நிலை என மக்கள் ஐயங்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாணசபையின் இழுபறி நிலை தொடர்பாக அவர் ஊடகவியலாளர் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமான தீர்வு பெற்றுத்தருவோம் வடகிழக்கு இணைந்த மாகாணத்தினை தனிநாடாக ஸ்தாபிப்போம், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதி வழங்கி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவந்த தமிழ் அரசுக் கட்சி அரசுடன் இணைந்து, கிழக்கில் இணக்க ஆட்சி, வடக்கில் தனித்துவ ஆட்சி ,மத்திய அரசில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தினை பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அரசை பாதுகாக்க இரண்டு வருட அவகாசம் கொடுத்ததுடன் விட்டுவிடாமல் இம்முறை மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கான யுத்தியாகவே வடமாகாணசபையின் குளப்பத்தினை தமிழ் அரசுக் கட்சி பயன்படுத்துகின்றதா என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமிழரின் தாயகக்கோட்பாடு என்ற இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் மீது நின்று அரசியல் செய்யும்; தமிழ் அரசுக் கட்சி மூன்றரை வருடம் கூட மக்களுக்கான ஆட்சி நடத்த முடியாது ஊழல் நிறைந்த ஆட்சியும் பதவிக்கான முரண்பாடுகளும் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது. 1947ம் ஆண்டு முதலாவது பொதுத்தேர்தல் தொடக்கம் இன்றுவரை தமிழ்த் தேசிய தலைவர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் மேலாதிக்கத் தலைமைகள் செய்துவருகின்றது இன்று வெளிப்படையானது.
கிழக்குத் தலைமைகள் தலைதூக்கும்போதெல்லாம் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி தட்டிப்பணித்து தம்மை தியாகிகளாகக் காட்ட முற்படும் மேட்டுக்குடித் தலைமைகள் இவ்வாறு இரட்டைநாடகப்போக்கை கைவிட்டு இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களைச்சந்தித்து அல்லல்படும் மக்களை ஏய்க்கமுற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
                                 
மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழரின் பிரச்சனை பேசப்படுவதுடன் இலங்கையில் நடந்த போர்க்குற்றம், காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வேளையில் மக்களை திசைதிருப்பி குழப்பகரமான சூழலை ஏற்படுத்தும் நாடகமா? வடமாகாணசபையின் இழுபறி நிலை என மக்கள் ஐய...ங்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாணசபையின் இழுபறி நிலை தொடர்பாக அவர் ஊடகவியலாளர் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமான தீர்வு பெற்றுத்தருவோம் வடகிழக்கு இணைந்த மாகாணத்தினை தனிநாடாக ஸ்தாபிப்போம், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதி வழங்கி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவந்த தமிழ் அரசுக் கட்சி அரசுடன் இணைந்து, கிழக்கில் இணக்க ஆட்சி, வடக்கில் தனித்துவ ஆட்சி ,மத்திய அரசில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தினை பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அரசை பாதுகாக்க இரண்டு வருட அவகாசம் கொடுத்ததுடன் விட்டுவிடாமல் இம்முறை மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கான யுத்தியாகவே வடமாகாணசபையின் குளப்பத்தினை தமிழ் அரசுக் கட்சி பயன்படுத்துகின்றதா என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமிழரின் தாயகக்கோட்பாடு என்ற இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் மீது நின்று அரசியல் செய்யும்; தமிழ் அரசுக் கட்சி மூன்றரை வருடம் கூட மக்களுக்கான ஆட்சி நடத்த முடியாது ஊழல் நிறைந்த ஆட்சியும் பதவிக்கான முரண்பாடுகளும் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது. 1947ம் ஆண்டு முதலாவது பொதுத்தேர்தல் தொடக்கம் இன்றுவரை தமிழ்த் தேசிய தலைவர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் மேலாதிக்கத் தலைமைகள் செய்துவருகின்றது இன்று வெளிப்படையானது.
கிழக்குத் தலைமைகள் தலைதூக்கும்போதெல்லாம் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி தட்டிப்பணித்து தம்மை தியாகிகளாகக் காட்ட முற்படும் மேட்டுக்குடித் தலைமைகள் இவ்வாறு இரட்டைநாடகப்போக்கை கைவிட்டு இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களைச்சந்தித்து அல்லல்படும் மக்களை ஏய்க்கமுற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
»»  (மேலும்)

6/18/2017

தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தமக்கு இல்லையென்பதை தமிழரசு கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.-தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பிரசாந்தன்


Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளர் பிரசாந்தன்"கிழக்கு மாகாண சபையினை தமிழனிடமிருந்து பறித்து துரோகம் செய்த தமிழரசுக்கட்சி வடக்கு மாகாணசபையினையும் சீரழித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி தமக்கு இல்லையென்பதனை நிரூபித்துக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பாக உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடத்தேர்வுசெய்யப்படும் கிராம மட்ட தலைவர்களுக்கான கூட்டம் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் 15.06.2017ம்... திகதி நடைபெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது மேலும் அங்கு குறிப்பிடுகைளில்
தமிழரசு கட்சியானது வடமாகாண சபையை வெற்றிகரமாக நடத்துவதில் கண்டுள்ள தோல்வியானது பாரதூரமானதாகும். போருக்கு பின்னரான மக்களது வாழ்வில் முறையான புனர்வாழ்வு பணிகளைக்கூட செய்யமுடியாத நிலையில் யுத்த காலங்களில் தமிழ் சமுகம் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தது. அத் துயரங்கள் மாறவில்லை. கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் இன்றி குடியிருப்பு இன்றி சரியான போக்குவரத்து வசதிகள் இன்றிஇ வாழ்வாதாரம் இன்றி பல இன்னல்களுக்கு தமிழ் சமுகம் தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றது.காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றது பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கின்றது யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட தமிழ்சமூகம் வாழ்வுக்காக தினம்தினம் போராடிவரும் நிலையில் அவர்களின் துயர் துடைப்பதாத சூழுரைத்த தமிழரசுகட்சியின் நிர்வாக திறனின்மை சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளளது. ஊழலிலும் பதவிச் சண்டையிலும் நாடு முழுக்க செய்தியில் இடம்பிடித்திருக்கின்றது வடக்கு மாகாண சபை. இதனுடாக தமது செயல் திறனை மட்டுமல்லhது ஒழுக்கமின்மையையும் ஒப்புக்கொண்டுள்ளது தமிழரசுக்கட்சி.
மக்களது போராட்ட பாதையில் வந்தவர்களை துரோகிகளாக்கி படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டுமே தலைமைக்கு தகுதியானவர்கள் என்று சொல்லிவரும் தமிழரசுகட்சியினரின் ஏமாற்று வித்தை இன்று அம்பலப்பட்டு நிற்கின்றது.
தமிழ் மக்களுக்காக போராடாதவர்களும் மக்களோடு வாழாதவர்களும் எங்கிருந்தோ வந்து தலைவர்கள் ஆக்கப்பட்டதன் விளைவை இன்று வட மாகாண சபை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

தமிழரசு கட்சியே பிள்ளையான் படித்தவனா பட்டம் பெற்றவனா என்று அன்று கேள்வியெழுப்பினீர்களே? அந்த பிள்ளையான் கிழக்குமாகாணசபையில் செய்துகாட்டிய பணிகளில் பத்தில் ஒன்றைக்கூட உங்களால் செய்ய முடிந்ததா?


பிள்ளையானிடமிருந்த வினைத்திறன் மிக்க ஊழலற்ற ஆட்சி உங்களிடமில்லாமல் போனதேன்?

எங்கள் மண்ணின் மைந்தர்களை துரோகி என்று தூற்றினீர்களே இன்று யார் துரோகிகள் என்று உங்களிடம் கேள்வியெழுப்புகின்றோம்? மக்கள் பணத்தை கொள்ளையடித்து விசாரணை கமிஷன், இராஜினாமா,பதவி பறிப்பு,நம்பிக்கையில்லா பிரேரணை என்று எத்தனையோ முறைகேடுகள் வடக்கு மாகாணசபையில் தலைவிரித்தாடுகின்றது.


தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிதேனும் பூர்த்தி செய்வதற்காகவே இந்திய அரசாங்கத்தால் மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகக்கிடைத்;த மாகாணசபையினைக்கூட நடத்த முடியாமல் சீரழித்து விட்டீர்களே இதனை தொடர்ந்தும் தமிழ்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்
»»  (மேலும்)