உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/05/2017

மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று, முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அப்பணிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இந்தப் பணியை ஆரம்பித்தனர்.
“யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூறப்பட்டது.
எனவேதான் துயிலுமில்லம் வழமை போன்று மாற்றி அமைக்கும் வரைக்கும் ஒரு பொதுவான நினைவுச் சமாதினை அமைத்து நினைவு கூறுவதற்கு தீர்மானித்து அந்தப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்த மாவீரர்களின் உறவினர்கள் தாம் கொண்டு  சென்ற செங்கல், சீமெந்து என்பவற்றைக் கொண்டு நினைவுச் சமாதி அமைக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

0 commentaires :

Post a Comment