உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/12/2017

நேருக்கு நேர் கனடாவில் பிள்ளையானும் விக்கினேஸ்வரனும்கனடாவில்  இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்து மூக்குடைபட்டுள்ளார்.


உங்களது மூன்று வருட ஆட்சியில் நீங்கள் மக்களுக்காக செய்த பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என கேட்கப்பட்ட போது அவரிடம் பதிலேதும் இருக்கவில்லை.
இதே கேள்வியை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனிடம்  (பிள்ளையான்)  கேட்டிருந்தால் அவர் என்ன சொல்ல முடிந்திருக்கும்.


*மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் பல்வேறு திட்டங்களை செய்து முடித்தேன்.

*மட்டக்களப்பு நகரின் மத்தியில் இருந்த 30 வருட பழமை வாய்ந்த மிக சிறு பஸ் நிலையத்துக்கு பதிலாக பிரமாண்டமான புதிய பஸ்நிலையம் அமைத்தேன்.

*ஏழை மக்கள் குறைந்த செலவில் தமது வைபவங்களை நடத்த கலாசார மண்டபங்களை அமைத்து அவற்றை பிரதேச சபைகளுக்கு பாரம் கொடுத்தேன்.அவற்றுக்கு எம்முடன் இணைந்து போராடி மரணித்த வீரர்களின் பெயர்களை (நந்தகோபன்,ரெஜி,குகனேசன்) பொறித்தேன்.

*மிக பெரிய,சிறிய நூலகங்களை புதிதாக உருவாக்கி வாசகர்களுக்கு தந்தேன்.

*படுவான்கரை போன்ற பின்தங்கிய பிரதேசங்களை மேம்படுத்த புதிய (வவுணதீவு,திருக்கோவில் )கல்வி வலையங்களை உருவாக்கினேன்.

*43 குக்கிராமங்களை உள்ளடக்கிய பிட்படுத்தப்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அந்த பிரதேச  சபையை இடம்மாற்றி  புதிய கட்டிடம் அமைத்து செயலூக்கம் மிக்கதாக மாற்றினேன்.

*மாகாணமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை திருத்தி,அபிவிருத்தி செய்து அவற்றை தரமுயர்த்தினேன்.

*முடிந்தவரை பின்தங்கிய பாடசாலைகளின் கணித விஞ்ஞான,ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைகளை  நிவர்த்தி செய்ய பரபட்சமற்ற இடமாற்றங்களை செய்தேன்.

*பல்வேறு கிராமிய வீதிகளையும் மின்னிணைப்புகளையும் புனர் நிர்மாண பணிகளையும் செய்தேன்.

*பல குளங்களை தூர்வாரி, திருத்தி,புனரமைத்து விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

*பல கிராமிய ஆயுள்வேத வைத்திய சாலைகளை புதிதாக உருவாக்கினேன்.

*பல எல்லைக்கிராம மக்களை மீள குடியேற்றி அவர்களது விவசாய, போக்குவரத்து பாடசாலை ,ஆலைய தேவைகளை பூர்த்தி செய்ததன் ஊடாக மாகாண எல்லைகளை பலப்படுத்தினேன்.

*திருமலையில் இருந்த பல மாகாண திணைக்களங்களின் தலைமையகங்களை மட்டக்களப்பு நகருக்கு மாற்றியதன் ஊடாக மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்கொண்ட நடைமுறை பிரயாண சிரமங்களை சீர் செய்தேன்.

*இருபது வருடகாலமாக துருப்பிடித்து கிடந்த மாகாண சபையை பொறுப்பெடுத்து அதனை கட்சி தீர்மானங்களை நிறைவேற்றும் இடமாக  மாற்றி கேலிக்கிடமாக்காமல் பல்வேறு நியதி சட்டங்களை உருவாக்கி(நிதி வரி வசூலிப்பு சட்டம், மதுவரி சட்டம்,தனியார் போக்குவரத்து சட்டம் மாகாண சபையை சட்ட வலுவாக்கம் மிக்கதொன்றாக பயணிக்க வழி சமைத்தேன்.

*மாகாண சபைக்கு வருடாவருடம் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட  அனைத்து நிதியையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பணி செய்ய முழுமையாக பயன்படுத்தியது மட்டுமன்றி மேலதிக நிதியையும் பெற்று எமது மாகாண அபிவிருத்திக்கு பங்காற்றினேன்.  ஒரு போதும் ஒரு சதமெனும் எமது  மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட பணம் எனது ஆட்சிகாலத்தில் திருப்பியனுப்பப்பட்ட வரலாறில்லை.

*அனைத்துக்கும் மேலாக எத்தனையோ போராட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் விலைகொடுப்புகளுக்கும் பின்னர் கிடைத்த இந்த மாகாண சபை முறைமையை கையூட்டுட்டுக்களும் கயமைத்தனங்களும் காடைத்தனங்களும் ஊழல் பெருச்சாளிகளும்  கடை விரிக்கும் மையமாக மாற நான் ஒருபோதும் இடம்கொடுத்ததில்லை. என் மீதோ எனது அமைச்சர்கள் மீதோ எவ்வித ஊழல் குற்றசாட்டுகளோ ஊழல் விசாரணை  ஆணைக்குழுக்களோ அமைக்கும் கேவலமான நிலைக்கு இட்டு செல்லும் வண்ணம் எனது மாகாண சபை நான் நடத்தவில்லை.


மீன்பாடும் தேனாடான்0 commentaires :

Post a Comment