2/05/2017

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர்வு

அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழக முதல்வராகிறார் சசிகலா
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக , கட்சியின் பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். வி .கே. சசிகலாவின் பெயரை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், வி .கே. சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த ஆண்டு (2016) டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதியன்று, காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி.கே. சசிகலா, அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்

0 commentaires :

Post a Comment