2/16/2017

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்.
எடப்பாடி பழனிச்சாமிபதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.
பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.அதற்குப் பின், அவரது அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 31 பேரும் உறுதி மொழிகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி யார்?

அதிமுகவின் சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1989-1991, 1991-1996, 2011 -2016, மற்றும் 2016 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக 1998- 1999 வரை பதவி வகித்தார்.
அவர் ஒவ்வொரு முறையும் எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிட்டார்.
2011ல் பாமகவின் கார்த்தி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் அண்ணாதுரையை தோற்கடித்தார்.
2016ல் முதலில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர் பின்னர் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டார்.
தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷன் மற்றும் பால் வள துறையிலும் பணியாற்றியுள்ளார்.
அதிமுக கட்சியை பொறுத்த வரையில், தற்போது அதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார்

0 commentaires :

Post a Comment