3/05/2017

12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில் பட்டதாரிகள்

மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் இன்று (04) மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்னாள் அரச நியமனம் வழங்க கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் அரச நியமனம் வழங்குமாறு இந்த சங்கிலிப் போராட்டத்தின் போது வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் வழங்க கோரி 12வது நாளாக தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டம் நடாத்தி வரும் நிலையிலேயே இவர்களின் இந்த மனித சங்கிலிப் போராட்டமும் இடம்பெற்றது.

இவர்களின் இப்போராட்டத்தில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமது முழுமையான ஆதரவை வழங்கி அதன் செயலாளர் முக்கியஸ்தர்களும் இவர்களின் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி, அரச நியமனம் வழங்க கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கால வரையின்றிய சத்தியாக்கிரக போராட்டத்தினை ஆரம்பித்தனர்

0 commentaires :

Post a Comment