உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/11/2017

பொது வேட்பாளராக திருமாவளவன்?!  -அ.தி.மு.கவை வீழ்த்துமா ஆர்.கே.நகர் வியூகம்?


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். ' மக்கள் நலக் கூட்டியக்கம் இந்தத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள். Résultat de recherche d'images pour "விடுதலைச் சிறுத்தைகள்"
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, ' ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?' என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்தது. வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை உணர்ந்து முன்கூட்டியே நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவுக்கு எதிராக தி.மு.க, மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளிட்டவை களமிறங்க உள்ளன. ஜெயலலிதா ஆதரவை ஒட்டுமொத்தமாக பெறும் நோக்கில் தீபாவும் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில், ' அ.தி.மு.கவின் புதிய தலைமையின் மீது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். இவர்களை வீழ்த்துவதற்கு பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல் எழுந்துள்ளது. 

0 commentaires :

Post a Comment