3/30/2017

மருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா

மருதமுனை ஏ.எல்.எம்.றிபாஸ் எழுதிய “விலைப்பட்டியல் கொலைப்பட்டியல் மு.கா தேசியப்பட்டியல்,” 7வது ஜனாதிபத்தேர்தலும் முஸ்லிம் அரசியலும் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை(01-04-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம.பிர்தௌஸ் தலைமையில் நடைபெறவுள்ளது
.Image may contain: 4 people, text
சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.எஸ்.எம்.ஜெமீல்,ஏ.எம்.பதுறுத்தீன் ஆகியோர் முன்னிலையில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான
ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொள்கின்றார்.

இந்த நூல்கள்; பற்றி ஆசிரியர் பி.எம்.சிபான்,சட்டத்தரணிகளான எம்.சி.சபருள்ளா,எம்.எம்.பஹீஜ், விரிவுரையாளர் சிறாஜ் மஸ்ஹுர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
நூலின் பிரதிகளை வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரீட்,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத்,விமர்சகர் எம்.எச்.எம்.இப்றாஹீம் ஆகியோர் பெறவுள்ளனர்.

0 commentaires :

Post a Comment