உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/03/2017

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில் நிலையம்


சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிடியூஷன் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
அந்த ரயில் நிலையத்திலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசமடைந்த ரயில் பெட்டிகளையும், ரயில் மேடையில் காயமற்றோர் விழுந்து கிடப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
புகை நிறைந்த மண்டபம் வழியாக மக்கள் வெளியேறுவதை நிகழ்நேர படங்கள் காட்டுகின்றன.
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கான பின்னணி காரணம் தெரியவில்லை.
மேலதிக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன

0 commentaires :

Post a Comment