4/09/2017

நாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் மூன்றாவது ஆண்டு தினம்

Résultat de recherche d'images pour "candles"Résultat de recherche d'images pour "வெருகல் படுகொலை" நாளை வெருகல் படுகொலையின்  பதின் மூன்றாவது ஆண்டு தினம் ஆகும் இத்தினத்தையொட்டி நினைவு நாள் நிகழ்வுகள் நாளை சித்திரை 10ம் திகதி வெருகல் மலைப்பூங்கா நினைவாலயத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழ் மக்கள் விடுதலை புலியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கிழக்கு பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது.

இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, ஒரு காத்தான்குடி படுகொலை போல, ஒரு அரந்தலாவை படுகொலை போல வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

0 commentaires :

Post a Comment