4/22/2017

மே தின பேரணி- மட்டக்களப்பு

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் உலகத் தொழிலாளர் தின நிகழ்வு இவ்வருடமும் சிறப்பாக நடாத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலை, தொழிலாளர்களின் நியாயமான உணர்வுகள்,வேலையில்லா திண்டாட்டம், நிதிப்பங்கீடு,நிருவாக ஒடுக்கு முறை என பல்வேறு பின்னடைவுகளை கிழக்கு மாகாண மக்கள் எதிர் கொண்டு வரும் சூழலில் உலக தொழிலாளர் தின நிகழ்வானது கிழக்கு தமிழரின் உணர்வுகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பவேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளது.

எனவே கிழக்கு மாகாணத்தில் ...ஜனநாயகத்தினை நிலைநாட்டி ஆக்கபூர்வமான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆசியுடன் மட்டக்களப்பு பொது பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. 01.05.2017ம் திகதி பி.பகல் 3.00மணிக்கு   லேக் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இருந்து பி.பகல் 2.00 மணிக்கு பேரணி ஆரம்பமாகும்

ஆகவே அனைத்து எம் உறவுகளையும் பேரணியிலும்,தொழிலாளர் தின நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

*தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

0 commentaires :

Post a Comment