உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

5/28/2017

இலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.  இலங்கை வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 122-ஆக உயர்வு

மேலும், இந்த அனர்த்தங்களினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின்படி 1 இலட்சத்தி 14 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்தி 42 ஆயிரம்229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குடும்பங்களில் தமது வாழ்விடங்களை வெளியேறிய 24 ஆயிரத்து 603 குடும்பங்களை கொண்டஒரு இலட்சத்து ஓராயிரத்து 638 பேர் 319 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் அரசு பேரிடர் மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.
மேல் , தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையில் நாளாந்தம் அதிகரிப்பு காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை பிந்தைய தகவல்களின்படி 122-லிருந்து 146-ஆக கூடியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 97-லிருந்து 112-ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் 42 பேரும், கம்பகா மாவட்டத்தில் 03 பேரும் என 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டம் -11 பேர் , காலி மாவட்டம் - 08 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டம் - 05 பேர் என தென் மாகாணத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களினால் கடும் பாதிப்புக்குள்ளான இம் மாகாணங்களில் 97 பேர் தொடர்பான தகவல்களை 48 மணித்தியாலங்கள் கடந்தும் அறியமுடியாத நிலை தொடருகின்றது.
களுத்துறை மாவட்டத்திலே கூடுதலானோர் காணாமல் போயுள்ளனர். அம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தொகை 68 என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் கூறுகின்றது. ரத்தினபுரி மாவட்டம் -05 , கேகாலை மாவட்டம் -02 , மாத்தறை மாவட்டம் - 17 , காலி மாவட்டம் -05 என்ற எண்ணிக்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் பேரிடர் முகாமைத்துவ மையத்தில் பதிவாகியுள்ளது.

0 commentaires :

Post a Comment