உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/24/2017

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் போட்டியிடும்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று பெற்றுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று. 24. 09. 2017 -பி. ப. 3.40. மணிக்கு   இடம்பெற்ற இக்ககூட்டத்தில் எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக ஆராயப்பட்டது.Aucun texte alternatif disponible.

கட்சியின் தலைவர் கெளரவ.சந்திரகாந்தன் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும். எனினும் கட்சியின் உயர்மட்டத்தினரால் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் எதிர்வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் போட்டியிடும். என கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கெளரவ.திரவியம் ( ஜெயம்)  தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் செயலாளர்.பிரசாந்தன், பேச்சாளர் ஆசாத் மௌலானா,மகளீரணி தலைவி செல்வி போன்றோருடன் பல பிரதேசமட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment