உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/17/2017

பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது.
ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிராத்தனைகள் நடந்துகொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதாக இந்தப் பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் பக்டி உள்ளூர் ஊடகத்தில் கூறினார்.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயத்தின் வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் தடுக்கப்படவில்லை என்றால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருப்பார்கள் என சர்பராஸ் பக்டி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment