உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/12/2017

மட்-கூட்டமைப்பு குழப்பத்தின் உச்சத்தில்- செல்வராசா முன்.பா.உ

மட்-தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் பெரும் குழப்பத் காணப்படுவதாக பொன் செல்வராசா முன்.பா.உறுப்பினர் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது கதிரை சண்டையினை தீர்த்துக்கொள்ள எங்கிருந்து கொண்டோ எடுத்த பங்கு பிரிப்புக்கள் கிழக்கு மாகாண மக்களிடையே   பெரும் திருப்தி மனநிலையை தோற்றுவித்துள்ள நிலைமையினையே அவரது கூற்று வெளிக்காட்டியுள்ளது.L’image contient peut-être : 1 personne

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்து வரும் முடிவுகள் கிழக்கு  மண்ணுக்கு பொருத்தமற்றது என  சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள்  தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

                                       இந்நிலையில் முன்னாள் தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பிரும்  இன்று இதே கருத்தை தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளார். எனவே பல தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் பிள்ளையானை ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். அதுமட்டுமன்றி தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட தெரிவாகியிருந்த பல முக்கியஸ்தர்களும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளில் இணைந்து தேர்தலில் குதிக்க இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.  

0 commentaires :

Post a Comment