Election 2018

6/21/2018

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறுவாரா அமல்?

மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பு(புளொட்) பாராளுமன்ற உறுப்பினர் அமல் வியாழேந்திரனுக்கும் தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கத்துக்கும்  இடையில் உள்ள கருத்து வேறுபாடுகள் முறுகல் நிலையை அடைந்து வருகின்றன.   எதிர்கால  கிழக்கு முதலமைச்சர் தெரிவு பற்றி அண்மையில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அமல் "வடமாகாணம் போல் கிழக்கு மாகாணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுப்பதில்லை".என தெரிவித்திருந்தார். L’image contient peut-être : 1 personne, assis

இதற்கு பதிலளித்த துரைராசசிங்கம்   தமிழரசு கட்சியின் செயலாளர் அமல் தனது யோக்கியத்தை நிரூபித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை  விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விட்டுள்ளார். அதுமட்டுமன்றி மாவட்டத்தில் இடம் பெறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் அமலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முக்கியஸ்தர்களுக்கு துரை ராசசிங்கம் அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

»»  (மேலும்)

6/17/2018

பாவப்பட்டது பணமல்ல கிழக்கு பல்கலைக்கழக சமூகமே!

பாவப்பட்டது பணமல்ல  கிழக்கு பல்கலைக்கழக சமூகமே!Résultat de recherche d'images pour "பாவப்பட்டது அந்த பணம் அல்ல  கிழக்கு பல்கலை கழக சமூகமே"


அண்மையில் வடமாகாண சபை விவாதமொன்றில்  ஒன்றில் எதிர்க்கட்சி  தலைவர் தவராஜா முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு கோரிஇருந்தார்.

அந்த நிதியை திரட்டும் போது அதற்கு ஒப்புதல் வழங்கியவர் தவராஜா ஆகும். அதுவும் அவரது பதவி நிலையை பொறுத்தவரை அது மிக சிறியதொரு நிதியாகும்.  இருந்த போதிலும்  அதை அவர் மீள கேட்கின்றார்  என்றால் அது வெறுமனே பணப்பெறுமதியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சனையாக இருக்க முடியாது. அந்த குறித்த நிகழ்வு நடந்தேறிய விதம் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் பிரச்சனையிலிருந்தே அவரது கோரிக்கை எழுந்திருக்க வேண்டும்  என்பது.சாதாரணமாக எல்லோருக்கு புரியக்கூடியதொன்றாகும்.

அந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எனப்படுகின்ற சிலர் தண்டல்காரர்களாக நடந்துகொண்டு அந்நிகழ்வுக்கு ஊறு விளைவித்தமை பலரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வன்னியிலிருந்தும்  கிழக்கிலிருந்தும்  சென்ற பலர் அநாகரிகமாக இந்த பல்கலை கழக மாணவர்களால் நடத்தப்பட விதங்கள் பரவலாக செய்திகளில் வந்தன. 

இத்தகைய தண்டல்காரர்களுக்கு இடமளித்ததன் மூலம் வடமாகாண சபையானது அந்த நிகழ்வை நேர்த்தியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து   தவறியிருந்தது. அதன்காரணமாகவும்  அத்தகைய  பொறுப்பற்ற தன்மையை சுட்டிக்காட்டும் விதமாகவும் கூடவே  வன்னிமக்களுக்கும் கிழக்கு மக்களுக்கும் அந்நிகழ்வில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் அவரது நிலைப்பாட்டை  உறுதி செய்யும் முகமாகவே அவரது நிதிப்பங்களிப்பை மீள வழங்குமாறு அவர் கோரினார்.

மாறாக இங்கே பிரச்சனைக்குரியது  ஏழாயிரம் ரூபாய் நிதியல்ல.

ஆனால் இந்த பிரச்சனையை திரிபு படுத்தி  தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஒரு பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி தலைவராக தனது பணியை ஆற்றிவரும் தவராஜாவை   முள்ளிவாய்க்காலில் அழிந்து போன மக்களுக்கு எதிரானவராக காட்ட முனைகின்றன. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என்னும் ஒரு குழுவினர் அவரை பழி  தீர்க்க எண்ணியே   கிழக்கு பல்கலை கழக மாணவர்களை கொண்டு. இந்த பண வசூலிப்பில் ஈடுபட்டனர்.

 எதிர்க்கட்சி தலைவர்  அந்த பணத்தை அவர் மீள கேட்டது வட மாகாண சபையிடமே  ஆகும். அவருக்கு அதை  மீள தருவதாயின் அது வட மாகாண   சபை நிர்வாகம் சம்பந்தப்பட்டதொன்றாகும். மாறாக பல்கலைக்கழகத்துக்கும் நிதி கொடுக்கல் வாங்கலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படி தங்களது நியாயமற்ற நடவடிக்கைகளே இவ்வித முரண்பாடுகளை தோற்றுவித்தது என்பதாய் உணர்ந்து  யாழ் பல்கலைக்கழக சமூகம் பரிகாரம் தேடுவதானால்  இந்த நிதி சேகரிப்பில் அவர்களே ஈடுபட்டிருக்கவும் முடியும். அல்லது யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்தும் கூட இந்த செயற்பாட்டில் ஈடு பட்டிருக்க முடியும்.

அப்படியுமில்லாமல்  ஆனால் அவசியமற்ற விதத்தில்   அதிலும் கிழக்கு பல்கலைக்கழகம் தனித்து இதில் ஏன் மூக்கை நுழைத்தது என்கின்ற கேள்விகள் எழுகின்றன. இதில் யாருக்காக கிழக்கு பல்கலைக்கழகம் ஈடுபட நேர்ந்தது.

"மட்டக்களப்பானிடம் பணம் சேர்த்து கொடுத்தால்தான் தவராஜாவை அவமதித்ததாகும்" என்றால், அப்போதுதான் அவருக்கு "ரோசம் வரும்"  என்றால் மட்டக்களப்பானை  எந்த இடத்தில் வைத்து இவர்கள் சிந்திக்கின்றார்கள்?  ஏற்கனவே "மட்டக்களப்பான சுத்த தமிழன் இல்லை அல்லது துரோகி" ஆனாலும் அவர்களுக்கிருக்கும் ரோசம் கூட தவராஜாவுக்கு என்பதை காட்டவா? 

யாழ்- மேலாதிக்க- மேட்டுக்குடிகளின் சிந்தனை மையமான யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் தூண்டுதலில் கிழக்கு மாணவர்கள் இதில் பலிக்கடாக்களாக்க பட்டுள்ளனரா? ஏமாற்றப்பட்டுள்ளனரா?

இது பற்றி கிழக்கு பல்கலை கழகம் தான் இதற்கு பதில் தேட வேண்டும்.
இல்லை இந்த விடயத்தில் யாருடைய தூண்டுதலுமின்றி தங்கள் செயற்பாடு அமைந்தது என்று அவர்கள் சொல்ல முனைந்தால் கடந்த காலங்களை பற்றிய அதாவது கிழக்கு பல்கலை கழக சமூகத்தினர் ஏன் ஒரு போதும் கிழக்கு மாகாண சபையில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்த போது அதில் தலையிடவில்லை. உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி செய்தபோது முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு நிதி ஒதுக்கீடுகளில் ஒரவஞ்சனை செய்தார் என்கின்ற பலமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறைந்த பட்சம் ஒரு எதிர்ப்பறிக்கையை கூட உங்களால் விட முடிய வில்லையே? ஏன் அந்த ஆட்சி தமிழ் தேசியத்தின் பெயரில் நடை பெற்றதாலா? 

  

கல்குடாவில் மதுபான தொழிற்சாலையை தொடங்கியபோதும் தற்போது மினரல் வாட்டார் கம்பெனி புல்லுமலையில் ஆரம்பிக்கப்படும் போதும் இந்த தொழிற்சாலைகளால் மக்களுக்கு என்ன தீமைகள் என்று ஆராய்ந்து எத்தனை அறிக்கைகளை வெளியிட்டது கிழக்கு பல்கலை கழக சமூகம்? இல்லை நல்லாட்சிக்கு முட்டு கொடுக்கும் தமிழ் தேசியத்துக்கு பங்கம் வந்துவிட கூடாதென்று வாளாதிருக்கின்றீர்களா?   கிழக்கின் சமூக பொருளாதார செயற்பாடுகள் பற்றிய என்ன கரிசனையை இதுவரை உங்களது ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன? அப்படி ஏதும் இருந்தால் அவற்றை தயவுடன் அறியத்தாருங்கள்.

மாறாக யாழ்ப்பாண பல்கலை கழக சமூகத்தில் வழித்தடங்களில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டாம். பார்த்தீர்களா பாவப்பட்ட பணமென்று ஊரை ஏமாற்றி பிரச்சாரம் செய்து நீங்கள் சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு வட மாகாண சபை முதல்வரிடம் அதனை கையளிக்க சென்ற போது என்ன நடந்தது? அதை ஏற்பது ஏற்காதது வேறு பிரச்சனை.ஆனால் கிழக்கிலிருந்து வந்தீர்களா? உள்ளே வாருங்கள் என்று கூட அழைக்காமல் முதல்வர் உங்களை அவமதித்த விதத்தை.பார்த்தீர்களா?  அவர் வெளியேறும்வரை  நீங்கள் நாய்போல காத்திருந்து வாசற்படியில் வைத்து உங்களுக்கு பதில் சொல்லி அனுப்பியுள்ளார். மதியாதார் தலை வாசல் மிதியாதே என்பது மூதுரை. உங்களுக்கு ஏன் இந்த வம்பு?

எனவேதான் சொல்கின்றேன் தவராஜா மீளக்கேட்டு நீங்கள் சேர்த்து கொண்டு போன பணம் பாவப்பட்டதல்ல.  நீங்களே பாவப்படடவர்கள். பாவப்பட்டது அந்த பணம் அல்ல  கிழக்கு பல்கலை கழக சமூகமே பாவப்பட்டது.


»»  (மேலும்)

6/14/2018

யாழ்ப்பாணத்தில் 63 பேருக்கு கல்வியமைச்சின் நியமனங்கள்-

யாழ்ப்பாணத்தில்இ 63 பேருக்கு கொடுக்கப்பட்ட நியமனங்கள் போலியானவை எனஇ கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.Résultat de recherche d'images pour "இராதாகிருஷ்ணன்"

வடமராட்சி கல்வி வலயத்துக்கு உட்பட்ட மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தேவரையாளி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாஇ இன்று (13) நடைபெற்றது. இதன்போதேஇ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
“கல்வி சார ஊழியர்கள்இ முகாமைத்துவ உதவியாளர்இ பாடசாலைகளுக்கான நியமனங்கள் என 63 பேருக்கு தேசிய பாடசாலைகளில் நியமனம் கொடுக்கப்பட்டதாக அறிந்தேன்.

“இதுஇ பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளித்ததற்காக சந்தோஷமாகக் கொடுக்கப்பட்டதாகவேஇ நான் நினைத்தேன்.
“ஆனால் இது எல்லாமே பொய். இது தொடர்பில் விசாரித்தோம்.
இங்குள்ள யாரோ மூன்றுஇ நான்கு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மேலதிக கல்வி செயலாளரின் இறப்பர் முத்திரையை இட்டுக் கொடுத்துள்ளார்கள்” என்றார்.
»»  (மேலும்)

6/12/2018

தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

புல்லுமலை பிரதேசத்தில் நூறுவருட திட்டத்துடன் நூறு ஏக்கரில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக்கோரி இன்று(12.06.2018) மட்டக்களப்பு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன் மாவட்ட செயலகத்திற்கு பேரணிணியாக சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, foule et plein air
இவ் ஆர்ப்பாட்டத்தில் புல்லுமலை பிரதேச மக்கள், மட்டக்களப்பு ஊடக ஒன்றியத்தினர், மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், புல்லுமலை பிரதேச விவசாய அமைப்பினர், புல்லுமலை பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மட்டக்களப்பு இளைஞர் அமைப்பினர், கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள், மட்டக்களப்பு மகளீர் அமைப்பினர், மட்டக்களப்பு சமூக நலன் விரும்பிகள், மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் என கட்சிபேதமின்றி பங்குகொண்டிருந்தனர்.
புல்லுமலை பிரதேசத்தில் சுமார் மூன்று கிராமங்கள் குடிநீர் வசதிகள் இன்றி இருக்கின்ற சூழ்நிலையில் எங்கோ இருந்துவந்த #காப்பரேட் கம்பனிமூலம் அப்பிரதேசத்திலுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் 100 வருடங்கள் நீட்டநாள் திட்டத்தின்மூலம் நிலத்தடி நீரினை உறிஞ்சி அதை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயலை எம்மால் ஏற்கமுடியாது.இது ஒருபுறமிருக்க......
புல்லுமலை பிரதேசத்தினை பொறுத்தவரை இதனை சூழ தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் வசிக்கின்ற பிரேசங்களாகும். குறிப்பாக மங்களகம பிரதேசத்தில் சிங்கள மக்களும், புல்லுமலையில் தமிழ் மக்களும், உறுகாமம் குளத்தினை அண்டிய பகுதியில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள்.
புல்லுமலையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தண்ணீர் தொழிற்சாலையால் இவ் மூவின மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். சுமார் பலநூறு அடி ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம் இங்கு நீர் உறிஞ்சப்படும் சந்தற்பத்தில் இப் பிரதேச நிலத்தடி நீர் வற்றப்பட்டு தாவரிப்பு குளங்கள், விவசாய குளங்கள், பொதுமக்களது குடிநீர் கிணறுகளது நீர்மட்டங்கள் குறைந்து காலப்போக்கில் இத்தொழிற்சாலையை சுற்றியுள்ள பலநூறு கிலோமீட்டர் நிலப்பரப்புகள் பாலைவனமாக்கப்பட்டுவிடும்.
பிரதேசங்களில் நீர்த்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளது நீர்மட்டம் வெகுவாக குறைந்து இப் பிரதேச மேட்டுநில பயிர்ச்செய்கை, விவசாய செய்கை, கால்நடைவளர்ப்பு, மீன்பிடி போன்ற ஜீவனோபாய தொழில்கள் அறவே அழிந்துபோய்விடும். இதனால் இப்பிரதேச மக்கள் இப் பிரதேசங்களிலிருந்து வெளியேறவேண்டிய நிற்பந்தம் ஏற்படும்.
எனவே இவ்வாறான பிரதிகூலங்களை அதிகளவாக கொண்டு எமது எதிர்கால மனிதகுலத்தை அடியோடு அழிக்கும் காபரேட் கம்பனியான இத் தண்ணீர்தொழிற்சாலை மூடப்படவேண்டும்.
»»  (மேலும்)

6/10/2018

நீரின்றி அமையாது உலகு

Résultat de recherche d'images pour "mineral water   sri lanka production"

 "நீரின்றி அமையாது உலகு" என்பது முதுமொழி ஆனால் இந்த நவீன உலகில் எமது நிலங்களை நீரற்ற தரிசு நிலங்களாக ஆக்குவதையே நோக்காக கொண்டு மனிதன் செயல்பட்டு வருகின்றான். தற்போது புல்லுமலையில்  மினரல் வாட்டர் கம்பெனி ஒன்று உருவாகி வருகின்றது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கின்ற குரல்கள் வெளிவருகின்றன. எமது நீர்வளத்தை உறிஞ்சி எமக்கே விற்பனை செய்கின்ற இந்த வியாபாரிகளை நிச்சயம் நமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். எங்கோ இருந்து வரும் காப்ரேட் முதலாளிகளின் பணப்பையை நிரப்பிக்கொண்டு எமது நிலங்களை வறண்ட பூமியாக்கும் திட்டங்களை நம் ஒரு  அனுமதிக்க கூடாது.

 ஏற்கனவே கல்குடாவில் கட்டப்படுகின்ற மதுபான தொழிச்சாலைக்கான எதிர்ப்புக்களும் ஆரம்பத்தில் இப்படித்தான் எழுந்தன. ஆனால் அது நல்லாட்சி அரசின் பெரும்புள்ளிகளால் நடத்தப்படுவதால் தமிழ் தலைவர்களால் பத்திரிக்கை அறிக்கைகளைத்தாண்டி ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதன்காரணமாக அந்த பிரதேச மக்களின்  எதிர்ப்புணர்வுகள் காலப்போக்கில் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

 இந்த பண முதலைகளின் ஆலைகளும் கம்பெனிகளும் எவ்வளவு தூரம் இயற்கை வளங்களை அழிக்கின்றன? அவற்றினால் வெளியேற்றப்படும் இரசாயன கழிவுகளால் எமது காற்றும்,நிலமும் எவ்வாறு மாசு படுகின்றன? அவற்றின் காரணமாக மக்கள் எதிர்கொள்ள நேரும் உடனடி மற்றும் பின்விளைவுகள் யாவை? என்பது பற்றியெல்லாம் பரந்த அறிவை மக்களிடம் யாரும்  கொண்டு செல்வதில்லை. 

 தமிழ் நாட்டு அரசியலை குப்பை என்று தூற்றுகின்ற நாம் அண்மையில் நடைபெற்ற தூத்துக்குடி போராட்டம் போன்ற ஒன்று இலங்கையில் இடம்பெறாமைக்கு என்ன காரணம் என்று யோசிப்பதில்லை. அங்கே  ஆயிரம் குப்பைகள் அரசியலில் வலம் வந்தாலும் சூழல்பற்றியும் சர்வதேச கப்ரேட் நிறுவனங்களின் சுரண்டல்கள் பற்றியும் மக்களுக்கு எடுத்துச்சொல்லும்  ஒரு முற்போக்கான வரலாற்று பாரம்பரியம் தொடர்ச்சியாக உண்டு. அதற்காகவே செயற்படும் தேர்தலுக்கப்பாலான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அங்குண்டு. அதற்காகவே வாழ் நாள் ஊழியர்களாக தம்மை தியாகம் செய்து போராடிவருகின்ற புரட்சிகர தோழர்களும் அங்குள்ளனர்.

அதனால்தான்,ஸ்ரெட்லையிட்டுக்கெதிராகவும்,கொக்கா கோலாவுக்கு  எதிராகவும், டாஸ்மார்க்குக்கு எதிராகவும்,நீட் தேர்வுக்கெதிராகவும்  அணுஉலைக்கெதிராகவும்? ஏன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அவர்களால் போராட முடிகின்றது.


ஆனால் நம்மிடையே இத்தகைய போராட்ட  வரலாறுகள் மிகக்குறைவு. 1960 களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சாதிய விடுதலைப்போராட்டங்களை வழிநடத்திய தலைவர்கள் போன்று இன்று எமக்கு தலைவர்கள் கிடையாது. அந்த அப்போராட்டங்களை கொண்டு நடாத்திய இடதுசாரி அமைப்புக்களும்,எழுத்தாளர்களும் புத்தி ஜீவிகளும் போன்ற சிவில் பிரதிநிதிகள் இன்றைய தமிழ் சூழலில் மிக மிக குறைவு.  இடது சாரி என்றால் என்ன? அதிகம் பேசினால் "அப்ப  நிச்சயம் துரோகியாகத்தான் இருக்கும்" என்று சிந்திக்கின்ற நிலையில்தான் நமது சமூகமும் இருக்கின்றது.

இன்றைய நிலையில் இடது சாரி அமைப்புகளுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமே கிடையாது.  தவிர சமூகம், அரசியல், வர்க்கம்,சூழலியல்  போன்ற அரசியல்  பார்வைகளை எடுத்துச்செல்லும் சங்கங்களோ அமைப்புகளோ எதுவுமே இல்லாத வரட்சியே காணப்படுகின்றது. ஊடகங்களின் கேவலமோ  சொல்லி மாளாது. மக்களுக்கு எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்கின்ற கரிசனை இம்மியளவும் இல்லை. கிழக்கு பல்கலைக்கழக சமூகமோ யாழ்-பல்கலைக்கழக சமூகம் காட்டும் வழித்தடத்தை தாண்டி சிந்திக்க இன்றுவரை தயாரில்லை.

இத்தனைக்கும் மத்தியில்  நம்பிக்கை தருகின்ற ஒரே ஒரு விதிவிலக்காக  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினுடைய வேலையுரிமைக்கான போராட்டம் ஒன்று மட்டுமே  உறுதியுடன் போராடி வருகின்றது.

மறுபுறம் இனவிடுதலைப்போராட்டங்களின் பெயரில்  பலியாகிப்போன ஆயிரக்கணக்கான ஏழை இளைஞர்,யுவதிகளின்  விலை கொடுப்புக்கள் அனைத்தும் வீணடிக்கப்படுகின்றன. அவை  காலவாதியாகிப்போன தமிழ்  தலைவர்களின் அரசியல் மூலதனமாகி உள்ளது. மீண்டும் மீண்டும் இனவாதிகளும் சாதிமான்களுமே அரசியலில் கோலோச்ச முடிகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர் விட்ட இடத்திலிருந்து மேட்டுக்குடிகளின் அரசியல் பதவிகள் மீண்டும் தொடர்கின்றன.

இந்த நிலையில் மக்கள் எப்படி போராட முடியும்? 

அதனால்தான் கல்குடா மதுபான தொழிற்சாலையை முடக்க முடியவில்லை. திருக்கோவிலில் உருவாகியுள்ள இல்மனைட் தொழில் சாலையை பற்றிய தகவல்கள் கூட மக்களை சென்றடையவில்லை. அதனால்  ஏற்படக்கூடிய  ஆபத்துக்கள் இலங்கையில் வரைபடத்தையே மாற்றிவிடக்கூடிய வல்லமை படைத்தன.
இந்த இல்மனை தொழிற்சாலை தொடர்ந்தால் இன்னும் இருபதோ முப்பதோ வருடத்தில் 
அக்கரைப்பற்றிலிருந்து கடலோரமாக அறுகம்பை வரையிலான  நிலப்பரப்பு அழிந்து கடலும் களப்பும் ஒன்றாகிவிடும் ஆபத்து காத்திருக்கின்றது. வடபுலத்து கடல் வளங்களை சூறையாடும் இந்திய இழுவைப்படகுகளை எதிர்த்து பேசினால் இந்திய தூதரகத்தை விரோதித்துக்கொள்ள வேண்டிவரும் என்று வாழாதிருக்கின்றார்கள் தமிழ் தலைவர்கள். 

இந்நிலையில்தான் இன்று புல்லுமலையில் மினரல் வாட்டார் தொழிற்சாலையும் தொடங்கப்படுகின்றது. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அமல் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இந்த தொழிற்சாலையை உருவாக்கும் பின்னணியில் அமைச்சர் ஹிஸ்புல்லா இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் மினரல் வாட்டர் கம்பெனியால் வரக்கூடிய ஆபத்துக்களை விட அதை ஒரு முஸ்லீம் தலைவர் உருவாக்குவது பற்றியே அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.


இந்த விடயத்தில் யார் அதை உருவாக்குகின்றார் என்பதை விட அதனால் ஏற்படும் ஆபத்துக்களையே மக்களிடம் பேசு பொருளாக்க வேண்டும்.  ஒரு தமிழ் தலைவரின் பின்னணியிலோ ஒரு தமிழ் முதலாளியினாலோ இந்த கம்பனி  ஆரம்பிக்கப்பட்டால்  மக்களுக்கு பிரச்சனையில்லையா? இதே அளவு ஆபத்துக்களை அப்போதும் மக்கள் எதிர்கொள்ளத்தானே வேண்டும்? எனவே இது தமிழ் முஸ்லீம் பிரச்சனையல்ல. வர்க்கம் சார்ந்த பிரச்சனையாகும். எனவே நமது சுற்று சூழலை பாதுகாக்க இன,மதம்,மொழி கடந்து போராட முன்வர வேண்டும். அதுவே இன  மதம் கடந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் வாய்ப்பை உருவாக்கும். ஏனெனில் புல்லுமலை பிரதேசத்தில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் வாழுகின்றார்கள். 


மாறாக  இது ஒரு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இனவாத விடயமாக சுருக்கப்படும் ஆபத்து உண்டு. அத்தகைய இனவாத பிரச்சாரங்கள் மேலோங்கினால் அதனுடாக   சில தமிழ் தலைவர்கள் பயன் பெறுவதை தவிர  வேறெதுவும் நடக்காது.

எனவே அரசியல் தலைவர்களுக்கப்பால் சிவில் அமைப்புகளும்,பட்டதாரிகள் சங்கம்,கிழக்கு பல்கலைக்கழக சமூகம் போன்றவையும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே எடுத்துச்செல்வதில் சிரத்தையுடன் களமிறங்கி செயற்பட முன்வரவேண்டும்.

போராட்டம் ஒன்றே  வாழ்வை நிர்ணயிக்கும்

எம்.ஆர்.ஸ்டாலின்

.
»»  (மேலும்)

6/09/2018

மறவன் புலவையும் மாட்டிறைச்சியையும் முன்வைத்து- பாகம் -இரண்டு எம்.ஆர்.ஸ்டாலின்

மறவன் புலவையும் மாட்டிறைச்சியையும்  முன்வைத்து- பாகம் -இரண்டு 
எம்.ஆர்.ஸ்டாலின் Résultat de recherche d'images pour "hitler SYMBOL"
 
ஒரு குறித்த  மதத்தையோ, இனத்தையோ எதிரியாக  சித்தரிக்கின்ற வரலாற்றுப்போக்குகளின் பின்னணியில் பொருளாதாரா காரணிகளே அடிப்படையாய் இருப்பதனை  உலக வரலாறுகளில் நாம் கண்டு வருகின்றோம். ஜேர்மன் நாசிகளின் பிரச்சாரம் கூட யூதர்களுக்கெதிராக இப்படித்தான் இருந்தது. ஜெர்மானிய மக்களின் ஏழ்மை நிலைக்கு காரணம் யூதர்களின் வியாபார ஆக்கிரமிப்பே என்றுதான் முன்மொழியப்பட்டது. அத்தோடு ஒரு குறித்த இனத்துக்கு மட்டும் உரியதான "பூர்வீக உரிமை" பற்றிய பிரச்சாரங்கள் இணைக்கப்படும் போது ஏனைய இனத்தவர்களும் மதத்தவர்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்,
ஒதுக்கப்படவேண்டியவர்கள், துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள், இறுதியில் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்கின்ற பாசிஸ நிலைக்கு அது இட்டுச்செல்லும். அதுவே ஹிட்லர் போன்றவர்களால் நடத்தப்பட்ட  ஆரியர்களே ஆளப்பிறந்தவர்கள்(aryan supremacy theory) என்கின்ற யூத விரோத நிலைப்பாட்டு( Anti-semitism ) படுகொலைகளுக்கு  வழிவகுத்தது. 

இந்த ஆரிய மேன்மை பேசும் ஹிட்லருடைய நாசி கொடியின் வடிவமும்    இந்திய ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தும் ஸ்வத்திக் எனப்படும் இந்து மத சின்னமும் ஒன்றாகவே  இருப்பது  இங்கே  மேலதிக செய்தியாகும். இந்த ஸ்வத்திக்கொடி இலங்கை சைவ ஆலய சோடனைகளிலும் பயன்படுத்தப்படுவது   அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.Résultat de recherche d'images pour "hitler SYMBOL"


இந்தியாவின் ஆரிய-பார்ப்பன-பனியாக்களின்-இந்துத்துவ மேலாதிக்கம்   இத்தகைய வெறுப்பு அரசியலையே  முன்னிறுத்தி வருகின்றது. இந்த ஆரிய-பார்ப்பனர்கள் கூட   ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்புக்கு வந்தேறிய குடிகள்தான். ஆனால் அவர்கள்தான் இன்று இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஏன் இந்திய மண்ணின் பூர்வீக குடிகளான திராவிட-தமிழர்களையும்  கூட  மேலாதிக்க சிந்தனையுடன் அணுகி வருகின்றார்கள்.  இந்தியா கொண்டிருக்கும்  பல்லின-பன்மத  தன்மைகளை ஏற்றுக்கொள்ள  மறுக்கின்ற இந்துத்துவ /பாசிஸ அரசியலை எங்கும் எதிலும் திணித்து வருகின்றார்கள். இதன் ஊடாக மக்களை இன, மத, சாதி  ரீதியாக பிளவுபடுத்தி தத்தமக்குள் மோதவிட்டு  தமது  அரசியல் அதிகார  கட்டமைப்புக்களை பாதுகாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதில் முன்னின்று செயல்படுகின்றது இன்றைய மோடி அரசாங்கம்.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் இந்த இந்துத்துவ சிவசேனை அமைப்பானது இன்று கால்பதிக்க முற்பட்டுள்ளது.  இவர்களது முதலாவது  பிரச்சாரமும் இந்த "மாட்டிறைச்சி" எதிர்ப்பிலிருந்தே தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு மறவன் புலவு சச்சிதானந்தத்தின் சின்னத்தனமான செயலென்று யாரும் ஒதுக்கி விட முடியாது. மிகவும் கவனமான முறையில் திட்டமிடப்பட்டு மோடி அரசின் முகவராகவே அவர் களமிறங்கியுள்ளார். ஏனெனில் தமிழீழ விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற தமிழாராட்சி மாநாடு தொடங்கி பல்வேறு விதமான அரசியல் பணிகளில்  கருத்தியல், மற்றும் செயல்பாட்டு தளங்களில் குறிப்பிடத்தக்க  பங்களிப்பை வழங்கியவர்  சச்சிதானந்தம் ஆகும். செல்வநாயகம்,  திருச்செல்வம்,  அமிர்தலிங்கம்,  உமாமகேஸ்வரன் ஈறாக அத்தனை தலைவர்களோடும்  பழகி செயற்பட்டு  பழம் தின்று கொட்டை போட்டவர். ஒரு காலத்தில் சிங்களவர்களே தமிழர்களின் எதிரிகள் என்றும் அவர்களிடமிருந்து தமிழ் தேசத்தை காப்பதே நமது கடமையென்றும் யுத்தத்துக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர்.

அனைவரையும் ஆயுதமேந்த வைத்து அழித்து முடித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்குகின்றார்கள்.இடையில் எதுவுமே நடைபெறாததுபோல.--  எப்படி முடிகின்றது இவர்களால்?   முதல் முப்பத்துவருடமும் இனவாத யுத்தம் அடுத்துவரும் சுற்றுக்கு மதவாத யுத்தமா? 
இவர் இன்று இலங்கை தமிழர்கள் என்போர் இந்துக்கள் என்றும் இந்துக்களுக்கும் பெளத்தத்துக்கும் சொந்தமான பூர்வீக பூமி இலங்கை என்றும் கூறுகின்றார். மாடுதின்னும் முஸ்லிம்கள் வந்தேறிகள் அவர்கள் இங்கிருப்பது எமது கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்கின்றார். 

இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை, என்பதனால் முஸ்லிம்களை மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாதென்கிற கட்டளை இடுவதற்கு  இந்த மறவன்புலவு யார்? அடுத்தவனின் உணவுண்ணும் உரிமையை கூட அங்கீகரிக்க முடியாத ஒரு இனமாக தமிழினம் இருக்கின்றதா? நிச்சயமாக இருக்க முடியாது. மாட்டிறைச்சி உண்ணாமை என்பது இந்துக்களின் ஐயாயிரம் வருட பாரம்பரியம் என்று முழங்குகின்றவருக்கு "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் முழங்கிய கணியன் பூங்குன்றனார் பற்றி ஏன் தெரியாமல் போனது? 

பூர்வீக தேடல் என்பது என்னைப்பொறுத்தவரை அபத்தமானது. மனிதன் வாழ்ந்த இடத்தில்தான் தொடர்ந்து வாழ வேண்டுமானால் அவன் நாகரீகம் அடைந்திருக்கவே முடியாது, அவன் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே இருந்திருப்பான். அதுமட்டுமல்ல மச்சமும் மாமிசமும் கூடவே நரமாமிசமும்  மட்டுமே அவனது உணவாக இருந்திருக்கும்.  மாறாக நாடோடி  வாழ்க்கையும்  பிரபஞ்சம் பற்றிய தேடலுமே  நாகரீகத்தையும் அறிவையும் கற்றுத்தந்தது. 

அதனால் தான் இன்று பசு வதை பற்றி பேசுகின்ற மறவன் புலவு சச்சிதானந்தம் போன்றவரை வழிநடத்தும்  இந்து-பார்ப்பனர்களின் மூதாதையோராகிய ஆரியர்கள்  மாட்டுக்கறியை தாராளமாக   உண்ட வரலாறு விரவிக்கிடக்கின்றது. அதுமட்டுமன்றி ஆட்டிறைச்சியும் குதிரை இறைச்சியும் பெரும்தீயிலே வேகவைத்து  உண்டும்   கூடவே 
ஸோமபானமும் குடித்தும் களித்த கேளிக்கைகளுக்கு பெயர்தான் யாகங்கள் ஆகும் என்பதை அவர் அறியாதவரா? ரிக்வேதத்தில் விபரிக்கப்படுகின்ற யாக முறைகளிலே முருங்கைக்காயும் முள்ளங்கியும்  உண்பது பற்றியா விபரிக்கப்படுகின்றது. மொடாக்குடியன் இந்திரனுக்கு எத்தனை வகை இறைச்சிகள் படைக்கப்பட்டன என்பது பற்றியதுதான் இந்த வேதங்களின் விபரணைகள்.

இப்போ வந்து பல்லாயிரம் ஆண்டுகளாக பசுவை தெய்வமாக வணங்குகின்றோம் என்கின்ற புலம்பல் எதற்கு? பசுவை தெய்வமென்றால் தெய்வத்தை என்னவென்று சொல்வார்களாம்?  ராமனும் சீதையும் நெய்யில் வறுத்தெடுத்த கன்றுக்குட்டி இறைச்சியை ஒருவருக்கொருவர் ஊட்டிமகிழ்ந்து சல்லாபம் செய்திருந்த வர்ணனைகளையெல்லாம் வான்முகி ராமாயணத்திலிருந்து கம்பன் தணிக்கை செய்துவிட்டதனால் நாம் அறியாத செய்திகளாகி விடுமா? அனுமன் சீதையை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.

புத்தருக்கு பின்னர் பெளத்தம்  கொல்லாமையை வலியுறுத்தி இந்தியாவெங்கும் கால்பரப்பியது. ஜைனமும்   ஆசீவகமும் கொல்லாமையை மட்டுமன்றி புலாலுண்ணாமையையும்  இறுக்கமாக கடைப்பிடிக்க கோரியது. அசோக மன்னரின் ஆட்சி  பிரதேசமெங்கும் பார்ப்பனீயம் புறமுதுகு காட்டி ஓடத்தொடங்கியது.   இந்த காலகட்டத்துக்கு  பின்னர்தான் இந்த ஆரிய -பார்ப்பனர்கள்  மாமிச உணவை மெது மெதுவாக தாமும் கைவிடத்தொடங்கினர். மஹா மாதத்தில் மட்டும் பார்ப்பனர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது.  மஹா மாதத்தில் மாட்டிறைச்சி வெட்டுவது பற்றிய வர்ணணை பாரத கதையில் அடிக்கடி வருவதை அவதானிக்கலாம்.

"மகாசு கவோ ஹன்ஜந்தே பல்குணிஷு  ச்ச  உஹாயதே"  

அதாவது  "மஹா மாதத்தில் பசுக்கள் கொல்லப்படுகின்றன" "பல்குணி மாதத்தில் அவை எழுப்பப்படுகின்றன". 

"அர்ஜுனாஸ்ய இமே பனாஹ் நெமே பனாஹ் சிகண்டினாஹ்,
கிரிந்ததி மம கத்ராணி மகா மஸே கவம் இவா"  

இது போரின் இடையே பீஷ்மர் கூறுகின்ற வார்த்தைகள் ஆகும் அதாவது,

"ஒரு சிகண்டி  வேடமணிந்து என்னைநோக்கி விடுக்கப்படும் அம்புகள் நிச்சயம் அர்ச்சுனனுடையவையே  ஏனெனில் அவை மஹா மாதத்தில் பசுக்களை வெட்டுவதைப்போல என் தசைகளை வெட்டுகின்றன". என்கின்றார்.

எனவே பார்ப்பனர்கள் முற்காலத்தில் தாராளமாக மாட்டிறைச்சி உண்டுள்னர்,பின்னர் படிப்படியாக அதனை குறைத்து இறுதியில் முற்றாக நிறுத்தியுள்ளனர்.

ஆற்றிலே குளிக்கவரும் கிராமத்து பெண்களின் ஆடைகளை திருடி "கொங்கைகள் தெரிய கைகளை  உயர்த்திக்கொண்டு வெளியே வாருங்கள்  அப்போதுதான் ஆடைகள் கிடைக்கும் என்று சதா காவாலி வேலைசெய்யும்  கண்ணனின் கதையை இற்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிசங்கரர் புனிதமாக்கி பரப்பியத்திலிருந்துதான் இந்த கண்ணனோடு சேர்ந்து அவனது மாடுகளும்  புனிதமாயின. இவைதான் வரலாறுகள் ஆகும். 

இவை அனைத்தையும் குழி  புதைத்து விட்டு ஐயாயிரம் வருடகாலமாக பசுவை தெய்வமாக வழிபட்டு வருகின்றோம் என்கின்ற கதைகள் இனி வேக முடியாது.  
»»  (மேலும்)