Election 2018

2/20/2018

கட்சி தொடங்கும் போதே தண்ணி காட்டும்- கமல்ஹாசன்

தனது கட்சியின் பெயரையும் கொடியையும் மதுரையில் நாளை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்.  கமல்ஹாசன்
இந்தப் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் கமல்ஹாசன். அரசியல் கட்சியைத் துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், பிப்ரவரி 21ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்திற்கு காலை ஏழே முக்கால் மணியளவில் செல்கிறார். அதற்குப் பிறகு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சொல்லும் கமல், ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதன் பிறகு காலை பதினொன்றே கால் மணியளவில் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கமல், அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார். செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாயில், பரமக்குடி ஐந்து முனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மலை ஐந்து மணியளவில் மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள பொதுக்கூட்ட மைதானத்திற்கு வரும் கமல்ஹாசன், 6 மணியளவில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார். இதன் பிறகு, இரவு 8 மணியவில் உரையாற்றுகிறார். அப்போது தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் கமல்ஹாசனின் பொதுக்கூட்டம் ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடந்துவருகின்றன.
இந்தக் கூட்டத்திற்கென பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுவருகிறது. கமல்ஹாசனின் ரசிகர்கள் பலர், கமல்ஹாசனை வாழ்த்தி பேனர்களையும் பதாகைகளையும் மைதானத்தைச் சுற்றி வைத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கென குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.


0 commentaires :

Post a Comment