5/22/2018

இந்திய போலீசாரின் வெறியாட்டம் 10 பேருக்கும் மேல் பலி

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர்புரட்சிகர இளைஞர் முன்னணியின் முன்னணி செயல்வீரர் தோழர். தமிழரசன் என்வருமாகும்.அத்தோடு  மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி  கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இறந்தவரின் 3 பேரின் அடையாளம் தெரியவில்லை. துப்பாக்கிசூட்டில் 17 வயது மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி வெனிஸ்டா உடல் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மாணவி வெனிஸ்டா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் 29 வயதான வினிதா என்கின்ற பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.L’image contient peut-être : 1 personne

தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை, ஒரே நாளில் 8 பேர் போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. அதுமட்டும்மல்லாமல் போலீசாரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள்   
என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.


அப்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆகையால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது.0 commentaires :

Post a Comment