5/03/2018

மீண்டும் மீண்டும் அரசியல் அனாதைகளாக்கப்படும் கிழக்கு தமிழர்கள்

நல்லாட்சி அரசில் சிறுபான்மை மக்கள் சார்ந்து பல அமைச்சர்கள் இருக்கின்றார்கள். ஆனால் கிழக்கு தமிழர்கள் சார்ந்து யாரும் இல்லை. இம்முறையான அமைச்சரவை மாற்றத்திலும் இந்நிலை கவனம் கொள்ளப்படவில்லை. கொழும்பு தமிழர்கள்,வடக்கு தமிழர்கள் மலையக தமிழர்கள் கிழக்கு முஸ்லிம்கள் என்று பலதரப்பட்ட மக்கள்சார்ந்தும் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.ஆனால் மீண்டும் மீண்டும் அரசியல் அனாதைகளாக்கப்படும் நிலையில் கிழக்கு தமிழர்கள் மட்டுமே இருக்கின்றார்கள். 
சிறிசேன மற்றும் ரணில்இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர்அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை தொடர்ந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளடங்கலாக, 15 பேர் எதிர்த்தரப்புக்கு சென்றமை ஆகிய நிலைமைகளால் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யவே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது..  

0 commentaires :

Post a Comment