Election 2018

6/24/2018

திருநீற்று பட்டையும் குங்குமப் பொட்டும் தாடியும் தமிழ் தேசியத்தை பாதுகாக்குமா?

டமாகாண சபையின் நிர்வாகதிற்குட்பட்ட அரசதிணைக்களங்களின் சில நேர்மையான அதிகாரிகளுடன் பேசுகின்ற பொழுது எல்லோரும் சொல்லிவைத்தால் போல கூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான். Résultat de recherche d'images pour "விக்னேஸ்வரன்"
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை அவர்கள் தன்னிடம் நெருக்கமானவர்களிடம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக்கேடுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்லித்திரிகின்றார்.
விக்னேஸ்வரன் வருகைதரும்போது அவர்காலில் விழுந்து மரியாதை செய்யும் கம்பன் கழகத்தினரும், விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய கம்பவாருதி ஜெயராஜ் அவர்களும் முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளில் பாரிய அதிருப்திகொண்டு அறிக்கைவிடுகின்றனர்.
இதைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது காழ்ப்புணர்வையே காட்டுகின்றனர்.
இவற்றின் உச்சகட்டமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் மீது குறை கூறுவது வேறு யாருமல்ல.
அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் தான்.
அவரை அரசியலுக்கு கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டியவர்கள் தான். 


திடீரென எல்லோரும் இவர்மீது குற்றம் சுமத்துவதற்கான காரணம் என்ன?
இவர் செய்த பாரிய தவறுகள்தான் என்ன?
ஒரு நல்ல மனிதன்,
ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி,
ஒரு தலைசிறந்த இலக்கியவாதி,
ஒரு துறைபோன சட்ட அறிவாளர்,
ஒரு தீவிர தமிழ் ஆர்வலர்.
இவ்வாறாக அனைத்து ஆற்றலும் நிறைந்த ஓர் கல்விமானை எதிர்ப்பது என்பது பாரிய கேள்விக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் மேலேசொன்ன அனைத்து தகைமைகளும் நிறைந்த அற்புத மனிதர் விக்னேஸ்வரன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடம் இல்லை.
பிரச்சினைக்குரிய தளங்கள் இரண்டுதான் .
1) அவரின் அரசியல் நடவடிக்கைகள்.
2) அவருடைய நிர்வாகத்திறன்.
அரசியல் நடவடிக்கைகள்.
இதைப்பற்றி அதிகம் நான் எழுதவிரும்பவில்லை. எனது முந்தய கட்டுரைகளில் இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால் தோற்றுப்போன ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் இவரை கருதுவேன்.
கற்பனையான, காலத்துக்கு ஒவ்வாத, நடைமுறைக்கு அப்பாற்பட்ட,மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்ற அரசியல் கொள்கையைத்தான் முதலமைச்சர் அவர்கள் பின்பற்றுகின்றார்.
அரசியல் தெளிவோ, ராஜதந்திரமோ சிறிதளவு கூட இல்லாத சிறு மாணவனாகவே அறிக்கைகளை விடுகின்றார். தன்னை நியாயப்படுத்துவற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் தேசியம்.



ன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார்.
தமிழினிக்காக இவர் எழுதிய ஒருபக்க கட்டுரையும் அதையே சொல்லுகிறது. உண்மையிலேயே தமிழினி பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. தமிழினியின் விடுதலைக்காக கடைசிவரை ஒருதமிழ் வழக்கறிஞர் கூட வாதிடவில்லை . சிங்கள வழக்கறிஞர்களே தமிழினியை விடுவித்தார்கள். அப்போதெல்லாம் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் பழம் தின்று கொட்டைபோட்ட விக்னேஸ்வரன் என்ன செய்தார்?. அப்போது வராத தமிழ்தேசிய உணர்வு தமிழினியின் மரணதிற்குபின்புதான் முதலமைச்சருக்கு வந்ததா?
இந்த இரட்டை வேடம்தான் முதலமைச்சரின் இன்றைய அரசியல் நிலைப்பாடு.
சிங்கள மக்களையும் தென்னிலங்கை அரசியலையும் ஆணிவேறு அக்குவேறாக அறிந்திருப்பவர் முதலமைச்சர். அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் மிகமிக நெருக்கமானவர்.
அவருக்கு தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும்.
தென்னிலங்கையில் இருந்து நாம் பெறக்கூடியவை எவை ,பெறமுடியாதவை எவை ,பேசித்தீர்த்துகொள்ளக்கூடியவை எவையென அவருக்கு மிகமிக துல்லியமாக தெரியும்.
தெரிந்தும் பெறமுடியாதவை என தெளிவாக தெரிந்தவற்றுக்காகதான் முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார்.
இது சந்திரனில் இருந்து அரிசியை கொண்டுவருவதற்கு ஒப்பானது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள்.
உண்மையில் முதலமைச்சர் தன்னை தானே ஏமாற்றுகின்றார் என்பதே உண்மை.
கடந்த தேர்தலில் இவர் ஆடிய நடுநிலை நாடகம் இவருடைய அரசியல் முதிர்ச்சியின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இவர் விட்ட அறிக்கைகளில் இவரின் அரசியல் தெளிவின்மையும் தடுமாற்றமும் அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் அண்மைக்கால அறிக்கைகளையும் பேச்சுக்களையும் அவதானிக்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மை இனத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர்த்து மீண்டும் மீண்டும் இன முரண் பாட்டுக்கு தூபமிடுவதாகவே இவரின் நடவடிக்கைகள் அமைகின்றது.
அரச எதிர்ப்பு மூலம் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுவது தெளிவாக தெரிகிறது.


ரச பதவி வேண்டும், 3 லட்சம் வாடகையில் டெம்பில் ரோட்டில் வாசஸ்தலம் வேண்டும், அரச சொகுசு வாகனம் வேண்டும், வேண்டிய பொழுது கொழும்பு-யாழ்ப்பாணம் இலவச விமான டிக்கெட் வேண்டும், மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பு வேண்டும் இவையெல்லாம் அரச செலவில் வேண்டும் , ஆனால் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வரும்போது மட்டும்தான் மத்திய அரசு வேண்டத்தகாதது ஆகின்றது.
போலிஸ் அதிகாரம் மாகாண சபையிடம் வரும்வரை தனக்கான மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பை இவர் வேண்டாம் என சொல்லலாம் அல்லவா?
தனக்கான எல்லாத்தேவைகளுக்கும் மத்திய அரசு தேவை, மக்களுக்கான தேவைகளுக்கு மட்டும் மத்திய அரசுடனான எதிர்ப்பு அரசியல்.
ஏன் இந்த இரட்டை வேடம்.?


இதன் அர்த்தம் மத்திய அரசிடம் சரணாகதி அடைவது என்பதல்ல.
மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட பலன்களை மக்களுக்கு பெற்றுகொடுக்கும் அதேவேளை தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சனைகளுக்காக ராஜதந்திர ரீதியில் செயல்படுவதே ஒரு முதிர்ந்த அரசியல்வாதியின் வெற்றி.
இந்த வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு தோற்றுப்போன அரசியல் வாதியே.
நிர்வாக நடவடிக்கைகள்
உண்மையில் யாழ்பாணத்தை கொழும்பு,கண்டி,போன்று ஒரு mega city ஆக கட்டியெழுப்புவற்கான பூர்வாங்க நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
இது உயர் மட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
எத்தனையோ ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருக்கிறது.
இதற்காக உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் எப்போதுவேண்டுமென்றாலும் நிதியைத்தர தயாராகவே இருக்கின்றன.
இந்த mega project ஐ எதிர்கொள்ளகூடிய நிலையில் வடமாகாண சபையும் அதன் அமைச்சர்களும் அதன் தலைமைப் பொறுப்பதிகாரியுமான முதலமைச்சரும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே மிகத்தெளிவான பதில்.
நிர்வாக மட்டத்திலுள்ள அனைவருக்கும் இது தெரியும்.
இதற்கான அடிப்படையான சில தயார் படுத்தல்களையாவது வடமாகணசபையும் முதலமைச்சரும் செய்கின்றார்களா என்றால் அதுவுமில்லை.
Pro-Active ஆனா எந்த செயல் பாட்டையும் முதலமைச்சர் செய்வதில்லை.
மக்களாலும், வடமாகாண சபை mp களாலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் constructive ஆனா எந்த பதிலையும் சொல்லவில்லை.


ரச திணைக்கள உயர் அதிகாரின் ஊழல்களை வடமாகாண சபை MP கள் வடமாகணசபை அமர்வுகளில் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் கேட்கும்போது அதற்கான சரியான பதிலோ /நடவடிக்கையோ அளிக்கப்படுவதில்லை /எடுக்கப்படுவதில்லை . மாறாக இந்த முறைகேடுகளை MP க்களுக்கு தெரியப்படுத்தும் சில நேர்மையான அதிகாரிகள் துரோகிகளாகவே கருதப்படுகின்றார்கள்.இவற்றையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றார். வினைத்திறன் மிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சில மக்கள் சந்திப்புகளின்போது மக்களின் கோரிக்கைகளுக்கான பொறுப்புணர்வுள்ள பதிலை முதலமைச்சர் அளிப்பதில்லை. அண்மையில் புங்குடுதீவில் நடந்த மக்கள் சந்திப்பின் பொது அம்மக்கள் புங்குடுதீவிற்கு தனியான காவல் நிலையம் வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கான முதலமைச்சரின் பதில் வேடிக்கையானது. போலிஸ் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளுவதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் புதிய போலிஸ் நிலையத்தை மத்திய அரசிடம் கேட்கமுடியாது என்ற கருதுப்படவே முதலமைச்சர் பதிலளித்தார். போலிஸ் அதிகாரம் மாகாண அரசிடம் வரும்வரை அப்பகுதி மக்கள் அல்லல்படவேண்டும் என்பதா முதலமைச்சரின் வாதம் ?
இதைபோல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டறிவதை விட அவை தீர்க்கப்பட முடியாது என்பதற்கான காரணங்களையே முதலமைச்சர் சொல்கின்றார்.
அண்மையில் மணல் பிரச்சினை சம்பந்தமான கரவெட்டி ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கும் முதலமைச்சர் இவ்வாறே பதிலளித்தார்.


க்களின் எந்த பிரச்சினைக்கும் இவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
இவரின் ஆணைக்குட்பட்ட திணைக்களங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மாகாண சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
இவருடன் சந்திக்க வரும் பிறநாட்டு அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
முதலில் இனப்பிரச்சினையை தீருங்கள்.
பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுங்கள் என்பதேயாகும்.
இது எவ்வளவு பிற்போக்கு சிந்தனை.
இனப்பிரைச்சினைக்கான தீர்வு முயற்சிகளோடு சமாந்தரமாக அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு முதலமைச்சர் தயாரில்லை. இதனால் பெரு அளவிலான பணம் தடுக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் சொல்லும் காரணம் சிரிப்புக்கிடமானது. அபிவிருத்திஎன்ற போர்வையில் தென்னிலங்கை நிறுவனங்களுக்கும் பணத்தை வாரிவழங்கும் வெளிநாட்டு சூழ்ச்சிதான் இந்த அபிவிருத்தி நாடகம் என்பதே அவர்பதில். அவருக்கு ஒன்று தெரியவில்லை. MEGA PROJECTS ஐ முன்னேடுப்பதற்கான வளங்கள் எதுவுமே எம்மிடம் இல்லை.
மனிதவளம், தொழில்சார் வல்லுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், உபகரணங்கள் , இயந்திரங்கள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் என எதுவுமே எம்மிடம் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் நாம் தென்னிலங்கையையே சார்ந்திருக்க வேண்டும்.
இதுவே உண்மை.
இதைவிடுத்து தென்னிலங்கைக்கு பணம் சென்றுவிடும் என்று அபிவிருத்தி திட்டங்களை பிற்போடுவது முதலமைச்சரின் அனுபவமின்மையும் தவறான எடுகோள்களையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.


விக்னேஸ்வரன் அவர்கள் வினைத்திறன் இல்லாத ஒரு முதலமைச்சர் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கிறேன் .
1) அரசியல் தெளிவின்மை
2) இராஜ தந்திர அனுபவமின்மை
3) நிர்வாக திறனின்மை
4) மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆளுமையின்மை
5) Pro-Active சிந்தனையின்மை
6) இனப்பிரச்சினையையும் அபிவிருத்தியையும் ஒரே தட்டில் இட்டு அளவிடுதல்
7) தன்னுடனான உட்கட்சி முரண்பாட்டை முறையாக கையாளாமை .
இறுதியாக ஒன்றை சொல்கின்றேன்.
முதலமைச்சர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி.
இந்து மதகொள்கைகளை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டவர்.
பாவங்களுக்கு அஞ்சுபவர்.
மனிதநேயம் மிக்கவர்.
அவருடைய மதக்கொள்கைக் கொள்கைகளில் ஒன்று யோகநெறி.
யோகம் என்பது ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடைமையை சரிவர செய்தல் ஆகும்.
பலன் மீது பற்றுக்கொள்ளாது ஒருவன் தன் கடமையை தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும்.


இவர்களே தர்மவான்கள்.
இவர்களே இறைவனின் விருப்புக்குரியவர்கள்.
இவர்களே பிறவிப்பெரும் கடலை தாண்டக்கூடியவர்கள்.
கடைமையில் தவறுபவர்கள் இவற்றிற்கு தகுதியற்றவர்கள்.
கடைமையை செய்யாதவர்களில் முதலமைச்சரும் ஒருவர் .
வினைத்திறன் இல்லாதவர் விக்னேஸ்வரன்.
அரசியலைவிட்டு விலகிவிடுங்கள் ஐயா !
இந்த கட்டுரையை எழுதுவற்கு மூலகாரணமான நண்பர்களுக்கு நன்றி



*நவாதரன்   நன்றி முகநூல் 

1 commentaires :

Vettivelu Thanam said...

”நவாதரன்” அவர்களே!

இவ்வளவையும் கூறிமுடிந்தாயிற்று.

இங்கு முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பதாயின், ஒரேயொரு வழிதான் உள்ளது.

அதை நாம் பகிரங்கமாகப் பேசவேண்டும்.

வின்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் அடுத்த தடவையும் முதலமைச்சர் ஆகாது பார்த்துக்கொள்ளவேண்டும்.

இது உண்மையில் கூட்டமைப்பினது கைகளில்தான்முக்கியமாகத் தங்கியுள்ளது.

மேலும், இது வடமாகாணத் தமிழ் வாக்காளர்களிலும் தங்கியுள்ளது.

ஆனால், எமக்குச் சில கேள்விகள் எழுகின்றன.

அவற்றிற்கு ”நவாதரன்” விளக்கம் கூறியதுபோல் நீண்ட பதில்களைத் தரத் தேவையில்லை. சுருக்கமான பதில்களைத் தந்தால் போதும்.

1) செயற்றிறன், இராஜதந்திரம் மிக்க, லஞ்சம் - ஊழல்களில் கடந்த காலங்களில் ஈடுபடாத, ஈடுபடமாட்டாத, குறுகிய, நீண்டகாலக் கண்ணோட்டங்களில் வடக்கினைப் பொருளாதார, சமூக, மற்றும் ரீதிகளில் முன்னேற்றும் வல்லமையுடைய, நம்பகமான எவரை அடுத்தமுறை வட மாகாண முதலமைச்சர் பதவிக்குத் தமிழ் கூட்டமைப்பு நிறுத்தவேண்டும், அவரது பெயர், ஏனைய விபரங்கள் எவை?

2) அடுத்த வட மாகாண சபைத் தேர்தலில் எவர்களை அபேட்சகர்களாக கூட்டமைப்பு நிறுத்தவேண்டும்?

3) பொருளாதார அபிவிருத்தியை அடையவும், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் எப்படியான கொள்கைகளையும், செயற்றிட்டங்களையும் மகாணசபை கடைப்பிடிக்கவேண்டும்?

இவைகளுக்கான சுருக்கமான விடைகளைக் கொடுத்து, சிறந்தவொரு விவாதத்தினை நடாத்த ”நவாதரன்” முன்வரவில்லையாயின், அவர் வேறு நோக்கப் பின்னணியில் செயற்படும் ஒருவர் என்றே கருதவேண்டியுள்ளது!

”நவாதரன்” அவர்களே!

தயவு செய்து இந்த மூன்று கேள்விகளுக்கும் சுருக்கமான விடையை வாசகர்களுக்கு தவறாது தருவீர்கள் என நம்புகிறேன்.

இது இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரும் சேவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை ஐயா!

நன்றி.

Post a Comment