7/28/2018

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது

கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை அடுத்து, மருத்துவமனை முன் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.


திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கருணாநிதி சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்றார்

0 commentaires :

Post a Comment