9/09/2018

மக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தேவையில்லை. ரி.எம்.வி.பி. மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் காந்தராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் பொதுமக்களின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பர செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்க முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொகுசு வாகனமொன்றை கொள்வணவு செய்வது தொடர்பான விடயம் குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை 09.09.2018 ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.


இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், மட்டக்கப்பு மாநகரசபையின் 9வது  அமர்வு கடந்த 06.09.2018 அன்று நடைபெற்றபோது மாநகர முதல்வரினால் சொகுசு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தான் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகர உட்பட எந்தவொரு உள்ளுராட்சி மன்றங்களும் பொதுமக்களின் வரிப்பணத்திலேயே இயங்குகின்றன.
அவ்வாறிருக்கும்போது பொதுமக்களின் வரிப்பணத்தை அநாவசியச் செலவுகள் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு சொகுசு வாகனம் வாங்கி அதில் பயணம் செய்து சொகுசு அனுபவிப்பதை விட பொதுமக்களி;ன் அந்த வரிப் பணத்தைக் கொண்டு மீளவும் பொதுமக்களின் தேவைகளையே பூர்த்தி செய்தால் சிறப்பாக இருக்கும்.
அதுதான் சரியானதும் கூட.
பொதுமக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய  பல அத்தியாவசிய சேவைகள் கிடப்பில் இருக்கும்போது  இவ்வாறு சிந்திப்பது அநியாயமானது.
உதாரணமாக மட்டக்களப்பு மாநகர சபையில் கழிவகற்ற தேவையான போதியளவு வாகனங்கள் இன்மை காணப்படுகின்றது.
இதனால் பல கிராமங்களில் குறித்த நாட்களுக்குள் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்ற முடியாமல்  உள்ளதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே சொகுசு வாகனம் வாங்குவதற்காக சுமார் எட்டு மில்லியன் ரூபா அளவில் பணம் செவவு செய்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
எமது மாநகர சபையின் முதல்வர், மற்றும் ஆணையாளர்கள் பயணம் செய்வதற்கு என இரண்டு வாகனங்கள் உள்ளபோது இன்னுமொரு வாகனம் வாங்கவேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கழிவகற்றலுக்காக பயன்படுத்தக்கூடிய நவீனரக வாகனங்களை கொள்வனவு செய்வதன் மூலம் மட்டக்களப்பு  மாநகர மக்களின் பல தேவைகளை இலகுவாக பூர்த்திசெய்ய முடியும்.

எனவே ரூபா எட்டு மில்லியன் அளவில் செலவு செய்து வாங்கும் வாகனக் கொள்வனவுத் திட்டத்தை தான் முற்றாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி வாகனத்திற்கு இறக்குமதி  வரிச் செலவு மாத்திமே மாநகரசபை செலுத்தவுள்ளதாகவும் வாகனம் வௌிநாட்டு நிறுவனம் ஒன்று வழங்கவுள்ளதாகவும் மாநகரசபை தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 commentaires :

Post a Comment