9/01/2018

ஒரு முன்னாள் போராளியின் பகிரங்க மடல் -அன்புள்ள விக்கி

L’image contient peut-être : 7 personnes, personnes souriantes, personnes deboutசிங்கள மாப்பிள்ளைக்கு அறுகரிசி !
தமிழனுக்கு வாய்க்கரிசி !ஐந்து வருடங்கள் உன்னால் நாசமாகிப்போனது போதும் , ஓடிச்சென்று ஒளிந்து கொள் உனது புதுக்கடை கொல்லைப்புறத்தில். உன் பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடு அதனை நாங்கள் மறுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை.
இப்போது உனக்கு வந்திருப்பது பதவி ஆசையல்ல , பதவி பேராசை , பதவி பேயின் சகவாச துர்குணம்.
ஒரு முன்னாள் நீதியரசராகிய , படித்த கல்விமானாகிய , உயர் குடி பிறப்பென்னும் சிந்தனை உள்ள உங்களை இவ்வாறு தரக் குறைவாக திட்டும் அளவுக்கு எவ்விதத்திலும் தகுதியற்றவன் நான் , கல்வி அறிவு குறைந்தவன் தான் நான். உங்களை வசைபாடும் அளவுக்கு ஒழுக்கத்தில் சிறந்தவனோ , அல்லது மிகவும் நேர்மை உடையவனோ அல்ல நான்.
ஆனாலும் 2009 இலிருந்து அனைத்தும் இழந்து நடைப்பிணமாக வாழும் எமது மக்களுக்காக இந்த ஐந்து வருடங்களில் ஒரு மயிர் கனமளவு வேலையாவது செய்து முடித்து இருக்கிறீரா?
35,000 ஆளணி உள்ள வருடா வருடம் 5000 மில்லியன் ரூபாவுக்கு மேல் , இதுவரை மொத்தமாக 25,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் சம்பளம் செலவு செய்து ஒரு மயிராவது புடுங்கி இருக்கிறீரா.
இத்தோடு நீராக விட்டு விலகிக் கொண்டால் ஒரு மேன்மையான பிரியாவிடையுடன் வழியனுப்பி வைக்க தமிழன் தயாராக இருப்பான். அது உங்கள் சேவைக்காக அல்ல....... உமது வயதுக்கும் கல்விக்குமான முதல் மரியாதை.
இல்லை வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கினால் மிகவும் கேவலமாக வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள். இதுதான் யதார்த்தம் .


0 commentaires :

Post a Comment