9/04/2018

மட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை.


Aucun texte alternatif disponible.

மட்டக்களப்பு மண் பல்வேறு இயற்கை துறை முகங்களை கொண்டது. அதே போன்று மத்திய மலைநாட்டில் இருந்து பாய்ந்து வரும் ஏகப்பட்ட நதிகளின் கிளையாறுகள் கடலுடன் கலக்கின்ற பல்வேறு முகத்துவாரங்களையும் தன்னகத்தே கொண்டது மட்டக்களப்பு ஆகும். அத்தகையதொரு இயற்கையான   சூழலில் சுமார் நூறு  ஆண்டுகளுக்கு முன்னர் வரை மட்டக்களப்பின் பிரதான போக்குவரத்து பாதைகளாக கடல் துறைமுகங்களும்  அதுசார்ந்த களப்புகளுமே  பயன்பட்டு வந்தன. இவற்றினை பயன்படுத்தியே தென்கிழக்காசியாவின் பல நாடுகளுக்கு மட்டக்களப்பிலிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது .

அத்தகையதொரு பொழுதில்தான் வெள்ளையரான வில்லியம் ஓல்ட் எனும் அருட்தந்தை ஒருவர் 1814ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வந்திறங்கினார். புளியந்தீவிலே மூன்று சிறுவர்களை உட்காரவைத்து அவர்களுக்கு கல்வி கற்பித்தார். அதுவே இன்று மட்டக்களப்பின் பிரதான கல்லுரிகளில் ஒன்றான மெதடிஸ்த மத்திய கல்லூரியாக எழுந்து நிற்கின்றது.

அத்தோடு பல்வேறு வழிகளிலும் மட்டக்களப்பின்  கல்வியறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் திகழ்ந்தவர்  இந்த அருட்தந்தை வில்லியம் ஓல்ட் ஆகும். எனவே அவர் புளியந்தீவில் வந்திறங்குவதற்கு துறைமுகமாக பயன்பட்ட இடம் இன்றைய காந்தி பூங்கா கரையோரத்தில்  காணப்படுகின்றது.

அந்த இடத்தில் உள்ள இறங்கு துறையில்  வில்லியம் ஓல்ட்  அவர்களின்  சிலையுடன் இணைந்ததாக,  மட்டக்களப்பின்  புராதன நுழை வாயிலாக பிரகடனம் செய்து  "பழமையின் சின்னமாக" அந்த "Batticaloa-gate"அமைக்கப்பட்டது.
 Résultat de recherche d'images pour "batticaloa gate"


பிள்ளையான் ஆட்சிக்காலத்திலே யுத்தத்தால் அழிந்து கிடந்த மட்டக்களப்பு நகரை புனரமைத்து அழகு படுத்தும் திட்டத்தின் கீழ்  காந்தி பூங்காவை விரிவாக்கி  இது வடிவமைக்கப்பட்டது. அதுவரை மட்டக்களப்புக்கு என்று ஒரு கேற் இருக்கவில்லை. புராதன சிற்பங்களை நினைவு படுத்தும் விதமான நிறத்தில் அழகு நிறைந்த அற்புதமான அந்த "Batticaloa-gate" இன்று கலை ரசனையற்ற மூடர்களால்  முட்டாசு கலர் பூசப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளமை வேதனை மிக்கதாகும். L’image contient peut-être : une personne ou plus, arbre et plein air

0 commentaires :

Post a Comment