Election 2018

10/18/2018

அரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும். SDPT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ளபடி அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். L’image contient peut-être : 4 personnes, dont Varathar Rajan Perumal
இலங்கையின் பல்வேறு சிறைகளில் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தமக்கான நீதியையும் நியாயமான சட்டத்தின் ஆட்சியையும் கோரி நடத்தி வந்த காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தும்படியும், விரைவில்; அவர்களது விடுதலையை நிச்சயமாக்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் இவ்வாறுதான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விடுவதுமான நடைமுறையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவ்வாறு இந்தத் தடவை நடந்து கொள்ளக் கூடாது என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் வகையாக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் அதிகாரக்; கதிரைகளைக் காப்பாற்றுவதிலும், சர்வதேச மட்டத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவதிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே உறுதுணையாக செயற்பட்டு வந்துள்ளனர். அதற்காக அவர்கள் தமது அரசியல் முகமூடிகளையெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளதுடன் எத்தனையோ அடிப்படையான விடயங்களில் தமிழ் மக்களுக்கு தேர்தற் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் பின்னர் அவர்கள் எந்த அரங்கத்திலும் முன்னெடுக்காமற் போனவை அனைவரும் அறிந்ததே.
தமிழ் அரசியற் கைதிகளின் விடயம் இப்போது தமிழர்கள் அனைவரினதும் கரிசனைக்குரிய முதன்மையான விடயமாகியுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெற்று பாராளுமன்றத்தில் இப்போதும் பலமான ஒரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர். தமிழ் அரசியற் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக தாம் எதிர்நோக்கிய அரசியல் நெருக்கடியை கெட்டித்தனமாக வாக்குறுதிகள் மூலம் சமாளித்து விட்டதாகக் கருதாமல் தமது சாணக்கியங்களை அரசை நோக்கிப் பிரயோகித்து மிக விரைவில் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.
அடுத்த மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்கப் போகும் வரவு செலவுத் திட்டமானது 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு உரிய வகையில் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமான தந்திரங்களைக் கொண்ட ஒன்றாகவே அமையப் போகின்றது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை மேலும் மோசமானதாகவே ஆக்கும். அத்துடன் பொருளாதார நிலையில் கீழ்மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்;தை மேலும் கீழேயே தள்ளும். ஆந்த வகையில் தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள். அவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு விமர்சித்து, எதிர்த்து வாக்களிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்;.
தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் வரவு செலவுத் திட்டத்தை அரசுடன் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பாக பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பயன்படுத்த முடியாது. மாறாக கடந்த காலங்களைப் போல அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே பயன்படலாம்;. வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையினால் அரசாங்கத்தினால் நிறைவேற்றிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமலேயே அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே அது தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் ஒரு காத்திரமான கருவியாக அமையமாட்டாது. அவ்வாறான அணுகுமுறை தமிழர் தரப்புக்குத் தோல்வியாகவே முடியும்.
ஆனால், வேறு பல பிரதானமான விடயங்களில் இன்றைய அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணை மிகவும் தேவையானதொன்றாக உள்ளது. அவற்றின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரிய முறைகளில் நேர்மையாகவும், உண்மையான தியாக சிந்தனையுடனும் செயற்பட வேண்டும். மேலும் அவர்களே காந்தீய வழியில் நேரடியாக போராட்டங்களை முன்னெடுத்து அரசை இணங்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வினைத்திறனுடன் செயற்பட்டு அரசியற் கைதிகள் அனைவரினதும் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வறிக்கையை வெளியிடுபவர்
அ. வரதராஜா பெருமாள்,
கட்சி அமைப்புச் செயலாளர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி.
முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

»»  (மேலும்)

10/15/2018

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி சொல்லும் செல்வா

1978ல் உருவாகிய மட்டக்களப்பு நகரின் பிரதான புதிய பஸ்நிலையம் இந்த நீண்ட போர்க்காலத்தின் ஒருயுத்த கைதியை போல நலிந்து மெலிந்து ஒரு நடைபிணமாக காட்சியளித்தது. மட்டக்களப்பு வாவிதனில் மீன்கள் பாடவில்லை. பிணவாடைகள் மட்டுமே வீசின.L’image contient peut-être : une personne ou plus, personnes debout, ciel et plein air
எப்போது இந்த நிலை மாறும்? எப்போது எமது இயல்புவாழ்வு திரும்பும்? எப்போது இந்த வாவியிலே மீண்டும் மீன்கள்பாடும்? காலத்தின் மீது நம்பிக்கையிழந்து காத்துக்கிடந்தனர் மக்கள். சுருங்க சொன்னால் பாரதி பாடியதுபோல் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? என்று மக்களுடன் சேர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையமும் காத்துக்கிடந்தது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ்-முஸ்லீம் அரசியல்வாதிகள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள், எவருக்குமே இந்த மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ்நிலையம் கிடந்த கோலம் தெரியவில்லை. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஓர்மம் வரவில்லை. ரிஸ்வி சின்னலெப்பை, சம்பந்தமூர்த்தி, செல்வராஜா, கோவிந்தன் கருணாகரன் (ஜனா), பிரின்ஸ் காசிநாதர், சாம் தம்பிமுத்து, கணேசமூர்த்தி பசிர் சேஹுதாவுத், அமிர்அலி, ஹிஸ்புல்லா, அலிசாகிர் மெளலானா, துரைராசசிங்கம், வெள்ளிமலை, ஜோசேப் பரராசசிங்கம், கனகசபை, தங்கேஸ்வரி, அரியநேந்திரன், ---- என்று எண்ணற்ற தலைமை கள் ஒவ்வொன்றாக கடந்து சென்றன.

ஆம் மட்டக்களப்பு மாநகரம் மீண்டும் தன்னை புது பொலிவு பெறசெய்யப்போகும் அந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்துக்கிடந்தது. அவனது பெயர் பிள்ளையான் என்றிருக்கும் என அதுவரை காலமும் யாருமே எண்ணிப்பார்த்திருக்கவில்லை.இந்த வரலாற்றின் நீட்சியில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக திகழ்ந்த பிள்ளையானின் ஆட்சிகாலமே எவருமே கண்டிருக்காத அந்த கனவை நனவாக்கியது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது..

* கடைத்தொகுதிகளுடன் கூடிய புதிய மத்திய பஸ் நிலையம் 7கோடி ரூபாய்கள் செலவில் பிரமாண்டமானதொன்றாக கட்டப்பட்டது.அந்த பஸ் நிலைய முன்றலில்தான் செல்வநாயகத்தின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

10/11/2018

மாவை

L’image contient peut-être : une personne ou plus, personnes assises et intérieur 
»»  (மேலும்)

செங்கலடிமத்தியகல்லூரி ஆசிரியர் காட்டுமிராண்டித்தனம் .


மாணவர்கள் மீது அக்கறையுடனும் கரிசனையுடனும் நடந்துகொள்ளவேண்டிய ஆசியர்கள் இவ்வாறுநடப்பதா?
இந்தக்காட்டுமிராண்டி தனத்துக்கு காரணமான ஆசியரை உடன் ஆசிரியர் பணியில் இருந்து இடைநிறுத்த  கல்விபணிப்பாளர் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்..
காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும்..

நன்றி ஜீவதாஸ் முகநூல் 

»»  (மேலும்)

10/10/2018

தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்

இன்று (10) காலை 8.30 மணியளவில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சின்னையா தெய்வானை (56) எனும் மூன்று பிள்ளைகளின் தாயார் மஸ்கெலிய காடிமோர் தோட்ட பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மழை நேரத்தில் கால் வழுக்கி வீழ்ந்த போது கல்லில் அடிபட்டு அதே இடத்தில் உயிர் துறந்துள்ளார்.L’image contient peut-être : plein air
»»  (மேலும்)

10/08/2018

பல் புடுங்கிய கிழப்புலி

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, personnes debout et plein air  
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்."

 நான் கிளி நொச்சியில் நின்ற சமயம் நண்பர் கருணாகரன் விடுதலைப்புலிகளில் இருந்த பசீர் காக்காவை சந்திக்கப்போகிறீர்களா எனக்கேட்டார். பசீர்க்காக்காவின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை எனினும் முன்னர் நாம் ஒரே அமைப்பில் இருந்தவர்கள் என்ற காரணத்தாலும் மற்றும் சரி பிழைகளுக்கப்பால் அவர் தனது இரண்டு பிள்ளைகளையுத்தத்தில் இழந்தவர் என்பதாலும் மற்றும் புனர்வாழ்வு முகாமில் இருந்து வந்தவர் என்பதாலும் நான் அவரை சந்திக்க விரும்பினேன். முதலில் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய பின் அவரை சந்தித்து அவர் குடும்பம் தொடர்பாகவும் சிறை தொடர்பாகவும் உரையாடினோம். பெரிதாக அரசியல் பேசவிடினும் டெலோ அமைப்பு மேலான தாக்குதல் பற்றி கேட்டேன். தான் சிறி அண்ணாவுடன் ஒன்றாக பழகியிருந்ததால் தன்னை டெலோவினர் பிடித்து வைக்கையில் சிறி அண்ணாவுடன் பேசக்கேட்டதாகவும் அது நிகழவில்லை என்றும் எல்லாம் கை மீறி கிட்டுவின் தலைமையில் டெலோ மீதான தாக்குதல் தொடர்ந்ததாகவும் அது பற்றி மேலும் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். கே பி சூழ் நிலையின் கைதி எனவும் இப்போ டக்ளஸ் தேவானந்த போன்றவர்களை துரோகி என விளிப்பதில் உடன்பாடில்லை என்றும் தெரிவித்தார். 


அவருடன் சேர்ந்து படம் எடுத்து அதனை நான் முக நூலில் போட்ட சில மணி நேரத்தின் பின் அவரிடம் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டதாகவும் வெளி நாட்டிலும் உள் நாட்டிலுமிருந்து சிலர் தன்னை திட்டுவதாகவும் தான் மாவீரர் நாள் நிகழ்வுக்கான சில முன்னெடுப்புகளை நிகழ்த்த இந்த படம் போட்டது தடைக்கல் என்றும் சொன்னார். நான் அப்படத்தை வேண்டுமானால் நீக்கி விடுகிறேன் என்றேன். அது இனி பிரயோசனமில்லை என்றார்.உண்மையில் அவரை சந்தித்தபோது நான் கண்கலங்கினேன். சரி பிழைக்கப்பால் ஒரு. பேரழிவின் பின் தப்பியிருக்கும் மனிதர்களில் ஒருவர். அதன் பின் பற்றி நாதம் என்ற இணையத்தளத்தில் என்னைப்பற்றிய அவதூறுகளை கூறி ஏதோ திடீர் என்று நான் அவரிடம் சென்று படம் எடுத்து போட்டதாக சொல்லி அதற்காக வருந்துவதாகவும் சொல்கிறார். ஒரு இரகசிய அமைப்பில் இயங்குபவர் பாதுகாப்பு கருதி தனது படத்தை போடாமல் இருப்பது வேறு விடயம்
அனால் இது அப்படியல்ல. இவர் வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் வருபவர். நான் கே பி யை சந்தித்து படம் எடுத்து போட்டேன். வரதர் சுகுவுடன் படம் போட்டேன். இதற்கு அவர்களது கருத்தில் முழுமையான உடன் பாடென்பதோ அவர்களுடன் வேலை செய்கிறேன் என்பதல்ல அர்த்தம். ஏதோ எனக்கு ஒரு காலத்தில் தெரிந்தவர்கள் இந்த போராட்டத்தில் பயணித்தவர்கள் என்ற வகையில் ஒரு சந்திப்பை நிகழ்த்துவதில் என்ன தவறு. எனக்கு மடியில் கனமில்லை . எனவே நான் சந்திப்பவர்கள் பற்றி வெளியில் சொல்வது பிரச்சனை இல்லை. என்னை சந்திக்க விருப்பமில்லாவிடில் அதனை முதலே சொல்லியிருந்தால் சந்திக்காமல் விட்டிருக்கலாம். எல்லா ஆட்டமும் முடிந்து இப்போ கோவில் பூசைகளில் ஈடு பட்டு வாழும் பசீர்காக்காவை சந்திக்க விரும்பியது ஒரு நட்பின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் . என்னுடன் இவரது படத்தை போடுவதால் எனக்கு எவ்வித லாபமும் கிடையாது. அத்துடன் பசீர் காக்கா ஒன்றும் அரசியல் சமூக செயல்பாட்டாளரும் கிடையாது. ஆனால் ஒன்று பட்டும் இருக்கிறது. ஆயுதம் தரிக்கும் அதிகாரம் இருந்தால் போட்டுத்தள்ளும் பண்பு. நல்ல காலம் பல் புடுங்கிய கிழப்புலியை நான் சந்தித்தது.
 


நன்றி முகநூல்* இராகவன் (சின்னையா ராஜேஷ்குமார்)
»»  (மேலும்)

10/06/2018

கிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்தை செல்வா

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்  எஸ்.ஜே.வி செல்வநாயகம் ஆகும். அவர் கட்சியை உருவாக்கியபோது வடக்கிலிருந்து வந்து கிழக்கில் கால்பதிக்க படாத பாடு பட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தனது கட்சியை அறிமுகம் செய்ய முனைந்தபோது ""யார் இது யாழ்ப்பாணத்தாளா" என்று மக்கள் தமது வீட்டு கதவுகளை சாத்திக்கொண்டனர். மண்டூருக்கு செல்லமுயன்று குறுமண்வெளி துறையூடாக தோணியில் சென்ற செல்வநாயகத்தை துறையிலேயே வைத்து மண்டூரில் கால்பதிக்க விடாமால் திருப்பினார்கள் மண்டுர் மக்கள். தற்போது மட்டக்களப்பில்  அவருக்கு அனுமதி ஏதுமின்றி  இரகசியமாக சிலைவைக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் மட்டக்களப்பு மாநகரசபை மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் முயற்சிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
Résultat de recherche d'images pour "தந்தை செல்வா" மட்டக்களப்பு புதுப்பாலத்திற்கு அருகில் விமான நிலைய வீதிச் சந்தியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரால் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கு சிலைவைக்கும் முகமாக அடித்தளம் இடப்பட்டு வருகின்றது. எந்தவித அனுமதியுமின்றி இவ்வாறான செயல்களில் தமிழரசு கட்சியினர் ஈடுபட்டு வருவதை அறிந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மாநகரசபை உறுப்பினர்கள் உடனடியாக அனுமதியின்றி கட்டப்படும் அனைத்து செயல்களையும்; நிறுத்தப்பட வேண்டும் என முரண்பட்டுள்ளனர். அந்நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தமது சகாக்களுக்கு தொலைபேசியில்தெடர்பு கொண்டு  கட்டுமானப்பணிளை நிறுத்தவேண்டாம் கட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாநகர சபை உறுப்பினர்களான வசந்தன், திலிப்குமார், காந்தராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின்  ஆணித்தனமான தலையீட்டினால் தற்தாலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
மக்கள் படும் பல பிரச்சனைகளுக்குள் யாருக்கும் தெரியாமல் அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக இவ்வாறான சிலைகளை வைப்பது தேவைதானதுதான என மக்கள் குமுறுகின்றனர்.
»»  (மேலும்)

வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு


Résultat de recherche d'images pour "chief minister northern province sri lanka"

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.அதனடிப்படையில் குறித்த மூன்று மாகாணங்களும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மூன்று மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைந்ததும் மொத்தமாக கிழக்கு உட்பட்ட 6 மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இதேவேளை எல்லை நிர்ணய குழு அறிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க இரண்டு மாத காலம் செல்லும் எனவும் அதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)