10/08/2018

பல் புடுங்கிய கிழப்புலி

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes, personnes debout et plein air  
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்."

 நான் கிளி நொச்சியில் நின்ற சமயம் நண்பர் கருணாகரன் விடுதலைப்புலிகளில் இருந்த பசீர் காக்காவை சந்திக்கப்போகிறீர்களா எனக்கேட்டார். பசீர்க்காக்காவின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை எனினும் முன்னர் நாம் ஒரே அமைப்பில் இருந்தவர்கள் என்ற காரணத்தாலும் மற்றும் சரி பிழைகளுக்கப்பால் அவர் தனது இரண்டு பிள்ளைகளையுத்தத்தில் இழந்தவர் என்பதாலும் மற்றும் புனர்வாழ்வு முகாமில் இருந்து வந்தவர் என்பதாலும் நான் அவரை சந்திக்க விரும்பினேன். முதலில் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய பின் அவரை சந்தித்து அவர் குடும்பம் தொடர்பாகவும் சிறை தொடர்பாகவும் உரையாடினோம். பெரிதாக அரசியல் பேசவிடினும் டெலோ அமைப்பு மேலான தாக்குதல் பற்றி கேட்டேன். தான் சிறி அண்ணாவுடன் ஒன்றாக பழகியிருந்ததால் தன்னை டெலோவினர் பிடித்து வைக்கையில் சிறி அண்ணாவுடன் பேசக்கேட்டதாகவும் அது நிகழவில்லை என்றும் எல்லாம் கை மீறி கிட்டுவின் தலைமையில் டெலோ மீதான தாக்குதல் தொடர்ந்ததாகவும் அது பற்றி மேலும் பேச விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். கே பி சூழ் நிலையின் கைதி எனவும் இப்போ டக்ளஸ் தேவானந்த போன்றவர்களை துரோகி என விளிப்பதில் உடன்பாடில்லை என்றும் தெரிவித்தார். 


அவருடன் சேர்ந்து படம் எடுத்து அதனை நான் முக நூலில் போட்ட சில மணி நேரத்தின் பின் அவரிடம் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது. தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டதாகவும் வெளி நாட்டிலும் உள் நாட்டிலுமிருந்து சிலர் தன்னை திட்டுவதாகவும் தான் மாவீரர் நாள் நிகழ்வுக்கான சில முன்னெடுப்புகளை நிகழ்த்த இந்த படம் போட்டது தடைக்கல் என்றும் சொன்னார். நான் அப்படத்தை வேண்டுமானால் நீக்கி விடுகிறேன் என்றேன். அது இனி பிரயோசனமில்லை என்றார்.உண்மையில் அவரை சந்தித்தபோது நான் கண்கலங்கினேன். சரி பிழைக்கப்பால் ஒரு. பேரழிவின் பின் தப்பியிருக்கும் மனிதர்களில் ஒருவர். அதன் பின் பற்றி நாதம் என்ற இணையத்தளத்தில் என்னைப்பற்றிய அவதூறுகளை கூறி ஏதோ திடீர் என்று நான் அவரிடம் சென்று படம் எடுத்து போட்டதாக சொல்லி அதற்காக வருந்துவதாகவும் சொல்கிறார். ஒரு இரகசிய அமைப்பில் இயங்குபவர் பாதுகாப்பு கருதி தனது படத்தை போடாமல் இருப்பது வேறு விடயம்
அனால் இது அப்படியல்ல. இவர் வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் வருபவர். நான் கே பி யை சந்தித்து படம் எடுத்து போட்டேன். வரதர் சுகுவுடன் படம் போட்டேன். இதற்கு அவர்களது கருத்தில் முழுமையான உடன் பாடென்பதோ அவர்களுடன் வேலை செய்கிறேன் என்பதல்ல அர்த்தம். ஏதோ எனக்கு ஒரு காலத்தில் தெரிந்தவர்கள் இந்த போராட்டத்தில் பயணித்தவர்கள் என்ற வகையில் ஒரு சந்திப்பை நிகழ்த்துவதில் என்ன தவறு. எனக்கு மடியில் கனமில்லை . எனவே நான் சந்திப்பவர்கள் பற்றி வெளியில் சொல்வது பிரச்சனை இல்லை. என்னை சந்திக்க விருப்பமில்லாவிடில் அதனை முதலே சொல்லியிருந்தால் சந்திக்காமல் விட்டிருக்கலாம். எல்லா ஆட்டமும் முடிந்து இப்போ கோவில் பூசைகளில் ஈடு பட்டு வாழும் பசீர்காக்காவை சந்திக்க விரும்பியது ஒரு நட்பின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் . என்னுடன் இவரது படத்தை போடுவதால் எனக்கு எவ்வித லாபமும் கிடையாது. அத்துடன் பசீர் காக்கா ஒன்றும் அரசியல் சமூக செயல்பாட்டாளரும் கிடையாது. ஆனால் ஒன்று பட்டும் இருக்கிறது. ஆயுதம் தரிக்கும் அதிகாரம் இருந்தால் போட்டுத்தள்ளும் பண்பு. நல்ல காலம் பல் புடுங்கிய கிழப்புலியை நான் சந்தித்தது.
 


நன்றி முகநூல்* இராகவன் (சின்னையா ராஜேஷ்குமார்)

0 commentaires :

Post a Comment