10/06/2018

கிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்தை செல்வா

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர்  எஸ்.ஜே.வி செல்வநாயகம் ஆகும். அவர் கட்சியை உருவாக்கியபோது வடக்கிலிருந்து வந்து கிழக்கில் கால்பதிக்க படாத பாடு பட வேண்டியிருந்தது. 1950ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தனது கட்சியை அறிமுகம் செய்ய முனைந்தபோது ""யார் இது யாழ்ப்பாணத்தாளா" என்று மக்கள் தமது வீட்டு கதவுகளை சாத்திக்கொண்டனர். மண்டூருக்கு செல்லமுயன்று குறுமண்வெளி துறையூடாக தோணியில் சென்ற செல்வநாயகத்தை துறையிலேயே வைத்து மண்டூரில் கால்பதிக்க விடாமால் திருப்பினார்கள் மண்டுர் மக்கள். தற்போது மட்டக்களப்பில்  அவருக்கு அனுமதி ஏதுமின்றி  இரகசியமாக சிலைவைக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் மட்டக்களப்பு மாநகரசபை மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் முயற்சிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
Résultat de recherche d'images pour "தந்தை செல்வா" மட்டக்களப்பு புதுப்பாலத்திற்கு அருகில் விமான நிலைய வீதிச் சந்தியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரால் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கு சிலைவைக்கும் முகமாக அடித்தளம் இடப்பட்டு வருகின்றது. எந்தவித அனுமதியுமின்றி இவ்வாறான செயல்களில் தமிழரசு கட்சியினர் ஈடுபட்டு வருவதை அறிந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மாநகரசபை உறுப்பினர்கள் உடனடியாக அனுமதியின்றி கட்டப்படும் அனைத்து செயல்களையும்; நிறுத்தப்பட வேண்டும் என முரண்பட்டுள்ளனர். அந்நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தமது சகாக்களுக்கு தொலைபேசியில்தெடர்பு கொண்டு  கட்டுமானப்பணிளை நிறுத்தவேண்டாம் கட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாநகர சபை உறுப்பினர்களான வசந்தன், திலிப்குமார், காந்தராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின்  ஆணித்தனமான தலையீட்டினால் தற்தாலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
மக்கள் படும் பல பிரச்சனைகளுக்குள் யாருக்கும் தெரியாமல் அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக இவ்வாறான சிலைகளை வைப்பது தேவைதானதுதான என மக்கள் குமுறுகின்றனர்.

0 commentaires :

Post a Comment