11/09/2018

கிழக்கை நேசிப்பவர்களின் ஒரு உள்ளீட்டு விமர்சனம். வியாழேந்திரன் துரோகியா? தேசியவாதியா?

70 ஆண்டு கால அரசியல் போர், 30 ஆண்டுகால யுத்தம் கிட்டத்தட்ட ஒரு யுகம் / ஏராளமான உயிர்பலிகள் / சிங்களத்தின் ஏமாற்று வேலைகள்/ உரிமைபோராட்டம் / அபிவிருத்திப்போராட்டம் / என்று ஏராளமான களம் கண்டாகிவிட்டது.Résultat de recherche d'images pour "சதாசிவம் வியாழேந்திரன்"
இத்தனையிலும் நாம் படித்த பாடம் ஒன்றுதான் சிங்கள அரசுகள் எமக்கு சம உரிமையோ ஆளும் உரிமையோ ஒருபோதும் தராது என்பதுதான் .
ஆயுதப்போராட்டம் மெளனித்தன் பின்னர்
உரிமை பற்றி பேசிபலனில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர் .
எது நடந்தாலும் குறைந்தபட்ச அதிகாரமாவது வேண்டுமென்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு . இடையில் காணாமல் போனோர் குடும்பங்கள் ஒருபக்கம் . அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஒரு பக்கம் . காணியை பறிகொடுத்தோர் ஒருபக்கம் என போராட்ட வடிவங்கள் பலமுனைகளில் தொடர்கிறது .
சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றில் ஏற்றியே தீருவோம் என புலம்பெயர் அமைப்புகளும் ஒருபக்கம் இழுக்கிறது .
வறுமை, வாழ வழியில்லை , சகோதர இனத்தால் தினமும் சுரண்டப்படும் தமிழினம் .
போதிய வேலைவாய்ப்பின்மை / பொருளாதார நெருக்கடி சீதன கொடுமை / நுண்கடன் கொலைகள் என சுடுகாடாகிப்போன எம் நாட்டில் ,
எதை - யாரை வைத்து செய்வதென்ற கேள்வியே தொடந்துகொண்டிருந்தது -
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகார துஸ்பிரயோகத்தை எதிர்த்தும் முன்னைய ஆட்சியாளர்களால் ஏற்ப்பட்ட நெருக்குதலை தவிர்க்கவும் மைத்திரியை ஐனாதிபதியாக்கினார்கள் எம்மவர்கள் ஆதரவோடு -
அதன் பின்னர் தேசியம் உரிமை என்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றது .
நல்லாட்சி என்கிற நயவஞ்சக ஆட்சியில் எதிர்பார்த்த எதுவும் நிறைவேறவில்லை /
வடமாகாண அமைச்சர்களாக இருவர் நியமிக்கப்பட்டு மாகாண சபையும் தமிழர் வசமென்பதால் கனிசமான அபிவிருத்தியும் கிடைத்தது .
ஆனால் கிழக்கு தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள் .
அத்தோடு சகோதர இனத்தவர்களின் அதிகார துஸ்பிரயோகத்தால் ஏராளமான உயர் பதவிகள் முறைகேடாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு எம்மவர்கள் புறம் தள்ளப்பட்டார்கள் .
அத்தோடு மாகாண சபை முஸ்லீம்கள் வசமிருந்தபோது கிழக்கு மாகாணம் விஜயம் செய்த பிரதமரும் ஜனாதியும் எமது மக்கள் பிரதிநிதிகளை மனிதர்களாக கூட கணக்கெடுக்கவில்லை இத்தனைக்கும் அவர்கள் கொண்டுவரும் படஜட் முதல் அத்தனைக்கும் வெளியில் இருந்து ஆதரவு தருவோர் இவர்கள்தான் .
நிலமை இப்படி இருக்க மாகாண சபையை பயண்படுத்தி தமது முழு அதிகாரத்தையும் தமது இனத்துக்கு செலவளித்து கொண்ட லட்சியத்தில் வெற்றியும் கண்டது முஸ்லீம் தரப்பு .
கிழக்கிற்க்கு வரும் நிதியில் 1/5 பங்கு கூட தமிழர்பிரதேச அபிவிருத்திக்கு பயன் படுவதில்லை .
இது அத்தனையும் தெரிந்தும் சம்மந்தர் வாய் திறக்கவில்லை. அதுபோக மனிதாபிமான அடிப்படையில் ஒரு அரசியல் கைதியை கூட விட நல்லாட்சி அரசு இணங்கவில்லை .
புதிய திருத்த சட்டமூலம் என்ற ஒன்றே அவர்களின் பதிலாக இருந்தது .
நினைவஞ்சலிகள் / சிலை திறப்பு விழா தவிர தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமை கிழக்கிற்கு வருவதில்லை -
இங்கு என்ன நடந்தாலும் அமலும் யோகேஸ்வரனும் ஆர்ப்பாட்டம் பண்ண வந்துவிடுவார்கள் அவர்களால் எதுவும் முடியாது காரணம் தலைமை இதுபற்றி பேச தயாரில்லை -
சிறிநேசன் இடையிடையே பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பார் /
நிலமை .
அதுபோக எந்தவொரு பிரச்சினையிலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தன்னிச்சையாக பேசக்கூடாது என்பதில் துரைராஜ சிங்கம் மிககவனமாக இருந்தார்.
                       இதனால் உட்கட்சி மோதல் ஆரம்பமானது . அமலை எந்தவொரு நிகழ்வுக்கும் அழைப்பதை தவிர்த்து அரசியலில் இருந்து ஒரம் கட்ட நினைத்தார்கள் கிழக்கு கூட்டமைப்பார் . உதாரணம் : சந்தை திறப்பு விழா , தந்தை செல்வா திறப்பு விழா ( இன்னும் பல) .
இடையில் கிழக்கில் நில அபகரிப்பு வேலைவாய்ப்பின்மை என நெருக்கடி தொடரும் சந்தர்ப்பத்தில் ரணில் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வந்தது .
இதை பேரம் பேசி ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற நிலையில் தலைமை மட்டுமே பேரம் பேசி ஆதரவு தருவதென முடிவெடுத்தார்கள் .
இதன் போது என்ன காரணத்துக்காக ஆதரிக்கவேண்டும் எழுத்து மூல ஆவணம் எங்கே என்று அமல் கேட்க கைகலப்புக்கு சுமந்திரன் இறங்கியிருக்கிறார் . இங்கே நிலமை இன்னும் மோசமானது .
கிழக்கில் ஏதும் என்றால் அமல் என்ன புடுங்கிறாரா என நாம் கேட்க இறுதியாக மனோவூடாக ஐ தே கட்சியில் இணைந்து குறைந்த பட்சம் ஒரு பிரதி அமைச்சையாவது பெறலாம் என முயன்றால் ரணில் சுமந்திரன் கூட்டு இதற்கு தடையானது .
சுதாகரித்துகொண்ட அமல் மனோவூடாக சில நிதி ஒதுக்கீடுகளை செய்தார் . ஆனால் கூட்டமைப்பில் இருந்தும் அரசியலில் இருந்தும் அமலை ஓரம் கட்டவேண்டுமென்ற கொள்கையில் மாற்றம் இருக்கவில்லை கூட்டமைப்புக்கு .
இதனிடையே ஆட்சியை கலைக்க எத்தனித்த மகிந்த தரப்பு ரங்காவூடாக அமலை அணுகி பேரம் பேசியிருக்கிறார்கள் .
சாதாரணமாக முஸ்லீம் நபரொருவருக்கு இருக்கும்பவர் கூட பாராளுமன்ற உருப்பினரான அமலுக்கு இல்லை பொலிஸ் நிலையத்தில் என்பதை உணர்ந்துகொண்டவர். 
எதிர்கால அரசியலைப்பற்றி திட்டம் தீட்டினார் .
இந்த குளறுபடிகளை அறிந்துகொண்ட தரப்பொன்று லண்டனில் வைத்து பிரதி அமைச்சுக்கான காய்நகர்தலை செய்ய, ஒரம் கட்டப்படுவதை அறிந்து இது காலத்தின் தேவை என்பதையும் அறிந்து கூட்டமைப்பில் இருந்து விலகினார் .
இதற்கு துரோகி பட்டம் வழங்கி எதையும் சாதிக்க முடியாது. இது எவ்விதத்திலும் துரோகமும் இல்லை என்பதே எனது முடிவு .
மாற்றம் தேவையெனில் மாறுவதில் தவறில்லை .
அன்புடன் அன்டனி
நன்றி முகநூல் 
0 commentaires :

Post a Comment