8/10/2019

கிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்

Résultat de recherche d'images pour "sumanthiran mp"*அன்று தொட்டு இன்று வரை கிழக்கில் உள்ள பொருத்தமற்ற பொம்மை தமிழ் அரசியல் வாதிகளால் வடக்கில் இருந்தும் கொழும்பில் இருந்தும் இங்கு வந்து அரசியல் நடாத்தி செல்லுகின்றார்கள்  சில கைக்கூலி அரசியல் வாதிகள் ...

*இங்கு உள்ள மக்கள் அன்று தொட்டு இன்று வரை அரசியலில் பூரணமான விழிப்படைந்து தான் காணப்படுகிறார்கள்!

*இங்கு உள்ள பொம்மை அரசியல்வாதிகள் தங்களின் பலவீனமான அரசியல் நடவடிக்கைகளை மூடி மறைக்க வெளியில் இருந்து சில பச்சோந்தி களை இறக்குமதி பண்ணுகிறார்கள் ...

*அரசுக்கு கூஜா தூக்கும் பண முதலைகள் இதுவரை சாதித்தது என்ன ...?

*நீண்ட காலமாக அரசியல் கைதிகள் என்ற கோதாவில் சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை பண்ண முடிந்ததா ...?

*வடகிழக்கில் இராணுவத்தால் பிடிக்க பட்ட தனியார் காணிகளை பூரணமாக விடுவிக்க முடிந்ததா ...?

* வலிந்து காணாமல் ஆக்க பட்ட மக்களுக்கு தீர்வினை பெற முடிந்ததா...?

* வடகிழக்கில் அதிகமாக காணப்படும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடிந்ததா ...?

* மத தலங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடிந்ததா...?

*வடகிழக்கில் காணப்படும் போரினால் பாத்திக்க பட்ட கணவனை இழந்த விதைவைகளுக்கு ஏதாவது புதிய திட்டங்களை ஏற்படுத்த முடிந்ததா...?

*வேலைவாய்ப்பு களை ஏற்படுத்த முடிந்ததா ...?

*கிழக்கில் தமிழர்கள் எதிர் கொள்ளும் அடிப்படை உரிமை சார் விடயங்களை தீர்க்க முடிந்ததா...?

* கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தை பண்ண முடிந்ததா...?

* முன்னாள் போராளிகள் பொருளாதாரத்தை உறுதிபடுத்த ஏதாவது   திட்டங்களை ஏற்படுத்த முடிந்ததா...?

* கடந்த நான்கு வருடங்களாக கூறி வருகின்ற"அரசியல் யாப்பு விடயத்தில் ஒரு படிக்கல்லை கூட தாண்ட முடிந்ததா...?

*தொல்பொருள் ஆராட்சியாளர்கள் என்ற பெயரில் தமிழரின் பூர்வீகம் அழிக்கப்  பட்டு நில வளங்கள் சூறையாடப்  படுவதை நிறுத்த முடிந்ததா ...?

* போர் குற்றம் தொடர்பில் ஏதாவது முன்னேற்றம் காண முடிந்ததா...?
இன்னும் பல உள்ளன....

"இவற்றில் எதையுமே  பண்ணாமல் ரணிலுக்கும்  அவரது அரசுக்கும்  முட்டு கொடுத்து தமிழர்களை விற்று பிழைப்பு நடத்தும் ... கேவலமான சுயநல வாதிகளே "

இன்று எங்களுக்கு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன தகுதி உள்ளது .?

இவர்களை இங்கு கூட்டி கொண்டு வரும் பதவி வெறி பிடித்த  முதுகெலும்பு அற்ற அடிமைகளை எதிர்காலத்தில் அரசியலில் இருந்தே நிரந்தரமாக அகற்ற வேண்டியது  மானமுள்ள  தமிழர்களின் கடமை!


0 commentaires :

Post a Comment