9/15/2019

ஒரு முதல்வராக விக்கினேஸ்வரனின் தோல்விகளை மறைக்கும் முயற்சியே எழுக தமிழ்

ஒரு முதல்வராக விக்கினேஸ்வரன் தன்   தோல்விகளை மறைக்கும் முயற்சியே 
எழுக தமிழ் 
Résultat de recherche d'images pour "ஒரு முதல்வராக விக்கினேஸ்வரனின்"
1 -முதற் கோணல் முற்றிலும் கோணல் 

ஆட்சிக்கு வரும் போதே அனைத்து உறுப்பினர்களையும் ஒருமித்து சத்தியப்பிரமாணம் செய்விக்க முடியாது இவரால் போனது. அதன்காரணமாக ஏழு எட்டு இடங்களில் ஒவ்வொருவரும் வேவ்வேறு முறைகளில் சத்திய பிரமாணம் செய்ய வழிவகுத்தன் மூலம்  சபை உறுப்பினர்களின் நன்மதிப்பை இழந்தார். 

2 சட்டத்தின் ஆட்சியை அவமதித்தார்.

பதவியேற்று சில மாதங்களுக்குள்ளாகவே தனது செயலாளருடன் முரண்பட்டு தனது அவரை தன் இஷ்டம் போல் பதவி விலக்கினார். அதனால் நீதி மன்று ஏறி மாபெரும் நீதிமான் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உருவானது.

3 செயற்திறனின்மை

மாகாண சபைக்குரிய மத்திய அரசின் நிதிகள் பல கோடிகளை பயன்படுத்தும் வல்லமையின்றி  அவற்றை திறைசேரியே மீளப்பெற வழிவகுத்தார்.

4 கடமையை உணரவில்லை 

இறுதி யுத்த அழிவுகளை அதாவது உயிரிழப்பு,அங்கவீனம்,காணாமல்போனமை போன்றவற்றையிட்டு ஒரு சரியானதும் பொறுப்பு வாய்ந்ததுமான கணக்கெடுப்பை  மாகாண சபையால் செய்து வெளியிடவில்லை. இதனால் என்ஜிஓக்களும் புலம்பெயர் புலி பினாமிகளும் அரசியல்வாதிகளும் அவரவருக்கு ஏற்றாற்போல் எண்ணிக்கைகளை ஆயிரம் பத்தாயிரம் லட்ஷம் என்று கூறி அனைத்து அழிவுகளின் மீதுமான  கரிசனையை மலினமாக்க வழிவகுத்தார்.

பொறுப்பற்ற தன்மை

யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் தேவைக்காக இரணைமடு குள அபிவிருத்தி திட்டத்தை  ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கோடிக்கணக்கான நிதியை திருப்பியனுப்பினார்.

6 சட்டவாக்க சபையின் மாண்பை  கேலிக்கிடமாக்கினார். 

கட்சி மேடைகளில் நிறைவேற்றப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட  ஆதரவு,கண்டன,எதிர்ப்பு தீர்மானங்களை நிறைவேற்றும் இடமாக சட்டவாக்க சபையை மாற்றி கேலிக்கிடமாக்கினார்.

7. மக்கள் விரோதம் 
மக்களின் குடிநீரை நஞ்சாக்கிய தனியார் கம்பெனியை பாதுகாத்தார்  
சுன்னாகம் தனியார் மின் உற்பத்தி கழிவுகளால் நஞ்சாகிய  குடிநீர் பிரச்னைக்கு பொய் தகவல் அறிக்கையை வழங்கி நீதி மன்றில் குற்றவாளியானார்.

8 இறைமையை அவமதித்தர்.
 இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள்பிரச்சனை,இந்திய மீனவர்களின் அத்து மீறல் போன்ற எத்தனையோ மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை புறந்தள்ளி தனது சொந்த நலன் கருதி பாலியல் குற்றவாகளான  ஆசாமி பிரேமானந்தா கும்பலை விடுதலை செய்யுமாறு இந்திய பிரதமருக்கு கடிதமெழுதியதன் ஊடாக தனக்கு வழங்கப்பட்ட  இறைமையை அவமதித்தர்.

9 அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முக்கிய கடமையிலிருந்து தவறினார்.
மாகாண சபைகளின் அதிகாரங்களை கையகப்படுத்தும் நியதி சட்டங்களை இயற்றி அவற்றை உச்ச நீதி மன்றங்கள் வரை கொண்டு சென்று வாதாடி 13 வைத்து சட்டத்திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முக்கிய கடமையிலிருந்து தவறினார்.

10 ஊழல் 
அனைத்துக்கும் மேலாக    ஊழல்கள் நிறைந்த மந்திரி சபையை நடாத்திய  முதல்வர் என்கின்ற அவப்பெயருடன் ஆட்சி  செய்தார்.
0 commentaires :

Post a Comment