9/13/2019

சிறைக்கு சென்ற டக்ளஸ்

L’image contient peut-être : 1 personne, sourit, plein airஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று சிறையிலிருக்கும்  கிழக்கின் முதல் முதல்வரான சந்திரகாந்தனை சந்தித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பழிவாங்கல் காரணமாக பிணையும் மறுக்கப்பட்டு விசாரணையும் இன்றி சிறையிலிருக்கும் பிள்ளையானை அண்மைக்காலமாக பல அரசியல் தலைவர்கள் சிறைக்கு சென்று பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரின் வாக்குப்பலத்தை சிதறடிக்கா வண்ணம் ஓரணியில் அனைத்து கட்சிகளும் திரளுவதன் அவசியம் குறித்து அலசப்பட்டதாக அறிய முடிகின்றது.

மூத்த தலைமுறை போராளிகளில் ஒருவரான டக்ளஸ் வெலிக்கடை படுகொலையிலிருந்து தப்பிய பின்னர் இதே மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment