Election 2018

10/11/2019

பயணிக்க வாருங்கள் படகு வந்து விட்டது.

L’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieur   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'படகு' பத்திரிகை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சம்பிரதாயபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது
கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற நிலைமையில் அவர் கைது செய்யப்பட்டதனை நான்கு வருடம்  நிறைவடைவதனை முன்னிட்டு
'கிழக்கின் ஜனநாயக குரலை ஒருபோதும் நசுக்க முடியாது' என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதித்தலைவர் கா. யோகவேள் கட்சியின் தவிசாளர் கிராம மட்ட அமைப்பாளர் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

10/10/2019

நாளை மட்டக்களப்பில் 'படகு'- வெளியீடு

 L’image contient peut-être : 7 personnes, personnes souriantes, texte
  நாளை முதல் மட்டக்களப்பில் 'படகு'என்னும் பெயரில் மாதாந்த  பத்திரிகை ஒன்று வெளிவருகின்றது.   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக வெளிவரவுள்ள இப்பத்திரிகை நாளைய தினம் அதாவது 11.10. 2019  அன்று கட்சியின்  வாவிக்கரை தலைமைக் காரியாலயத்தில்  சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.  
»»  (மேலும்)

இராவணனை கொன்ற மோடி

 Résultat de recherche d'images pour "இராவணன்"
 நேற்றைய தினம் (8.10.2019)  டில்லியில் விஜயதசமி கொண்டாட்டம் என்ற பெயரில் பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் ‘ராம் லீலா' என்று கூறி திராவிட வீரனான இராவணன் உருவம் தீயிட்டுக் கொளுத்தப் பட்டுள்ளது. மோடி அம்பு எய்தி கொளுத்தும் காட்சி
பிரதமர் நரேந்திர மோடியே அம்பு எய்தி இராவணனைக் கொல்லும் காட்சி தொலைக் காட்சிகளில் முக்கியமாக ஒளிபரப்பப்பட்டது.
»»  (மேலும்)

10/08/2019

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்புமட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தினர் நேற்று ஞாயிறன்று தமிழ் இலக்கிய அரசியல் சூழலின் பிரதான ஆளுமையான இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில் சுமார் நாற்பது பேர் கொண்ட இலக்கிய நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வு பற்றி அங்கு உரையாற்றிய  பேராசிரியர் யோகராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பல இளம் வாசகர்களும் இலக்கியவாதிகளும் கலந்துகொண்டு உரையாற்றியமையும்  விவாதங்களில் பங்கெடுத்தமையும் பெரும்பாராட்டுக்குரியதென்றுகுறிப்பிட்டார்.

அத்தோடு  எழுத்து,வாசிப்பு,உரையாடல்,சந்திப்பு என்று தொடர்ச்சியாக மட்டக்களப்பு தமிழகத்தின் சமூக,இலக்கிய, அரசியல், அசைவியக்கத்தை முன்நகர்த்திவரும் பெரியார் வாசகர் வட்டத்தினரை மெச்சியும் கருத்து தெரிவித்தார். 
»»  (மேலும்)

10/04/2019

வாழைச்சேனை தவிசாளரை அநாகரீகமாக பேசிய சைக்கிள்காரர்
கடந்த கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள்,மற்றும்  சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சபை உறுப்பினர் குணசேகரன் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

அவர் கோறளைப்பற்று பிரதேச சபை  தவிசாளரை அனாகரிகமான வார்த்தைகளால் விளித்தமையினை கண்டிக்கும் வகையில் சபையின் உறுப்பினர் திருமதி.பஞ்சாட்சரம் லெட்சுமி அவர்களினால் கண்டன பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த  அவசர பிரேரணைக்கமைவாக
இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை  உத்தரவு  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும்  இரு அமர்வுகளுக்கு குறித்த உறுப்பினருக்கான இத்தடை செல்லுபடியாகும். இவர் கஜேந்திரகுமார் தலைமையிலான சைக்கிள் கட்சியின் உறுப்பினராகும் என்பது குறிப்பிடத்தக்கது.»»  (மேலும்)