10/11/2019

பயணிக்க வாருங்கள் படகு வந்து விட்டது.

L’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieur   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'படகு' பத்திரிகை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சம்பிரதாயபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது
கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற நிலைமையில் அவர் கைது செய்யப்பட்டதனை நான்கு வருடம்  நிறைவடைவதனை முன்னிட்டு
'கிழக்கின் ஜனநாயக குரலை ஒருபோதும் நசுக்க முடியாது' என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதித்தலைவர் கா. யோகவேள் கட்சியின் தவிசாளர் கிராம மட்ட அமைப்பாளர் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment