10/04/2019

வாழைச்சேனை தவிசாளரை அநாகரீகமாக பேசிய சைக்கிள்காரர்
கடந்த கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள்,மற்றும்  சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சபை உறுப்பினர் குணசேகரன் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

அவர் கோறளைப்பற்று பிரதேச சபை  தவிசாளரை அனாகரிகமான வார்த்தைகளால் விளித்தமையினை கண்டிக்கும் வகையில் சபையின் உறுப்பினர் திருமதி.பஞ்சாட்சரம் லெட்சுமி அவர்களினால் கண்டன பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த  அவசர பிரேரணைக்கமைவாக
இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை  உத்தரவு  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும்  இரு அமர்வுகளுக்கு குறித்த உறுப்பினருக்கான இத்தடை செல்லுபடியாகும். இவர் கஜேந்திரகுமார் தலைமையிலான சைக்கிள் கட்சியின் உறுப்பினராகும் என்பது குறிப்பிடத்தக்கது.0 commentaires :

Post a Comment