10/08/2019

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்புமட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தினர் நேற்று ஞாயிறன்று தமிழ் இலக்கிய அரசியல் சூழலின் பிரதான ஆளுமையான இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களது எழுத்துலகம் மீதான பன்முக வாசிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில் சுமார் நாற்பது பேர் கொண்ட இலக்கிய நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வு பற்றி அங்கு உரையாற்றிய  பேராசிரியர் யோகராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பல இளம் வாசகர்களும் இலக்கியவாதிகளும் கலந்துகொண்டு உரையாற்றியமையும்  விவாதங்களில் பங்கெடுத்தமையும் பெரும்பாராட்டுக்குரியதென்றுகுறிப்பிட்டார்.

அத்தோடு  எழுத்து,வாசிப்பு,உரையாடல்,சந்திப்பு என்று தொடர்ச்சியாக மட்டக்களப்பு தமிழகத்தின் சமூக,இலக்கிய, அரசியல், அசைவியக்கத்தை முன்நகர்த்திவரும் பெரியார் வாசகர் வட்டத்தினரை மெச்சியும் கருத்து தெரிவித்தார். 

0 commentaires :

Post a Comment