10/22/2019

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும்

L’image contient peut-être : 12 personnes, dont Jaso Samithamby, personnes souriantes, personnes deboutஇன்று 22ந் திகதி கல்முனை நற்பட்டிமுனையில் உள்ள சுமங்கலி மண்டபத்தில் காலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயா ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கல்முனை பொதுஜன பெரமுனா கிளையின் தலைவர் இ.நடராசா அவர்கள் கலந்துகொண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் சம்பந்தமான ஆவணத்தை நாமல் ராஜபக்ஸ அவர்களிடம் கையளித்தார்.அதன் போது எடுத்துக் கொண்ட படம். கையளித்த ஆவணத்தை வாசித்த நாமல் தங்கள் ஆட்சி விரைவில் வரும். வந்தவுடன் உடனடியாக தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
வெற்றியின்பின் எமது முதலாவது செயற்பாடு இந்த விடயமாத்தான் இருக்கும் என தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment