11/19/2019

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல்

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். நமால் ராஜபக்‌ஷ
இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
»»  (மேலும்)

7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.இந்த பதவிப்பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவன்வெலி சாய மண்டபத்தில் இடம்பெற்றது.பதவியேற்ற பின்னர், உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பை பேணுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்தார்.இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு


»»  (மேலும்)

11/16/2019

அஞ்சலி- குமாரதேவன்

ஈழப்போர்களுக்கு பின்னான யாழ்ப்பாணத்தின் Living Treasure ஆக இருந்த குமாரதேவன் ஐயா சுகவீனம் காரணமாக காலமானார். L’image contient peut-être : 1 personne, texte
2009 ஈழப்போர் முடிவின்பின் தமிழ்பாசிச அழிவின்பின் யாழ்ப்பாணத்தில் தங்கள் இருபதுகளிலுள்ள ஒரு இளைஞர் கலை/இலக்கிய இயக்கம் முகிழ்த்தது. வாழக்கொடுத்துவைத்த இந்த தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும்(ஒரு சிலர் தவிர) உள்ள இப்படத்தில் நடுவில் இருப்பவர் இயக்கத்தின் "மூத்த உறுப்பினர்" #குமாரதேவன் #ஐயா.
இந்த டிசம்பர் மாதத்தில் தன் 60வது பிறந்தநாளைக்கொண்டாடவிருந்த காரைநகரானான குமாரதேவன் ஐயா ஒரு பிரமச்சாரி. வண்ணார்பண்ணையில் ஒரு சாப்பாட்டுக்கடையின் மனேச்சராக தன்வாழ்நாள் பூராக இருந்தவர் . தீவிரமான படிப்பாளி, வாசகர். சுதந்திர இலங்கையின் அரசியல் நிகழ்வுகளையும் ஈழப்போராட்ட வரலாற்றையும் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பவர்.
பாரிஸ் மாநகரத்திலுள்ளது போன்ற இலக்கிய "கபே" க்கள் இல்லாத யாழில் இவரது சாப்பாட்டுக்கடை
இக் கன்னி எழுத்தாளர்களின் ஓசி Literary Cafe.
Adios ஐயா.
நன்றிகள் முகநூல் - நட்சத்திரன் செவ்விந்தியன்
»»  (மேலும்)

11/15/2019

கிழக்கு மண் இழந்த ஒரு ராஜதந்திரி.

கிழக்கு மண் இழந்த ஒரு ராஜதந்திரி.L’image contient peut-être : 3 personnes, personnes debout, mariage et plein air

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரும் கிழக்கில் தமிழ் கட்சியை ஆரம்பித்துவைத்தவருமான அமரர் நந்தகோபன் (ரகு) அண்ணாவின் 11ம். ஆண்டு நினைவேந்தல் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
»»  (மேலும்)

சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம்- தோழர் அனுரகுமார திசாநாயக்க

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அனுரகுமார திசாநாயக்க தனது இறுதிநாள் பிரச்சாரத்தில் சஜித்தை கடுமையாக சாடியுள்ளார்.   Résultat de recherche d'images pour "தோழர் அனுரகுமார திசாநாயக்க""

சஜித் ஒரு ‘புஸ்வானம்’ எனவும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற அவரது தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.
கோத்தாபய ராஜபக்‌வை தோல்வியடைய வர கோரும் இவர்கள் கடந்த 2015 இல் அப்புஹாமியை தோற்கடிக்கவா வறம் கேட்கிறார்கள் என அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசும் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் அமைச்சராக இருந்து வாய் திறந்துள்ளாரா எனவும் ஊழல் அற்ற ஆட்சி அமைப்பதாக கூறும் அவரது மேடையில் மத்திய வங்கி கொள்ளையர்கள் உள்ளிட்ட ஊழல் வாதிகளே இருப்பதாக கூறினார்.
Kalmunaitoday

»»  (மேலும்)

11/11/2019

தேர்தல் தொடர்பாக பேராசிரியர் கோபிந்தராஜா அவர்களுடனான உரையாடல் கேள்விகள் சக்கரவர்த்திஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் கோபிந்தராஜா அவர்களுடனான உரையாடல்  பேட்டி காண்பவர் எழுத்தாளர் சக்கரவர்த்தி
»»  (மேலும்)
ஜனாதிபதி தேர்தலுக்கு எண்ணிச் சிலநாட்களே உள்ளன. தேர்தல் வாக்களிப்பு என்பது குறித்த ஐந்து வருடங்களுக்கு மீளப்பெற முடியாத ஆணையாகும். எனவே  நின்று நிதானமாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு உரிமையே வாக்குரிமையாகும். அந்தவகையில் எமது மக்களின் தெரிவானது ஒரு சரியான தலைமையை  நோக்கி எடுக்கப்படவேண்டும்.

இத்தகைய தீர்மானங்களை நோக்கி பலவிதமான பிரச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும்  மையமாக மட்டக்களப்பு கல்லடி மாறிவருவது ஒரு சுவாரசியமானதொன்றாகும். கிழக்கு மாகாணத்தின் இறுதி நேர அரசியல் மாற்றங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பதில் இந்த தேர்தலில் கல்லடியில் இடம் பெற்றுவரும்  கூட்டங்கள் பெரும் பங்கு வகிக்கப்போகின்றன.

இந்த கல்லடியானது பலவிடயங்களில் மட்டக்களப்பு தமிழகத்தாரின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த இடமாகும்.எமது அடையாளமான பாடும் மீன், கல்லடி பாலம்,இராமகிருஷ்ண மிஷன், சாண்டோ சங்கரதாஸ்,  மாமேதை விபுலானந்தரின் கல்லறை என்று  சொல்லிக்கொண்டே போகலாம்.

அரசியல் ரீதியாகவும் இந்த கல்லடிக்கு ஒரு வரலாறு உண்டு. கிழக்கு போராளிகள் ஆயுதங்களை கைவிட்டு ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்தவேளையில் உருவாகிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட் சியானதும் தனது முதலாவது தேசிய மாநாட்டை இந்த கல்லடியில்தான் நடாத்தியிருந்தது. இதை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் அந்த மாநாட்டு  தீர்மானம் கல்லடி தீர்மானம் என்றே அழைக்கப்படுகின்றது.

அந்த தீர்மானத்தின் முதலாவது பிரகடனமானது வடக்கு கிழக்கு பிரதேசங்களை அரசியல் நிருவாக ரீதியாக ஒரே கொள்கையின் கீழ் நிர்வகிக்க முயலுகின்ற  கோஷங்கள் "கிழக்கு மக்களின் பல்லின சூழலுக்கும்,சுயவிருப்பத்துக்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும்   எதிரானது.(கல்லடி தீர்மானம் 12/032012)என்கின்றது.

சுமார் ஏழுவருடங்களுக்கு முன்னர் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  போது வழமைபோலவே யாழ்ப்பாண-மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்தில் செயற்படுகின்ற ஊடகங்கள் அவற்றை பெரிது படுத்தவில்லை. ஆனால் அதன் தாற்பரியங்கள் இன்று அதே கல்லடி மேடைகளில் அரங்கேற்றப்படுகின்றன என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகும்.

 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஒரு ஆயுத பிரிவாக இருந்து அரசியலில் நுழைந்தபோது  அது ஒரு ஜனநாயக கட்சியாக

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது  12/03/2012 
»»  (மேலும்)

கோட்டபாயவை ஆதரித்து வாகரையில் பிரம்மாண்டமான கூட்டம்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் தலைமையில் 10.11.2019 வாகரைப் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்த இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் இடத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.L’image contient peut-être : 3 personnes, foule et plein airL’image contient peut-être : une personne ou plus, foule et plein air
»»  (மேலும்)

11/10/2019

வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு - சர்ச்சையில் சிக்கிய மைத்திரிபால சிறிசேன

சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 Résultat de recherche d'images pour "president of sri lanka""
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், கொலை குற்றவாளியொருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.
இவோன் ஜோன்சன் என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
»»  (மேலும்)

11/09/2019

பெருகிவரும் பிள்ளையான் அலை- விலைபேசிய பிரதமர்


 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பிரசாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.Résultat de recherche d'images pour "சிவநேசத்துரை சந்திரகாந்தன்""

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எமது கட்சியின் தலைவரை சிறையில் சந்தித்து பேசுவதற்கு சென்றவேளை அரசியல் தொடர்பில் பேசுவதாயின் செயலாளருடனும் செயற்குழுவுடனும் பேசுங்கள் என்று கூறியிருக்கின்றார்.
மூன்று தடவைக்குமேல் எமது அலுவலகத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் என்னுடன் பேரம்பேசலில் ஈடுபட்டார். இரு நாட்களுக்குள் தலைவரை விடுதலை செய்வதாகவும் மேலும் பல வரப்பிரசாதங்களை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.  
4 வருடங்களுக்கு மேலாக தலைவரை விடுதலை செய்யாதவர்கள், இன்று கிழக்கிலே மக்கள் செல்வாக்குள்ள ஒருவராக எமது தலைவர் இருப்பதை உணர்ந்தவர்கள் எம்மை நோக்கி வருகின்றனர். மேடை மேடையாக தலைவரை விமர்சிப்பவர்கள் திரைமறைவில் பேரம் பேசுகின்றனர். எம்மை நம்பியுள்ள மக்களை நாம் ஒருபோதும் அடகு வைக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.  

»»  (மேலும்)

நாளை வருகின்றார் பசில் இராஜபக்ச

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள நாளை வருகின்றார் பசில் இராஜபக்ச அவர்கள் .
செய்தோம் செய்விப்போம்
நான்கு வருடமாக முடங்கிக்கிடக்கும் அபிவிருத்தி பணிகள் மீண்டும் தொடங்கும் மிடுக்காக ஆரம்பிக்கப்பட கோத்தபாயாவை ஆதரிப்போம். L’image contient peut-être : 4 personnes, personnes souriantes
»»  (மேலும்)

11/08/2019

ரணிலை திருப்பியனுப்பிய சித்தாண்டி முருகன்


மட்டக்களப்புக்கு வந்த ரணில் ஆங்கங்கே நடத்திய  கூட்டங்களில் சில நூறு   பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். செங்கலடியில் தியேட்டர் மோகன் நடத்திய கூட்டம் மக்களின்றி வெறிச்சோடி கிடந்தது. 
ஏறாவூரில் முஸ்லிம்களிடையே பேசும்போது அடுத்த முதலமைச்சர் ஒரு முஸ்லீம் அல்லது சிங்களவர்தான் என உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சித்தாண்டி ஆலையை முன்றலில் நடத்தப்படவிருந்த கூட்டத்துக்கு ரணில் வந்து சேர்ந்தபோது  அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டிருந்தது. இறுதியாக ஆலயத்துக்குள் சென்று வழிபாடு செய்ய முனைந்த பிரதமர் ரணிலுக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஆலய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. 
ரணில் கல்வியமைச்சராக இருந்த காலத்தில்தான் சித்தாண்டியில் பல  மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு எங்கும் வீசுகின்ற பிள்ளையான் அலையால் சித்தாண்டியில் மனமுடைந்து திரும்பிய ரணில்   தனது வாகனத்தை சற்று மெதுவாக நகரச்செய்து  சித்தாண்டி நுழைவு வாசலில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான பிள்ளையானின் கட்டவுட்டைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு சென்றார்.  அவரை திருப்பியனுப்பியது சித்தாண்டி முருகன் என கிராமத்து முதியவர்கள் கருத்து  தெரிவிக்கின்றனர். »»  (மேலும்)

எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் .செயளாலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உறுதி

L’image contient peut-être : une personne ou plus, foule, stade et plein air
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும் தருணம் தற்போது கிட்டியுள்ளது. அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வின் வெற்றியில் பங்காளர்களாக இருப்பதுடன் அந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நான் கூறும் வழிமுறையை நோக்கி நீங்கள் அணிதுரண்டு வருவீர்களானால் அடுத்த ஐந்து வருடங்களில் நான் நீங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைளுக்கும் முடியுமானவரை தீர்வுகண்டு தருவேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகா காணி உரிம பிரச்சினை இப்பகுதி மக்களின் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது நிரந்தர வீடு இன்மை வாழ்வாதார பொரச்சினை என பல தேவைப்படுகளுடன் காணப்படுகின்ரனர்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்திக்காதிருப்பது அவர்களது சுயனலமாகவே இருக்கின்றது.
ஆனால் நாம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே முதன்மை நோக்காக கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எமது இந்த பணிகள் மேலும் வலுப்பெறுவதற்கு எமக்கு அதிகளவான அரசியல் அதிகாரம் தேவையாக இருக்கின்றது.
இந்த பலத்தை மக்கள் இம்முறை எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நீங்கள் எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

»»  (மேலும்)

11/05/2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்தும் ஒரு கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்தும் ஒரு கட்சியாக மாற்றமடைந்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார். கருணா அம்மான்
தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய போதிலும், தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு சக்தியாகவே அந்த கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் இன்று வலுவிழந்துள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறுகின்றார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கோ அல்லது சஜித் பிரேமதாஸவிற்கோ ஆதரவை வழங்குங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதாக இருந்தாலும், கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள செல்வாக்கும் குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்ததை கூறிய கருணா அம்மான், அவ்வாறென்றால், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏன் ஆதரவளிக்க மறுப்பு தெரிவிக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)