11/01/2019

.பச்சை பொய் சொல்லும் சஜித்தின் விஞ்ஞாபனம்

அம்மாடியோவ்.. 
-கருணாகரன் சிவராஜா- Résultat de recherche d'images pour "sajith premadasa""
சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் படித்தால்...
இந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் இலங்கையில் மகோன்னத மாற்றங்கள் (அதிரடியாக) நடக்கும் என்று (கதை விடப்பட்டுள்ளது) கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படுகின்றவற்றில் 99 வீதமானவையும் அரசாங்கத்தினால் மட்டுமே செயற்படுத்த முடிந்தவை. இவற்றைச் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை.
அப்படி ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டென்றால், அது நிறைவேற்று அதிகார முறைமையைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சியாகவே இருக்கும். அப்படி இருந்தால் கூட இவ்வளவையும் செய்ய முடியாது.
ஆகவே அவ்வளவும் கற்பனை. என்பதால்தான் இப்படித் தாராளமாக அள்ளிப் போட்டிருக்கிறார்கள்.
படிக்கவே அலுப்பாக இருக்கிறது. அதைவிடச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது. ஆழமாகச் சிந்தித்தால் கோபம்தான் வரும். நமக்கும் கோபம்தான் வருகிறது.
ஏனெனில் சனங்களை மடையர்களாக நினைத்ததன் வெளிப்பாடே இதுவாகும். எதை எப்படிச் சொன்னாலும் இலங்கைச் சனங்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையே சஜித்தை இப்படி எழுத வைத்துள்ளது. இவ்வளவையும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து கொண்டே இதைச் செய்யத் துணிந்தது என்பது வெற்றி பெற்ற பின்னரும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கையன்றி வேறென்ன?
சஜித் ஜனாபதியாகவும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற அதிகாரத்திலும் அமர்ந்தால் நிலைமை என்ன?
அல்லது சஜித்தே ஜனாதிபதியாகவும் ஐ.தே.கவே பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் இவ்வளவையும் நிறைவேற்ற முடியுமா?
அப்படி நிறைவேற்ற முடியுமாக இருந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகாரத்திலிருக்கும் ஆட்சியிலிருக்கும் ஐ.தே.க அரசாங்கத்தினால் இவற்றில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாமல் போனதேன்? இருப்பதேன்?
இவ்வளவுக்கும் ஐ.தே.கவின் துணைத்தலைவர் சஜித்.
முக்கியமான அமைச்சராக இருப்பவர்.
முன்னாள் ஜனாதிபதியின் மகன்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்ற அரசாங்கம் இது.
இப்படியிருந்தும் ஏன் எதையும் செய்யவில்லை சஜித்? (ஐ.தே.க. அரசாங்கம்?)
ஆகவே இதெல்லாம் “பச்சை”ப் புருடாவன்றி வேறென்ன?
இதன் அர்த்தம் கோட்டபாய ஏதோ சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பதல்ல.
தேர்தல் வெற்றியைப் பெறுவதற்காக என்னமாதிரியெல்லாம் செயற்படுகிறார்கள்...
*நன்றி முகநூல் 


0 commentaires :

Post a Comment