11/08/2019

ரணிலை திருப்பியனுப்பிய சித்தாண்டி முருகன்


மட்டக்களப்புக்கு வந்த ரணில் ஆங்கங்கே நடத்திய  கூட்டங்களில் சில நூறு   பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். செங்கலடியில் தியேட்டர் மோகன் நடத்திய கூட்டம் மக்களின்றி வெறிச்சோடி கிடந்தது. 
ஏறாவூரில் முஸ்லிம்களிடையே பேசும்போது அடுத்த முதலமைச்சர் ஒரு முஸ்லீம் அல்லது சிங்களவர்தான் என உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சித்தாண்டி ஆலையை முன்றலில் நடத்தப்படவிருந்த கூட்டத்துக்கு ரணில் வந்து சேர்ந்தபோது  அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டிருந்தது. இறுதியாக ஆலயத்துக்குள் சென்று வழிபாடு செய்ய முனைந்த பிரதமர் ரணிலுக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஆலய கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. 
ரணில் கல்வியமைச்சராக இருந்த காலத்தில்தான் சித்தாண்டியில் பல  மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு எங்கும் வீசுகின்ற பிள்ளையான் அலையால் சித்தாண்டியில் மனமுடைந்து திரும்பிய ரணில்   தனது வாகனத்தை சற்று மெதுவாக நகரச்செய்து  சித்தாண்டி நுழைவு வாசலில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான பிள்ளையானின் கட்டவுட்டைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு சென்றார்.  அவரை திருப்பியனுப்பியது சித்தாண்டி முருகன் என கிராமத்து முதியவர்கள் கருத்து  தெரிவிக்கின்றனர். 0 commentaires :

Post a Comment