6/15/2020

மீண்டும் முழு ஊரடங்கு

சென்னையில் கொரோனா பரவல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 19ஆம் தேதி அதிகாலை 00.00 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சென்னை, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment